பத்தாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 18
கலைச்சொல் அறிதல்
கற்றல் விளைவு:
மொழிப்பெயர்ப்புத் திறன்கள் மற்றும் சொல்லாக்கத்திறன்கள் வளர்த்தல்.
காலத்தின் தேவைகளுக்கேற்பப் புதிய புதிய சொல்லாக்கங்களை உருவாக்க முயலுதல்.
கைவினைப்பொருள்கள் தயாரித்தல், கட்டடக்கலை, உழவுத்தொழில், நாட்டியம், விதை விதைத்தல், போன்ற பிற துறைகளில் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல்.
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
ஒரு துறை சார்ந்த வல்லுநர்கள் தங்களிடையே அத்துறை சார்ந்த செய்திகளைச் சுருக்கமாகவும், துல்லியமாகவும் பரிமாறிக்கொள்வதற்குக் கலைச்சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். கலைச்சொற்கள், சொல்லப்படும் பொருளின் ஆழத்தையும் நுண்ணியத்தன்மையையும் வெளிப்படுத்தும். சொற்சிக்கனத்திற்கு எடுத்துக்காட்டாகக் கலைச்சொற்கள் விளங்குகின்றன.
(எ.கா.) தானியங்கி-ஆட்டோ
வருடி-ஸ்கேன்னர்
செயலி-ஆப்
புலனம் - வாட்ஸ் ஆப்
கணினி - கம்ப்யூட்டர்
தொலைநகலி - பேக்ஸ்
சொடுக்கி மவுஸ்.
விளக்கம் :
ஒவ்வொரு துறையிலும் பல கலைச்சொற்கள் உள்ளன. அவற்றுள், சில கலைச்சொற்களை இங்குக் காண்போம்.
(எ.கா.) மருத்துவத் துறை
அமுதன், மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் அதிகமாகஉட்கொண்டதால், அவனுக்குப் பக்கவிளைவு ஏற்பட்டது. அதனால் ஒவ்வாமை அதிகமாயிற்று.
கலைச்சொற்கள்
பக்கவிளைவு - Side Effect
ஒவ்வாமை - Allergy
(எ.கா.) நெசவுத்துறை
மணி, ஆயத்த ஆடை வாங்க
நெசவாலைக்குச் சென்றான். அங்குள்ள
தறிப்பட்டறைக்குள் சென்று சாயம் ஏற்றுதலைப் பற்றித் தெரிந்துகொண்டான்.
கலைச்சொற்கள்
தறி -Loom
ஆயத்த ஆடை-Readymade Dress
சாயம் ஏற்றுதல்-Dyeing
(எ.கா.) கல்வித்துறை
ரகு, பல்கலைக்கழகத்தில் நம்பிக்கையுடன் படித்து முனைவர் பட்டம் பெற்றான்.
கலைச்சொற்கள்
நம்பிக்கை - Confidence
பல்கலைக்கழகம் - University
முனைவர் பட்டம் – Doctorate
இதுபோன்றகலைச்சொற்கள் சிலவற்றை மேலும் காண்போம்.
நோய்- Disease
சிறுதானியங்கள் – Millets
பட்டயக்கணக்கர் – Auditor
இணையம் – Internet
மெய்யொலி - Consonant
ஒலியன்-Phoneme
**************** ******** ****************
மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
1 . பத்தியைப் படித்துக் கலைச் சொற்களைக் கண்டறிந்து வண்ணமிடச் செய்தல்.
அட்டை தேய்ப்பி இயந்திரத்தில் வங்கி அட்டையின் காந்தப்பட்டை இருக்கும்
பகுதியைத் தேய்க்கும்போது வாடிக்கையாளரின் விவரங்கள், இணையத் தொடர்பின் மூலம் வங்கிக் கணினிக்குச் செல்கிறது. கணினியால் அட்டை ஆராயப்பட்டுக் கடவுச்
சொல்லைச் சரிபார்த்தபின் பணப்பரிமாற்றத்திற்கு வங்கி ஒப்புதல் அளிக்கிறது. தற்காலத்தில் பயன்படுத்தப்படும் அட்டைகளில் சில்லு (chip) என்று சொல்லப் படும் (நுண்ணிய) சில்லுகள் மூலம் வணிகப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
2. பொருத்துக - கலைச்சொல் (ஆங்கிலம் - தமிழ்)
LEXICON - பேரகராதி
WATER MANAGEMENT - நீர் மேலாண்மை
EXCAVATION - அகழாய்வு
HERO STONE - நடுகல்
MISSILE - ஏவுகணை
DOWNLOAD - பதிவிறக்கம்
************** ************ ***************
நன்றி -
விடைத்தயாரிப்பு :
திரு.மணி மீனாட்சி சுந்தரம் ,
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி ,
சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை.
************ ************** *************
0 Comments