இயற்பியல் - ஃபாரடே -வின் இனிய நினைவுகள் .
மைக்கேல் ஃபாரடே பிறந்த தினம்
22 • 9 • 2021
உலகை ஒளியால் நிறைத்த ஒளி தீபம், அறிவியல் வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலார். அறிவியலில் புதுமைகள் பல படைத்திட்ட மைக்கேல் ஃபாரடே 1791 - ஆம் ஆண்டு செப்டம்பர் 22 - ம் நாள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள " நியூவிங்க்டன் பட்ஸ் " என்னுமிடத்தில் ஜேம்ஸ் மற்றும் மார்க்ரெட் ஃபாரடே இணையரின் மகனாகப் பிறந்தார்.
இவரது தந்தை ஒரு கொல்லர். எனவே ஏழ்மை நிலை இவரது ஆராயும் திறமைக்குத் தடையாக இருந்தது. அதனாலேயே ஃபாரடே தனது கல்வியை தானே தேடிக்கொள்ள வேண்டிய சூழலில் இருந்தார்.
படிக்கும் வாய்ப்பு :
ஃபாரடே தனது 14 - ம் வயதில் புத்தகம் கட்டுபவரும், விற்பனையாளருமாகிய ஜார்ஜ் ரீபோ என்பவருக்குக் கீழ் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார். அவருடன் இருந்த ஏழு வருடங்களில் பல வகையான புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றார் . இவற்றின் மூலம் அறிவியலிலும், மின்னியலிலும் ஆர்வம் கொண்டார். மைக்கேல் ஃபாரடே உலகம் பற்றி மேலும் அறிய விரும்பினார். அது மட்டுமன்றி புத்தக மறுசீரமைப்பு , தினசரி வேலைக்குப் பிறகு கிடைக்கும் நேரமெல்லாம் புத்தக வாசிப்பில் கழித்தார்.
இதன் விளைவு அறிவியலில் ஆராயும் நுணுக்கம் துளிர்விட தொடங்கின. குறிப்பாக இரண்டு புத்தகங்கள் இவர் உயர காரணமாக விளங்கின .
1 • " என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா " என்னும் இவை மின்சாரம் மற்றும் பல செய்திகளை அறிந்திட வகைசெய்தது.
2 • " ரசாயனத்தின் உரையாடல் " ஒரு அணுக்கதை என்னும் புத்தகமும் படித்தார் . இவை சுமார் 600 - பக்கங்களைக் கொண்ட வையாகும்.
ஹம்பரி டேவியின் உதவியாளராக..
புகழ்பெற்ற வேதியியல், இயற்பியலாளருமாகிய சர் . ஹம்பரி டேவியின் விரிவுரைகளைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. ஹம்பரி டேவியின் அறிவியல் உரைதனில் , தானும் உறைந்து , உற்சாக ஊற்றாகி , உவகை கொண்டு அவரது சொற்பொழிவை யெல்லாம் தொகுத்து , கையால் எழுதிய சிறு புத்தகமாக ஹம்பரி டேவிக்கு அனுப்பினார். அந்த அபரிமிதமான புத்தகத்தைக் கண்ட டேவி வியந்து பாராட்டினார் . ஹம்பரி டேவி ஒரு வேதியில் சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் கண் பார்வையை இழந்தார்.பின் ஃபாரடே வை தன் உதவியாளராக ஆக்கினார். ஃபாரடே இராயல் சொசைட்டியின் " மகத்தான பணியை ஏற்றுக் கொண்டார்.
ஐரோப்பாவின் அரிய பொக்கிஷம் :
ஐரோப்பாவை அணிசெய்த அரிய பொக்கிஷமாகிய ஃபாரடே அவர்கள் 1813-ல் தொடங்கி 1815 - வரையிலான காலப் பகுதியின் நீண்ட பயணத்தில் டேவியின் அறிவியல் உதவியாளராகப் பங்கு கொண்டார். எனினும் டேவியின் மனைவியாகிய ஜேன் அப்ரீஸ் என்பவர் ஃபாரடே வை சமமாக எண்ண மறுத்து , வேலை செய்யும் தொழிலாளியாகவே மதித்து வந்தார் . இதனால் பெரும் துயரடைந்த ஃபாரடே , தான் பணியாற்றிய அறிவியல் ஆராய்ச்சித் துறையிலிருந்து முழுமையாக விலகிக் கொள்ள தீர்மானித்தார். எனினும் கடின உழைப்பு , ஆர்வம் மேலோங்க மிக விரைவிலேயே டேவியைக் காட்டிலும், புகழ்பெற்று விளங்கினார்.
மின்சக்தி கண்டுபிடிப்பு :
ஃபாரடே காப்பிடப்பட்ட தாமிரக் கம்பிச் சுருளின் இடையே காந்தத்தை முன்னும் பின்னும் நகர்த்தி , மின் உற்பத்தி ஆவதைக் கண்டுபிடித்து வெளியிட்டார் . இதன் அடிப்படையிலேயே பின்னாளில் ஜெனரேட்டர்கள் , டிரான்ஸ்பார்மர்கள் போன்றவை உருவாக்கப்பட்டன. முதன் முதலில் மின்சார டைனமோவைக் கண்டுபிடித்தவர் ஃபாரடே . ஃபாரடே - வின் நினைவாகவே மின்னேற்ப்புத் திறனை " பாரட் " என்னும் அலகால் அளக்கின்றோம்.
மின் காந்தத் தூண்டல் : ( Electromagnetic induction )
மின் காந்தத் தூண்டல் என்பது ஒரு கடத்தி , மாறும் காந்தபுயத்திற்கு ஆட்படும் போது , அக்கடத்தியின் இரு முனைகளுக் கிடையே மின்னழுத்தம் உண்டாகும் நிகழ்வாகும் .
பன்சன் சுடர் :
ஆய்வகங்களில் பொருட்களை சூடாக்குவதற்கு பயன்படும் அடுப்பு " பன்சன் சுடர் அடுப்பின் " ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தார் ஃபாரடே.
எரிவாயு - திரவமாக்கல் - குளிர்வித்தல் :
ஜான் டால்டன் அவர்கள், அனைத்து வாயுக்களும் குறைந்த வெப்ப நிலையில் அல்லது அதிக அழுத்தத்தில் திரவமாக மாற்ற முடியும் எனக் கருதியதை, இயற்பியல் ஃபாரடே அதை தனது அனுபவத்தில் நிருபித்துக் காட்டினார். இதன் மூலம் திரவ அமோனியா மற்றும் குளோரினை உருவாக்கினார். திரவ அமோனியா இன்றும் Maykl Foraday வழியே ஆவியாதல் , குளிர்ச்சி யடையச் செய்யப்படுகிறது.
பென்சீன் கண்டு பிடிப்பு :
பென்சீன் வேதியலின் முக்கியமான பொருளாகும். இது ஒரு புதிய பொருட்களை உருவாக்கப் பயன் படுகிறது. விளக்குகளுக்குப் பயன்படும் ஒரு வகையான எண்ணெய் எச்சம் , எரிவாயு உற்பத்தியில் " பென்சீன் " கண்டுபிடிக்கப் பட்டது. * பென்சீன் போன்ற இரசாயனப்பொருட்கள் ,மற்றும் திரவ வாயுக்களை கண்டுபிடித்தார்.
* 1820 - ஆம் ஆண்டு கார்பன் மற்றும் குளோரின் , C2 Cl6 மற்றும் C2Cl 4 ஆகிய வற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட கலங்களின் முதல் தொகுப்பை வெளியிட்டார்.
* ஹம்பரி டேவியினால் கண்டுபிடிக்கப் பட்ட குளோரின் க்ளோரேட் ஹைட்ரேட் தொகுப்பை ஃபாரடே நிரூபித்தார்.
ஃபாரடே 1813 - ம் ஆண்டு ராயல் இன்ஸ்டிடியூட்டில் பணியைத் தொடங்கினார். ராயல் நிறுவனமும் அவருக்கு சில சலுகையும், அனுமதியும் வழங்கியது. மைக்கேல் ஃபாரடே அவர்கள் இராயல் நிறுவனத்தின் அட்சய பாத்திரமாக த் திகழ்ந்தார். ஃபாரடேவை கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கெளரவித்தது. அதனை த் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கெளரவப் பட்டங்கள் குவிந்த ன. ஃபாரடேவைத் தேடி வந்த பட்டங்கள் 95 -க்கும் மேற்பட்டவை ஆகும் . ஆயினும் ஃபாரடே அவர்கள் ராயல் இன்ஸ்டிடியூட் பதவியைத் தவிர பிறவற்றை தாமாகத் தேடவேயில்லை. மற்றவை அனைத்தும் அவரை நாடியவையே.மேலும் பல பட்டங்களும் , பதக்கங்களும் பெற்றப் போதும் இறுமாப்புக் கொள்ளாமல் , இரும்புப் பெட்டியில் வைத்தார். ஃபாரடே அறிவியலறிஞர்கள் தனக்கு எழுதும் கடிதங்களை கண்ணென காத்துவந்தார். தன்னால் எழுதப்பட்ட கடிதங்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பெரும் பொக்கிஷமாகக் கருதி பேணி வந்தார். வெற்றியும், பட்டமும் பெற்ற போதும், ஆராயும் ஊக்கத்துடன் தொடர்ந்து பல ஆய்வுகளுக்குப் பெருமை சேர்த்தார். உலகின் இருளகற்றி ஒளி தந்து , தன் நிலை தாழ்ந்த போதும் இகழ்ச்சி தொலைத்து, புகழ்ச்சி விடுத்து விடாமுயற்சியால் ,தொடர்ச்சியான ஆய்வுகள் பல செய்து ,மனித குலம் மகிழ மின்சார பயன்பாட்டை வழங்கினார். இயற்பியலும், வேதியலும் கலந்து அவர் கண்ட ஆய்வுகள் எல்லாம் இன்றும் அகிலத்தை மேம்படச் செய்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு எளிய நிலையில் இருந்து துன்பங்கள் பல அடைந்தாலும் , அறிவையும் , ஆர்வத்தையும் கொண்டு உலக மக்கள் பயன்பெற பல அரிய செயலால் , தியாகத்தால் உலகமே இன்று மின்னொளியில் மிளிரிக் கொண்டிருக்கிறது என்பது வரலாறு. இத்தகைய மாபெரும் பயனைத் தந்த மாமேதையை போற்றுவதில் பெருமை கொள்வோம் .!
0 Comments