ஒன்பதாம் வகுப்பு - சமூக அறிவியல் - ஒப்படைப்பு 2 - புவியியல் - அலகு 2 - நிலக்கோளம் - II புவிபுறச் செயல்முறைகள் - வினா & விடை / 9th ASSIGNMENT - SOCIAL SCIENCE - ASSIGNMENT 2 - QUESTION & ANSWER

 


                         ஒப்படைப்பு

                            வகுப்பு:9

              பாடம்: சமூக அறிவியல்

                        (புவியியல்)

அலகு-2 நிலக்கோளம்- II புவி புறச்செயல்முறைகள்

                         பகுதி அ

ஒருமதிப்பெண்வினா

1 . பாறைகளின் மேற்பரப்பு உரிதல்........ சிதைவு

அ) இயற்கைசிதைவு ஆ)வேதியல்சிதைவு

இ)மண்சிதைவு ஈ) உயிரினச்சிதைவு

விடை : அ ) இயற்கைச்சிதைவு 

2ஆற்றின் போக்கு....... நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது,

அ) 4        ஆ) 3    இ ) 2     ஈ ) 5

விடை :  ஆ ) 3 

3. கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம்........

அ) கடல் அலை

ஆ)ஆற்றுநீர் அரித்தல்

இ) பனியாறுஅரித்தல்

 ஈ ) காற்றின்படியவைத்தல்

விடை : அ ) கடல் அலை 

4. பிறைவடிவத்தில் தனித்துக்காணப்படும் மணல்மேடுகள்....... என அழைக்கப் படுகின்றன.

அ) இன்ல்பர்க்    ஆ)குறுக்கு மணல் மேடுகள்

 இ) பர்கான்கள்     ஈ)மணல்திட்டு

விடை : இ ) பர்கான்கள்

5. ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.

அ) துள்ளல்     ஆ) வண்டல்விசிறி 

இ) டெல்டா         ஈ)மலை இடுக்கு

விடை : இ ) டெல்டா

கோடிட்டஇடங்களை நிரப்புக

1. உடைந்த பாறைகள் வானிலை சிதைவுக்கு உட்பட்டு ------ஆக மாறுகிறது.

விடை :  மண் 

2 தாவங்களின் வேர்களால் பாறைகள் விரிசலடைவது ------   சிதைவு.

விடை :  உயிரினச் 

3 ) உலகிலேயேமிக உயரமான நீர்வீழ்ச்சி.......

விடை :  ஏஞ்சல்

4. முக்கோணவடிவில் படிவுகளால் உருவாக்கப்பட்ட நிலத்தோற்றம்....ஆகும்.

விடை : டெல்டா 

5. இன்சல்பர்க் என்ற ஜெர்மானிய சொல்லின் பொருள்.......

விடை :  தீவுமலை 

                               பகுதி-ஆ

I1. சிறுவினா

1.வானிலைச் சிதைவு வரையறு.

        வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும் , அழிதலுக்கும் உட்படுகின்ற செயல்பாடுகள் வானிலைச் சிதைவு எனப்படும்.

2.ஆற்றின் மூன்று நிலைகள் யாது?அதோடு தொடர்புடைய இரண்டு நிலத்தோற்றங்களைக் கூறுக.?

  அ ) இளநிலை - இணைந்த கிளைக்குன்றுகள் , துள்ளல்.

    ஆ ) முதிர்நிலை - வண்டல் விசிறிகள் , வெள்ளச் சமவெளிகள்.

   இ ) மூப்பு நிலை - டெல்டா , ஓதபொங்கு முகங்கள்.

3. காற்று வரையறு

     பூமியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் வாயுவே காற்று எனப்படும்.

4. தொங்கும் பள்ளத்தாக்கு என்றால் என்ன?

            முதன்மைப் பனியாற்றினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணைப்பனியாற்றின் பள்ளத்தாக்கு தொங்கும் பள்ளத்தாக்கு ஆகும்.

5, காற்றின் படியவைத்தல் செயலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களை பட்டியலிடுக.

 * மணல் குன்று 

* பர்கான் 

* காற்றடி வண்டல் 

                                 பகுதி இ

III. பெருவினா

1வானிலை சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக.

           வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும்  , அழிதலுக்கும் உட்படுகின்றன. இச்செயல்பாடுகளையே வானிலைச்சிதைவு என அழைக்கிறோம்.

வானிலைச் சிதைவு மூன்று வகைப்படும்.

* இயற்பியல் சிதைவு 

* வேதியியல் சிதைவு 

* உயிரினச் சிதைவு 

1 ) இயற்பியல் சிதைவு (Physical Weathering)

                இயற்பியல் சக்திகளால் பாறைகள் இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுவதே இயற்பியல் சிதைவு எனப்படுகிறது. பகல் நேரத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக பாறைகள் விரிவடைகின்றன. இரவு நேரத்தில் அதிகக் குளிரின் காரணமாக அவை சுருங்குகின்றன. இத்தொடர்ச்சியான நிகழ்வின் காரணமாக பாறைகளில் விரிசல் ஏற்பட்டு அவை உடைந்து சிதறுகின்றன. பாறை உரிதல், பாறைப் பிரிந்துடைதல் மற்றும் சிறுத்துகள்களாக சிதைவுறுதல் ஆகியன இயற்பியல் சிதைவின் வகைகளாகும்.

2 ) வேதியியல் சிதைவு 

          பாறைகளில் இரசாயன .மாற்றங்கள்
ஏற்படுவதால் அவை  உடைந்து
சிதைவுறுகின்றன. இச்சிதைவுறுதலே
இரசாயனச் சிதைவு எனப்படுகிறது.
அதிக வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட
நிலநடுக்கோட்டுப் பகுதிகள், வெப்பமண்டலப் பகுதிகள் மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளில் இரசாயனச் சிதைவுறுதல் அதிகமாக நடைபெறுகிறது.  ஆக்ஸிகரணம்  , கார்பனாக்கம் , கரைதல் , நீர்க்கொள்ளல் ஆகிய செயல்பாடுகளால் இரசாயனச்சிதைவு ஏற்படுகிறது.

3 ) உயிரினச் சிதைவு 

           தாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்களின் வழியே ஊடுவிச்சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது. மண்புழுக்களாலும் , விலங்கினங்களாலும் ( எலி மற்றும் முயல் ) மற்றும் மனிதச் செயல்பாடுகளினாலும் பாறைகள் சிதைவுறுதலே உயிரினச் சிதைவு எனப்படும்.

2. அலையின் படிவு நிலத்தோற்றங்கள் பற்றி விவரி.

* கடற்கரை 

       கடல் அலைகளால் அரிக்கப்பட்ட மணல் மற்றும் சரளைக் கற்கள் கடலோரத்தில் படியவைக்கப் படுவதே கடற்கரையாகும்.

*  மணல் திட்டு 

           கடற்கரையின் மணற்படிவுகளால் ஆன நீண்ட நிலத்தோற்றமே மணல் திட்டு எனப்படும். இம்மணல் திட்டு பெரும்பாலும் கடற்கரைக்கு இணையாகக் காணப்படும்.

* நீண்ட மணல்திட்டு 

           மணல் திட்டின் ஒரு முனை நிலத்தோடு இணைந்தும் மறுமுனை கடலை நோக்கி நீண்டும் காணப்படும். இந்நீண்ட நிலத்தோற்றம் நீண்ட மணல்திட்டு எனப்படும்.


                                       பகுதி-ஈ

IV.செயல்பாடு 


**************     ***********  **************

விடைத்தயாரிப்பு :

திருமதி.ச.இராணி அவர்கள் , 

பட்டதாரி ஆசிரியர் ,

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி . 

இளமனூர் , மதுரை.

****************    **********      ************



Post a Comment

1 Comments