ஒப்படைப்பு - 2
வகுப்பு:9
பாடம்: சமூக அறிவியல்
(பொருளியல்)
அலகு-2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
பகுதி-அ
1.ஒரு மதிப்பெண்வினா
1 முதன்மைத்துறை இவ்வாறு அழைக்கப்படுகிறது
அ)விவசாயத்துறை
ஆ) தொழிற்துறை
இ) பணிகள் துறை
ஈ) வருவாய்த்துறை
விடை : அ ) விவசாயத்துறை
2 ) பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு. வயது வரையிலான வயதைக் கணக்கிடலாம்.
அ) 12 - 60 ஆ) 15 - 60 இ ) 21- 65 ஈ ) 5- 14
விடை : ஆ ) 15 - 60
3.குடிசைத் தொழில்கள் -----துறையைச் சார்ந்தது.
அ) ஒழுங்கமைக்கப்பட்டதுறைகள்
ஆ) தனியார்துறைகள்
இ) ஒழுங்கமைக்கப்படாததுறை
ஈ) பொதுத்துறை
விடை : இ ) ஒழுங்கமைக்கப்படாததுறை
4.மூன்றாம் துறையில் அடங்குவது
அ) போக்குவரத்து ஆ)காப்பீடு
இ) வங்கியியல் ஈ) அனைத்தும்
விடை : ஈ ) அனைத்தும்
5. எந்தத் துறையில் தொழிலமைப்புமுறை சேர்க்கப்படவில்லை
அ) முதன்மைத்துறை ஆ) இரண்டாம்துறை
இ) சார்புத்துறை ஈ) தனியார்துறை
விடை : ஈ ) தனியார்துறை
பொருத்துக
1 பொதுத்துறை - சேவை நோக்கம்
2 தனியார்துறை - இலாப நோக்கம்
3. முதன்மைத்துறை - கோழி வளர்ப்பு
4. பணியமர்த்துவோர் - ஊதியம் தருவோர்
5. சார்புத்துறை - வங்கியல்
பகுதி-ஆ
11. சிறுவினா
1 ) பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்தி என்றால் என்ன?
உழைப்பாளர் குழு என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும் , கூடவே வேலை செய்யும் திறன் பெற்ற நபர்களும் ஆவர்.
2 ) பொதுத்துறைமற்றும் தனியார் துறையை வேறுபடுத்துக.
*பொதுத்துறை
* சேவை நோக்கம் கொண்டது.
* ஊதியம் அரசாங்கம் வழங்குகிறது.
* சொத்து அரசாங்கத்துக்குச் சொந்தம்.
தனியார்துறை
* இலாப நோக்கம் கொண்டது.
* ஊதியம் உரிமையாளரால் வழங்கப்படுகிறது.
* தனி நபர்க்குச் சொந்தம்.
3 உழைப்பாளர் குழுக்களின் முக்கியத்துவத்தைக் கூறுக.
உற்பத்தி சார்ந்த வேலையை மேற்கொள்வதற்கு உடல் ரீதியாக தகுதியானவர்கள் தேவை. மக்கள் தொகையில் குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் பெரும்பகுதி இருந்தால் நாட்டு முன்னேற்றம் குறைவாக இருக்கும்.
4. பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?
* முதன்மைத்துறை
* இரண்டாம் துறை
* சார்புத்துறை
5 . ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் யாவை?
* குறைந்த கூலி கொடுக்கப்படுகிறது.
* தொடர்ச்சியாக வேலை கிடைக்காது.
* பெரும்பாலும் ஊதியத்துடன் விடுப்பு இருக்காது.
பகுதி இ
III. பெருவினா
விவரிக்க (அ) முதன்மைத்துறை
(ஆ) இரண்டாம்துறை
(இ) சார்புத்துறை
அ ) முதன்மைத்துறை
விவசாயம் , காடுகள் , கால்நடை வளர்ப்பு , கோழி வளர்ப்பு , பால்பண்ணை , மீன் வளர்ப்பு போன்றவை.
ஆ ) இரண்டாம் துறை :
உற்பத்தி , சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் , கட்டுமானம் போன்றவை.
இ ) சார்புத்துறை :
போக்குவரத்து , காப்பீடு , வங்கி , வணிகம் , தொலைத்தொடர்பு , வீட்டுமனை விற்பனை , அரசு மற்றும் அரசு சாரா சேவைகள்.
2 ஒழுங்கமைக்கப்பட்டமற்றும் ஒழுங்கமைக்கப்படாததுறைகளில் நிலவுகின்ற வேலை வாய்ப்பை ஒப்பிடுக.
0 Comments