பத்தாம் வகுப்பு - அறிவியல்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு : 4
காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
மதிப்பீடு: வினாக்களும் விடைகளும்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.
1. பின்வருவனவற்றுள் காந்தத்தால் கவரப்படும் பொருள் --------
அ) மரப்பொருள்கள்
ஆ) ஏதேனும் ஓர் உலோகம்
இ) தாமிரம்
ஈ) இரும்பு மற்றும் எஃகு
விடை : ஈ ) இரும்பு மற்றும் எஃகு
2. கீழ்க்காணும் ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக் காட்டாகும்.
அ)மின்காந்தம்
ஆ) துப்பாக்கி உலோகம்
இ) தேனிரும்பு
ஈ) நியோடிமியம்
விடை : ஈ ) நியோடிமியம்
3. ஒரு சட்டக் காந்தத்தின் தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும் --------
அ) ஒன்றையொன்று கவரும்
ஆ) ஒன்றையொன்று விலக்கும்
இ) ஒன்றையொன்று கவரவோ, விலக்கவோ செய்யாது
ஈ)மேற்சொன்னவற்றுள் எதுவுமில்லை
விடை : அ ) ஒன்றையொன்று கவரும்
4. கற்பனையான புவிக் காந்தப்புலம் எந்த வடிவத்தினைப் போன்றது?
அ) வடிவகாந்தம்
ஆ)மின்னோட்டத்தைத் தாங்கும் நேர்க்கடத்தி
இ) வரிசுருள்
ஈ)சட்டக் காந்தம்
விடை : ஈ ) சட்டக்காந்தம்
5. MRI என்பதன் விரிவாக்கம் ---------
அ ) Magnetic Resonance Imaging
ஆ) Magnetic Running Image
இ ) Magnetic Radio Imaging
ஈ) Magnetic Radar Imaging
விடை : அ ) Magnetic Resonance Imaging
6. காந்த ஊசி --------- பயன்படுகிறது.
அ) காந்தவிசைக் கோடுகளை வரைய
ஆ) காந்தப்புலத்தின் திசையை அறிய
இ) கடல் பயணத்திற்கு
ஈ) மேற்காண் அனைத்தும்
விடை : ஈ ) மேற்காண் அனைத்தும்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. காந்தத்தின் வலிமை அதன் முனைகளில் ---------
விடை : பெருமம்
2. ஒரு காந்தம் ------- முனைகளைக் கொண்டது.
விடை : இரு
3. மின்சார உற்பத்திக்குப் பயன்படும் காந்தங்கள் --------
விடை : டைனமோக்கள்
4. கனமான இரும்புப் பொருள்களை உயர்த்தப் பயன்படுவது ---------
விடை : மின்காந்தம்
5. தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் -------- முனைகளை நோக்கி இருக்கும்.
விடை : புவியின் வடதென்
6. காந்தத்தின் ஓரின முனைகள் ஒன்றையொன்று விலக்கும். வேறின
முனைகள் -------
விடை : ஒன்றையொன்று ஈர்க்கும்
7. காந்தத்தின் முனைப் பகுதிகள் ---------
பண்பினை உடையவை.
விடை : அதிக அளவு கவரும்
8. டைனமோக்கள் மூலம் ------- உற்பத்தி செய்ய காந்தங்கள் பயன்படுகின்றன.
விடை : மின்னோட்டம்
9. கணினியில் உள்ள சேமிக்கும் சாதனங்களான நிலைவட்டுக்களில் காந்தங்கள் பயன்படுகின்றன. அவை -----
அட்டைகளிலும் பயன்படுகின்றன.
விடை : கடன்
III.பொருத்துக
அ) மேக்னடைட் - இயற்கை காந்தம்
ஆ) ஒரு சிறு சுழலும் காந்தம் - காந்த ஊசிப்பெட்டி
இ) கோபால்ட் - ஃபொ:ரோ காந்தப் பொருள்கள்
ஈ) வளை பரப்புகள் - காந்தவிசைக் கோடுகள்
உ) பிஸ்மத் - டயா காந்தப் பொருள்கள்
IV. ஒரு மாறுதிசை மின்னோட்ட (AC) மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்கள் குறிக்கவும் .
NS - நிலைக்காந்தம்
ABCD - செவ்வக வடிவக் கம்பிச்சுருள்
B1 B2 - நழுவு வளையங்கள்
S1 S2 - நழுவு வளையங்கள்
************** ************ *************
விடைத்தயாரிப்பு :
திரு.S.பிரேம் குமார் ,
பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ,
அப்பர் மே.நி.பள்ளி , கருப்பாயூரணி , மதுரை.
*************** ************* ************
0 Comments