ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக்கட்டகம் - செயல்பாடு 12 - விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் - வினா & விடை / 9th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHIK KATTAKAM - 12 - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 12

விளம்பரத்தைப் படித்து

வினாக்களுக்கு விடையளித்தல்.

கற்றல் விளைவு:

         செய்தித்தாள்கள், இதழ்கள்,கதைகள், தகவல் பகுதிகள் இணையம் போன்றவற்றில் தமிழில் உள்ள பல்வேறுவகை எழுத்துகளைப் படித்துப் புரிந்துகொண்டு அவற்றின்மீது கருத்துரைபகர்தல், முடிவுகூறுதல், விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.

                   கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்றவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்.

கற்பித்தல் செயல்பாடு:

அறிமுகம்:

         ஒன்றைப் பற்றிப் பலருக்கு அறிமுகம் செய்வது எதுவோ அதுவே விளம்பரம் எனப்படும். தெளிவாக அறிமுகம்செய்ய வலுசேர்ப்பனவாகப் படம், எழுத்து, வண்ணம் போன்றவை அமைகின்றன. உள்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் செய்தியைப் பரப்புவதாக அமைவதே விளம்பரமாகும்.

   "ஒரு குறிப்பிட்ட அரசோ, உற்பத்தியாளரோ, விற்பனையாளரோ தமது கொள்கைகளைப் பரப்புவதற்கும் பொருள்களை விற்பதற்கும் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கும் தாமே பணத்தைச் செலவிட்டு எழுத்தின் வழியோ காட்சிகளின் வழியோ வெளிக்கொணரும் உத்தியே விளம்பரம்".

விளம்பரம் மூலம் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

* விளம்பரம் எப்பொருள் சார்ந்தது என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

* கவனத்தை ஈர்க்கும் விளம்பரமா? உண்மைத்தன்மை மிக்கதா? என்பதையும் ஆராய்ந்து தெளியவேண்டும்.

*  விளம்பரம் உணர்த்தும் கருத்தைப் பகுத்தறியும் திறன்பெற வேண்டும்.

விளம்பரம் மூலம் மாணவர்கள் அடையும் திறன்.

* உற்றுநோக்கும் திறன்

* மையக்கருத்தறியும் திறன்
வினாக்கள்

1. மாணவர் சேர்க்கை நடைபெறும் வகுப்புகள் யாவை?

அ. ஒன்றாம் வகுப்பிற்கு மட்டும்
ஆ. வகுப்பு இரண்டுமுதல் ஐந்துவரை
இ. வகுப்பு ஒன்றுமுதல் நான்குவரை
ஈ.வகுப்பு ஒன்றுமுதல் ஐந்துவரை

2. இப்பள்ளியில் சேரயாரைத் தொடர்புகொள்ள வேண்டும்?

அ. பள்ளி ஆசிரியர்கள்
ஆ. தலைமை ஆசிரியர்
இ. மாணவர்கள்
ஈ. கல்வியாளர்கள்

3. மேற்கண்ட விளம்பரத்தின் நோக்கம் யாது?

4. கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் அன்பையும் ஆதரவையும்
பெற்ற கல்வி மையம் என ஏன் விளம்பரத்தில் குறிப்பிடப்படுகிறது?

5. விளம்பரத்தில் ஆங்கிலவழிக் கல்வி எனக் குறிப்பிட்டுள்ளமை குறித்த உங்களது
கருத்தை வெளிப்படுத்துக.


விடைகள்

1) ஈ. வகுப்பு ஒன்று முதல் ஐந்து வரை

2) ஆ. தலைமை ஆசிரியர்

3) மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இப்பள்ளியில் சேர வேண்டும் என்பதே
இவ்விளம்பரத்தின் நோக்கம் ஆகும்.

4) கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் அன்பையும் ஆதரவையும்
பெற்ற கல்வி மையம் எனக் குறிப்பிடப்படுவதன் காரணம், அனைத்து தரப்பினரின்ஆதரவும் பள்ளிக்கு உண்டு என்பதை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவது ஆகும்.

5) (குறிப்பு - மாணவர்களின் சொந்தக் கருத்து முறையாக வெளிப்படுமாறு அமையும்
விடைகளை ஏற்கலாம்.)

மதிப்பீட்டுச் செயல்பாடு

1. 'நிலா முற்றம்' கவிதைப் போட்டி நடைபெறும் மாதம்

    மே மாதம்

2. நிலா முற்றத்தில் இதுவரை எத்தனை ஆண்டுவிழாக்கள் நடைபெற்றுள்ளன?

      இதுவரை 5 ஆண்டு விழாக்கள் நடை பெற்றுள்ளன.

3. போட்டியில் கலந்து கொள்வோர் பதிவு செய்வதற்கான இறுதி நாள் எது?
  
       மே மாதம் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் .

4. கவிதை எத்தனை அடிகளுக்குள் அமையவேண்டும்?

     கவிதை 16 முதல் 24 அடிகளுக்குள் அமைய வேண்டும்.

5. வெற்றிப்பதக்கங்கள் பெறுவோரின் எண்ணிக்கை எத்தனை?

      வெற்றிப் பதக்கங்கள் பெறுவோரின் எண்ணிக்கை - 3 

6. போட்டியில் வெற்றிபெறுவோருக்கு வழங்கப்படும் பரிசு யாது?

        பணப்பரிசு

7. 'காற்றின் நிறம் கருப்பு' நூல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் போட்டி
யாது?

     கவிதைப் போட்டி

8. 'நிலாமுற்றம்' என்பது எதைக் குறிக்கிறது?

     நிலா முற்றம் என்பது ஓர் இலக்கிய அமைப்பாகும்.

9. கவிதைப்போட்டி எதற்காக நடத்தப்படுகிறது?

    நிலாமுற்றக்கவிஞர். தஞ்சை தரணியன் அவர்களின் ' காற்றின் நிறம் கருப்பு ' எனும் நூல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது.

10. நிலா முற்றம் - கவிதைப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள்
வழங்கப்படுவதற்கான காரணத்தைக் குறிப்பிடுக?

        பங்கேற்பாளர்களின் படைப்புத் திறமையை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

*****************    ************    ************

Post a Comment

0 Comments