பத்தாம் வகுப்பு - அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - பாடம் 5 , ஒளியியல் - வினா & விடை / 10th SCIENCE - REFRESHER COURSE MODULE - 5 , QUESTION & ANSWER

 


பத்தாம் வகுப்பு  - அறிவியல் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

பாடம் : 5 , ஒளியியல்

மதிப்பீடு:

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.

1. வெளிப்புறமாக எதிரொளிக்கும் பரப்பை உடைய வளைவு ஆடி

(அ) குவி ஆடி         (ஆ)குழி ஆடி 

இ) சமதள ஆடி

விடை :  அ ) குவி ஆடி 

2. வாகனங்களில் பின்புறக் காட்சி ஆடியாகப் பயன்படுத்தப்படும் ஆடி

(அ) குழி ஆடி

(ஆ)குவி ஆடி (இ) சமதள ஆடி

விடை :  ஆ ) குவிஆடி 

3. சூரிய சமையற்கலனில் பயன்படுத்தப்படும் ஆடி

(அ) குவி ஆடி  

(ஆ) குழி ஆடி      (இ) சமதள ஆடி

விடை : ஆ ) குழி ஆடி 

4. பொருளை  --------  ல் வைக்கும்போது பொருளின் அளவேயான பிம்பத்தின் அளவு தெரியும்.

(அ)  C      ஆ)F

(இ)  ஈறிலாத் தொலைவு

விடை : அ ) C 

5. சாலைகளின் மிகவும் குறுகிய மற்றும் நுட்பமான வளைவுகளில் பயன்படுத்தப்படும் ஆடிகள்

(அ) சமதள ஆடிகள்       (ஆ) குவி ஆடிகள் 

(இ)குழி ஆடிகள்

விடை : ஆ ) குவி ஆடிகள்

6. கலைடாஸ்கோப் --------   தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

(அ) ஒழுங்கான எதிரொளிப்பு

(ஆ) ஒழுங்கற்ற எதிரொளிப்பு

(இ) பன்முக எதிரொளிப்பு

விடை :  இ ) பன்முக எதிரொளிப்பு 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. குவி ஆடிகளால் உருவாக்கப்படும் பிம்பம் எப்பொழுதும் பொருளை விட அளவில் -------

விடை :  சிறியது.

2. ஆடி மையத்திற்கும், முதன்மைக் குவியத்திற்கும் இடைப்பட்டத் தொலைவு ----- எனப்படும்.

விடை :  குவிய தொலைவு 

3. குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் தன்மை -------    --------   -------

விடை :  சிறிய , நேரான , மாயபிம்பம் 

4. இணையாக உள்ள இரண்டு சமதள ஆடிகளுக்கிடையே உள்ள பொருள் உருவாக்கும் பிம்பங்களின் எண்ணிக்கை ------

விடை :  முடிவில்லாதது

5. கண் மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் ஆடி -------

விடை :  குழி ஆடி 

III. சரியா? தவறா? கூறு.

1. குவியாடி உருவாக்கப்பட்ட கோளத்தின் மையம் ஆடி மையம் ஆகும்.(சரி/தவறு)

விடை :  தவறு 

IV. சுருக்கமான விடையளி.

1. சமதள ஆடிகளுக்கிடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையைக்காண உதவும் சூத்திரம் யாது?

N = 360 / Q = 1 

Q = இரு சமதள ஆடிகளுக்கு இடைப்பட்ட கோணம்.


2. குழியாடி,குவியாடி - வேறுபடுத்துக.


3. எதிரொளிப்பின் வகைகள் யாவை?

 * ஒழுங்கான எதிரொளிப்பு 

*  ஒழுங்கற்ற எதிரொளிப்பு 

* பன்முக எதிரொளிப்பு 

*************    ***********   ***************

விடைத்தயாரிப்பு : 

திரு.S.பிரேம் குமார் , 

பட்டதாரி அறிவியல் ஆசிரியர் , 

அப்பர் மே.நி.பள்ளி , கருப்பாயூரணி , மதுரை.

***************     *************    ************




Post a Comment

0 Comments