உலக மறதி தினம்
( world Alzheimer's Day )
21 • 9 • 2021
உலக அல்சைமர் விழிப்பு உணர்வு தினம் "
ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 21 - ம் நாள் உலக அல்மைசர் தினமாக கடைபிடிக்கப் படுகிறது.அல்மைசர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
மறத்தலும், பொறுத்தலும் நன்று தான் எனினும் வாழ்வையே தொலைக்கும் மறத்தல் கொடியது. பொருளைத் தொலைப்பதும், பெயரை மறப்பதும் பழைய சந்திப்புகளை மறப்பதும், புதியன கற்பதில் சிக்கல் ,வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதில் திணறல், இத்தனை சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் , சிக்கலான தொடர் கதை அல்மைசர். ஞாபகங்களை க் குறைக்கச் செய்து , பின் முழுமையாகவே அழித்து விடும் வீரியம் கொண்டது அல்மைசர் என்னும் ஞாபக மறதி நோய்.
இதனால் சில நேரங்களில் தொடரும் நீண்ட கால மறதி அல்லது குறைந்த காலமறதி ஏற்பட வேண்டிய நிலை உருவாகிறது. இவை சில நேரங்களில் , சில மனிதர்கள் உறவுகளையும் , நட்புக்களையும் மறந்து மனம் தடுமாறுகின்றனர். மெல்ல , மெல்ல மூளையின் செல்களை சிதைத்து நினைவாற்றலை குறைத்து , நம்மை நமக்கே மறக்கச் செய்யும் இந்த அல்சைமர் நோய் 65 -- வயதைக் கடந்த வர்களை அதிகம் பாதிப்படையச் செய்கிறது.
இந்நோயைப் பற்றிய முறையான தகவல்களை முதன் முதலில் 1906 --ம் ஆண்டு ஜெர்மணியைச் சார்ந்த மருத்துவரான " அலோயிஸ் அல்சைமத் " என்பவர் கண்டறிந்தார். அல்சைமர் நோயால் மூளையிலுள்ள உயிரணுக்கள் சிதைவடைவதால் ஞாபக மறதி , நினைவாற்றல் இழப்பு , தாறுமாறான நடத்தைகள் , உடல் செயலிழப்பு ஆகிய வை ஏற்படுகிறது. உலக மக்களின் மரணத்திற்கான காரணங்களில் அல்சைமர் நோயானது 6 - ம் இடத்தைப் பெற்றிருக்கின்றன. நோயின் தீவிரம் கருதி சில நாடுகளில் ஒரு மாதம் முழுக்க அல்சைமர் தினம் அனுசரிக்கப் படுகிறது.
அல்சைமர் நோயை கண்டறியும் முறை :
சற்று விழிப்புணர்வுடன் இருந்துக் கொண்டால் எந்த நோயையும் வெற்றிக் கொள்ளலாம் . 60 -- வயதைக் கடந்த வர்ககளுக்கு நினைவாற்றல் மற்றும் செயல் திறனில் மாறுதல் காணப்பட்டால் , இவர்கள் கவனிக்கப் பட வேண்டியவர்கள் ஆவர்.
உதாரணமாக சில...
கடையில் சரியாக கணக்குப் பார்த்து பணம் வாங்கத் தடுமாறுதல்.
வங்கிப் பரிமாற்றங்களில் தடுமாற்றங்கள்.
பெண்கள் பழகிய சமயலைச் செய்யத் திணறுவது.
இவ்வாறு பல பிரச்சனைகள் காணப்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவரிடம் காட்டி, மருத்துவம் செய்யவேண்டும்.
நோய் பாதிப்புகள்
* பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சவால்.பழக்கமான வேலை களை முடிப்பதில் சிரமம் .
* நாள், தேதி , நேரம் , இடம் ஆகியவற்றை அறிவதில் குழப்பம்
* சமூக நலனில் ஆர்வமின்மை
* சமீபகால தகவல்களை மறத்தல்..
அல்மைசர் சிகிச்சை
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலையில் சுரக்கும் " அசிட்டைல் கோலின் "( Acetyl Cholin ) அளவு குறைவாக இருந்தால் மருந்துகள் கொடுத்து சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது. இவற்றின் மூலம் நோய் முற்றிய நிலைக்குச் செல்வதைத் தடுத்து தாமதப் படுத்தலாம். அல்சைமர் நோயாளிகளைக் கண்காணிக்க எப்போதும் ஒருவர் கூடவே இருப்பது அவசியமாகிறது. முதியவர்கள் நோயின் ஆரம்ப நிலையையும் , தங்களது நடத்தையில் மாற்றம் ஏற்படுவதையும் அறிந்து செயல்படுவதன் மூலம் அல்மைசர் நோய் வரும்முன் தடுப்பதே சிறந்தது.
டிமென்ஷியா
சிக்கலான செய்திகளைப் பார்க்கும் போதோ, பேசும் போதோ குழம்புவது, வார்த்தைகளை மறந்து விடுவது போன்றவை " டிமென்ஷியா " எனப்படும் நோயின் அறிகுறியாகும்.
காரணம் :
மனிதனின் வயது அதிகரிக்கும் போது மூளையில் சுரக்கும் ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்கள் , மூலையில் உள்ள சில நியூரான்களின் செயல் இழப்பு போன்றவையே அல்சைமருக்கு காரணமாகிறது. ஆரம்பநிலையில் தினமும் நிகழும் சின்ன சின்ன செய்திகளை மறக்கக் கூடும் . உதாரணமாக.. காலையில் சாப்பிட்ட சிற்றுண்டி , சந்தித்த நபர், சென்ற நிகழ்ச்சி போன்றவற்றை மறந்து விடுவர். அடிக்கடி கோபம் வரும் . ஒரு கட்டத்தில் தன் துணை , மற்றும் வீட்டில் உள்ள நபர்களையும் கூட மறந்து விடும் நிலை ஏற்படும் . குணங்கள் மாறத் தொடங்கும்.
இந்நோய் பெரும்பாலும் வயது அதிகரிக்க , அதிகரிக்க வருவதற்கான வாய்ப்பாக அமைகிறது. தற்போது 75 - வயதானவர்களில் நான்கில் ஒருவருக்கு இந்த நோய் வருகிறது . பெரும்பாலும் மரபியல் ரீதியாகவே அல்சைமர் நோய் வருகிறது.
இரத்தக் குழாயில் கொழுப்புக் கட்டிகள் படியக் கூடிய நோயான " அத்ரோஸ்க்லீ ரோசிஸிஸ் " ( Atherosclerosis) என்ற நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு, அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு, நரம்பு மண்டல கோளாறுகள் உள்ளவர்கள் போன்றவர்களுக்கே இந்த நோய் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றன.
செய்ய வேண்டிய பரிசோதனைகள் :
மூளையின் செயல் திறனை அறிய தனிப் பரிசோதனை செய்யப் படும். நோய் இருக்கிறதா , இல்லையா என்பதை அறிய " மினி மெண்டல் ஸ்டேட்டஸ் தேர்வு ", ( MMSC ), மினி காக் சோதனை ( MCT ), கிளாக் டிராயிங் டெஸ்ட் போன்ற சில பரிசோதனைகள் செய்யப் படுகின்றன.
பரிசோதனையின் வகைகள் :
* நினைவுப் பரிசோதனை
* புதிர் பரிசோதனை
* சொல்வதைக் கேட்டு சரியாக உள்வாங்க முடிகிறதா என்பதை அறிதல்.
* எவ்வாறு எதிர்வினையாற்று கிறார் என்பதை அறிதல். போன்ற பரிசோதனைகள் செய்து நோயை உறுதி செய்யப் படுகிறது.
நோய் தடுப்பு முறைகள் :
60 - வயதைக் கடந்தவர்கள் ஒய்வு பெற்றாலும் , வீட்டிலேயே அடைந்து கொள்ளாமல் , அன்றாட வேலைகளை சரியான நேரங்களில் செய்யப் பழகிக் கொள்ள வேண்டியது அவசியம். தினமும் செய்தித்தாள் வாசிப்பது அவசியம். குறுக்கெழுத்துப் புதிர்கள் முதலியவற்றில் கலந்துக் கொள்ள வேண்டும். சிக்கலான கணக்குப் புதிர்களை விடுவிக்க முயற்சி செய்ய வேண்டும். யோகா தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்வதன் மூலம் இந்நோய் கட்டுப்படுத்தப் படுகிறது.
அல்சைமர் நோயைத் தடுக்கும் உணவுகள் சில..
நல்ல ஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவுகளை உண்பதன் மூலம் பல நோய்கள் தடுக்கப்படுகின்றன. உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பேணுதல் போன்றவற்றால் அல்சைமர் நோயை த் தடுக்க முடியும் என்பதை அறிய சில சான்றுகளைத் தருகிறது " தேசிய உடல் நல ஆராய்ச்சி மையம் ( The National Institute s Of Health)" தெரிவிக்கிறது. தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோயாக உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் நினைவாற்றல் மற்றுமின்றி பகுத்தறிவையும் , கற்றலையும் இழப்பர். மேலும் குழந்தைகளிடையையும் இந்நோய் காணப்படுகின்றன. இவை மரபியல் காரணிகள் மட்டுமின்றி மரபு அல்லாத பிற காரணிகளாலும் உண்டாகலாம் என அறியப்படுகிறது. அல்சைமரை குணமாக்க தானியங்கள், மற்றும் உலர் விதைகள் போன்றவை புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக விளங்குகிறது.
பாதாம், முந்திரி , மற்றும் வால்நட் முதலிய கொட்டை வகைகளில் எதிர்ப்புச் சக்தியான ஆன்டி - ஆக்ஸிடன்ட் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை புதிய செல் வளர்ச்சியை உருவாக்குகின்றன.
அவற்றில் சில உணவுகள்
முட்டை :
முட்டையில் வைட்டமின் B12 மற்றும் கோலைன் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளை செல்களின் உற்பத்தியைத் தூண்டி நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையது.
ப்ராக்கோலி :
ப்ராக்கோலியில் வைட்டமின் " k " சத்தானது நிறைந்துள்ளது , இவை மூளை வளர்ச்சி யைத் தூண்டி , செயல் பாடுகளை பாதுகாக்கிறது.
தயிர் :
மன இறுக்கத்தைக் குறைக்கும் அமினோ அமிலங்கள் தயிரில் விரவிக் காணப்படுகின்றன. மன இறுக்கம் அதிகரிக்கும் போது மூளைச் செல்கள் முதிர்வடைந்து விடுகின்றன. எனவே தயிரை அதிக அளவு பயன்படுத்துவதன் மூலம் இக்குறைப்பாடு நிவர்த்தி செய்யப் படுகிறது.
காபி :
அல்சைமர் , டிமென்ஷியா போன்ற நோய்களால் ஏற்படும் அபாயத்தை காப்பி குறைக்கிறது. காஃபைன் மற்றும் ஆன்டி -- ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் இந்த நோயை குறைக்கும் வல்லமையைத் தருகிறது.
மீன்
மூளையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் சில மீன்கள் பங்கு வகிக்கின்றன. அவை , சூரைமீன் , சால்மன் போன்ற மீன் வகைகளை உண்பதன் மூலம் மூளை நன்றாக வளரும். ஏனெனில் மீன்களில் உள்ள கால்சியமும், புரதச்சத்தும் மூளை வளர்ச்சிக்கு அவசியமானவை. எனவே இது போன்ற கடல் உணவுகளை உணவில் பயன்படுத்துவது நன்மை தருவதாக விளங்குகிறது.
பாதாம் :
பாதாமில் ஆன்டி -- ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்துகள் வளமாக நிறைந்துள்ளதால் அல்சைமர் போன்ற நோய்களைத் தடுக்க இவ்வுணவு பெரிதும் பயன்படுகிறது. கல்வி , விடாமுயற்சி , ஊக்குவித்தல் போன்றவை அறிவுத் திறனை அதிகரிக்கும் சக்திகளாகும். இவற்றை சிகாகோ " ரஷ் பல்கலைக்கழக மருத்துவ மைய மருத்துவர் , " டேவிட் பென்னெட் " கூறுகிறார்.
எனவே கற்பதைத் தொடர்ந்தும் , சத்துள்ள ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொண்டும்,வாழும் நாட்களை நீட்டியும் பயன் பெற்று வாழும் வழிக்காணுவோம்!
மறதியைத் தடுத்து மகிழ்ச்சியைப் பெறுவோம் !
பயிற்சியும் , முயற்சியும் பெற்று அல்சைமரைத் தடுப்போம்.!
0 Comments