ஒன்பதாம் வகுப்பு - சமூக அறிவியல் - குடிமையியல் ஒப்படைப்பு 2 - அலகு 2 - தேர்தல் , அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் - வினா & விடை / 9th SOCIAL SCIENCE - ASSIGNMENT 2 - QUESTION & ANSWER

 

                       ஒப்படைப்பு

                       வகுப்பு:9

பாடம் சமூக அறிவியல் - குடிமையியல் 

அலகு-2 தேர்தல், அரசியல்கட்சிகள் மற்றும் அழுத்தக்குழுக்கள்

பகுதி-அ

1.ஒருமதிப்பெண்வினா

1. முதன்முறையாக பொதுத்தேர்தலில் NOTA அறிமுகப்படுத்தப்பட்டஆண்டு.........

அ) 2012       ஆ) 2013       இ)2014             ஈ)2015

விடை :  இ ) 2014 

2.தேர்தலில் வாக்களிக்க.....வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அ) 12         ஆ)28        இ)16       ஈ)18

விடை :  ஈ ) 18

3.இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியமைப்பு பிரிவு

அ) பிரிவு 260    ஆ)பிரிவு 315 

இ)பிரிவு 324      ஈ)பிரிவு 325

விடை :  இ ) பிரிவு 324

4.இந்தியதேர்தல் ஆணையம் ஒரு ..

அ) சுதந்திரமான அமைப்பு 

ஆ)சட்டபூர்வ அமைப்பு 

இ) தனியார் அமைப்பு 

ஈ) பொதுநிறுவனம்

விடை : அ  ) சுதந்திரமான அமைப்பு 

5.பின்வருவனவற்றுள் ஒரு கட்சி முறையை பின்பற்றும் நாடு

அ) இந்தியா     ஆ)பிரான்ஸ் 

இ)கியூபா     ஈ) அமெரிக்கா

விடை :  இ ) கியூபா 

கோடிட்ட இடங்களை நிரப்புக

1.இந்தியாவில் அரசியல் கட்சிகள்.....மற்றும்..... என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விடை :  தேசியக் கட்சிகள்,  மாநிலக்கட்சிகள்

2.இந்திய பாராளுமன்றம்...... அவைகளைக் கொண்டது

விடை : இரு

3.தேசிய வாக்காளர்கள்தினம் அனுசரிக்கப்படும் நாள்........

விடை : ஜனவரி 25

4.இந்திய தேர்தல் ஆணையம் ...... உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.

விடை : மூன்று 

5.எதிர்கட்சித் தலைவர்...........க்கு இணையான தகுதி பெற்றவர்.

விடை : கேபினட் 

பகுதி ஆ

11. சிறுவினா

1.அரசியல் கட்சி என்பதன் பொருளை விளக்குக.

        அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காகத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிகழ்ச்சி நிரல்களையும் குறிப்பிட்ட கொள்கைகளையும் கொண்ட மக்கள் குழுவின் அமைப்பே அரசியல் கட்சியாகும்.

2.தேசியக்கட்சி என்றால் என்ன?

             ஒரு கட்சி , குறைந்தது நான்கு மாநிலங்களிலாவது மாநிலக்கட்சி என்ற தகுதியைப் பெற்றிருக்குமானால் அது தேசியக் கட்சியாகும்.

3.அழுத்தக் குழுக்கள் என்றால் என்ன?

        பொதுநலன்களைப் பாதுகாக்கவும் , ஊக்குவிக்கவும் தீவிரமாகச் செயல்படும் குழுக்கள் அழுத்தக் குழுக்கள் ஆகும்.

                          பகுதி-இ

III. பெருவினா

1. நேரடித் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி.

நிறைகள் :

* வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது.

* அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வும் , தகுதியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் மக்களுக்குக் கற்பிக்கிறது.

* மக்களைத் தீவிரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகிறது.

குறைகள் :

* நேரடித் தேர்தல் முறை அதிக செலவு கொண்டதாக உள்ளது.

* எழுத்தறிவற்ற வாக்காளர்கள் , பொய்யான பரப்புரைகளால் தவறாக வழிநடத்தப் படுகிறார்கள்.

* ஒவ்வொரு வாக்கு மையங்களிலும் சுதந்திரமான , நியாயமான தேர்தல் முறையை உறுதி செய்வது என்பது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. 

* சில அரசியல் கட்சி வேட்பாளர்கள் , வாக்காளர்கள் மீது பணம் , பொருள்  மூலமாக செல்வாக்கைச் செலுத்துவது என்பது மற்றொரு சவாலாகும்.

* தேர்தல் பரப்புரைகளின் போது சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது.

2.மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை விவரி.

நிறைகள் :

* சமத்துவம் , சகோதரத்துவம் மக்களிடையே காணப்படும்.

* மக்களிடையே பொறுப்புணர்ச்சி ஏற்படக் காரணமாக இருக்கிறது. 

* பொறுப்பும் , பதிலளிக்கும் கடமையும் கொண்ட அரசாங்கம்.

குறைகள் :

* வாக்காளர்களிடையே போதிய ஆர்வமின்மை மற்றும் குறைந்த வாக்குப் பதிவு.

* மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி.

************      *************    *************

விடைத்தயாரிப்பு :

திருமதி.ச.இராணி அவர்கள் , 

பட்டதாரி ஆசிரியர் ,

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி . 

இளமனூர் , மதுரை.

****************    **********      ***********Post a Comment

0 Comments