பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 5 , அமெரிக்கப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி - புரட்சியின் போக்கினை ஒப்பிடுதல் - வினா & விடை / 10th SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 5 , QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

பாடம் :  5

அமெரிக்கப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி -

புரட்சியின் போக்கினை ஒப்பிடுதல்

கற்றல் விளைவுகள்

* பிரெஞ்சு புரட்சி மற்றும் அமெரிக்கப் புரட்சி போன்ற உலகின் முக்கியமான புரட்சிகளுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் போக்கை ஒப்பிடுதல்.

கற்றல் நோக்கங்கள்

* அமெரிக்கப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சியின் நிகழ்வுகளை ஒப்பிட்டு விவரித்தல்.

ஆயத்தப்படுத்துதல்

* 1857ஆம் ஆண்டுபுரட்சியாருக்கு எதிராக நடைபெற்றது. அதற்குகாரணமாக நீஎதைகருதுகிறாய்?

* உனக்குத் தெரிந்த மன்னராட்சி நடைபெறக்கூடிய நாடுகளின் பெயர்களைக் கூறு?

* இந்தியாவின் பின்பற்றக்கூடிய ஆட்சி முறை எது?

* மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து மன்னராட்சியில் மக்களின் நிலையையும்

மக்களாட்சியில் மக்களின் நிலையையும் விவாதிக்க வைத்து அறியச் செய்தல்.

பாடஅறிமுகம்

* அமெரிக்கப் புரட்சியிலும், பிரெஞ்சுப் புரட்சியிலும் நடைபெற்ற நிகழ்வுகளின் போக்கினை உதாரணங்களுடனும் அட்டவணைப்படுத்தியும் ஒப்பிட்டு விளக்குதல்.

ஆசிரியர் செயல்பாடு

1. அமெரிக்கப்புரட்சியில் 'பாஸ்டன் தேநீர் விருந்து' நிகழ்வினையும் பிரெஞ்சுப்புரட்சியில் 'பாஸ்டின் சிறை வீழ்ச்சி' நிகழ்வினையும் ஒப்பிட்டு இந்நிகழ்வுகள் புரட்சிகளின் போக்கிற்கு வழிகோலியது என்பதை விளக்குதல்.

2. அமெரிக்கப் புரட்சியின் கண்டங்கள் மாநாடுகளுக்கும், பிரஞ்சுப் புரட்சியின் தேசிய சட்ட மன்றம் நிகழ்வுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை விளக்குதல்.

3. சுதந்திரப் பிரகடனம் மற்றும் மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பிரகடனம் இவ்விரு நிகழ்வுகள் மூலம் ஏற்பட்ட மாற்றத்தையும், முக்கியத்துவத்தையும் விளக்கமளித்தல்.

***************    ************   *************

                       மதிப்பீடு      Greentamil.in


1. தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல்

அ) இயல்பறிவு

ஆ) மனித உரிமைகள்

இ) உரிமைகள் மசோதா

ஈ) அடிமைத்தனத்தை ஒழித்தல்

விடை : அ ) இயல்பறிவு 

2. பங்கர் குன்றுப்போர் நடைபெற்ற ஆண்டு ----------

விடை :  1775


3. பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர் -------

விடை : மிரபு 

4. சுதந்திரத்திற்கும், பகுத்தறிவிற்கும் பெரும்விழா நடத்தியதால் கொல்லப்பட்டவர் ----------

விடை  : ஹெர்பர்ட்

5. சரியான கூற்றைக் கண்டுபிடி

i) அமெரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாட்டுப் போராகவும் அமைந்தது.

ii) ஆங்கிலேயப் படைகள் பார்க் டவுனில் வெற்றி பெற்றன.

iii) வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரைப் பிரெஞ்சு பிரபுகள் ஆதரித்தனர்.

iv) ஆங்கிலேய நாடாளுமன்றம் காகித்த்தின் மீதான வரி நீங்கலாக ஏனைய பொருட்களின்
மீதான டவுன்ஷெண்ட் சட்டங்களை ரத்து செய்தது.

அ) (i) மற்றும் (ii) சரியானவை
ஆ) (ii) சரி
இ) (iv) சரி
ஈ) (i) மற்றும் {iv) சரியானவை

விடை :  அ) (i) மற்றும் (ii) சரியானவை
.
6. கூற்று : ஆங்கிலேயப் பொருள்களைப் பாஸ்டன் வணிகர்கள் புறக்கணித்தனர்.

காரணம் : ஆங்கிலேய நிதி அமைச்சர், அமெரிக்க காலனிகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிய வரி அறிமுகப்படுத்தினார்.

அ) கூற்று சரி. காரணம் சரியான விளக்கம் அல்ல
ஆ) கூற்று தவறு. காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

விடை : இ ) கூற்றும் காரணமும் சரி 

7. பிரான்சின் மூன்று வர்க்கங்களின் அமைப்பு பற்றிக் கூறு.

முதல் வர்க்கம் : மதகுருமார்கள்

இரண்டாவது வர்க்கம் : பிரபுக்கள்

மூன்றாவது வர்க்கம் : வழக்கறிஞர்கள் , பணம் படைத்த வர்த்தகர்கள் , வங்கியாளர்கள் , வணிகர்கள் , நிலவுடைமையாளர்கள்.


8. பாஸ்டைல் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?

         அரசரால் வெளியேற்றப் சாமானியர்களின் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடினர். அவர்களை கலைக்க தனது படை வீரர்களுக்கு கட்டளையிட்டார் . அவர்கள் பணிய மறுத்தனர்.மக்களை சுடுவதற்காக அரசர் அயல் நாட்டு படையினரை அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.இதையறிந்த மக்கள் சிறையை தகர்த்தனர்.


9. அமெரிக்க சுதந்திரப் போரினையும், இந்திய சுதந்திர இயக்கத்தினையும் ஒப்பிட்டு உனது கருத்தினைக் கூறு.

       மாணவர்கள் தங்களது சொந்தக் கருத்தை எழுதவும்.

***************    ***************    ************
விடைத்தயாரிப்பு       Greentamil.in

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியை , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

***************    ****************    ********

Post a Comment

1 Comments