12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 26 , திருக்குறள் - வினா & விடை /12th TAMIL - REFRESHER COURSE MODULE 26 - THIRUKKURAL - QUESTION & ANSWER

 

12 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 26

திருக்குறள்

கற்றல் விளைவுகள்

* திருக்குறள் நூல் அமைப்பு முறையை அறிந்து கொள்ளுதல்.

* திருக்குறள், திருவள்ளுவரின் பெருமை, சிறப்புகளை நினைவில் நிறுத்துதல்.

* நாடு , இனம், மொழி, காலம் தாண்டிய அறக்கருத்துகளை அனைவரும் ஏற்கும் மாண்பைத் தெரிந்துகொள்ளுதல்.

*  உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும், பல தமிழ் அறிஞர்களால் உரை எழுதப்பட்ட நூல் என்ற பெரும்பேற்றையும் விளக்கி உணர்தல்.

ஆர்வமூட்டல்

"ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

என்ற முதுமொழியில் அமைந்த இரண்டு என்பது எதைக் குறிக்கும்? என்று மாணவர்களிடம் வினாத்தொடுத்து "திருக்குறள்" என்ற விடையை வரவழைத்தல். திரு என்ற சொல்லும், குறள் என்ற சொல்லும் இணைந்ததே "திருக்குறள்" என்று நினைவூட்டுதல்.

ஆசிரியர் செயல்பாடு

செயல்பாடு:1

     திருக்குறள், "பதினெண் கீழ்க்கணக்கு" நூல்களில் ஒன்று. குறள் வெண்பாக்களால் ஆனதால் "குறள்" எனவும், மேன்மையை உணர்த்த "திரு" எனவும் அடைமொழியுடன் 'திருக்குறள்' என்று அழைக்கப்படுகின்றது.

            மக்களின் வாழ்க்கை நெறிகளை நிலைநிறுத்தும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளால் திருக்குறள் சிறப்புப் பெற்றிருக்கிறது.

முப்பால் என்றும் வழங்கப்படுகிறது

அறத்துப்பால் 38 அதிகாரங்கள்

பொருட்பால் 70 அதிகாரங்கள்

காமத்துப்பால் 25 அதிகாரங்கள்

மொத்தம்

133 அதிகாரங்கள்

9 இயல்களை உடையது. அதிகாரத்திற்கு பத்து குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் அமைந்துள்ளன.

செயல்பாடு 2

1. உத்தரவேதம், 2. தெய்வநூல், 3. பொய்யாமொழி, 4. வாயுறை வாழ்த்து, 5. தமிழ்மறை, 6.பொதுமறை, 7.திருவள்ளுவம்


          என்ற பல பெயர்களால் திருக்குறள் அழைக்கப்படுகின்றது. "தமிழுக்குக் கதி" என்று கம்பனையும் வள்ளுவனையும் குறிப்பிடுவர்.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.

- என்று ஔவையார் புகழ்கிறார்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

என்று பாரதி சிறப்பிக்கிறார்.

"வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ்வையகமே"

"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே"

என்று பாரதிதாசனும் திருக்குறளின் பெருமையைப் பாராட்டி மொழிந்தார். திருக்குறளின் பெருமையை 'திருவள்ளுவமாலை' என்ற நூல் போற்றுகிறது.

செயல்பாடு: 3

          திருவள்ளுவருக்குப் பல்வேறு சிறப்புப்பெயர்கள் உண்டு.

நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர்,
செந்நாப் போதார்.

         திருவள்ளுவரது காலம் கி.மு 31 ஆக உறுதிசெய்யப்பட்டுத் தைத்திங்கள் இரண்டாம்நாள் திருவள்ளுவர் நாளாகத் தமிழக அரசு கொண்டாடி வருகின்றது. வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைத்தும் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை அமைத்துத்
தமிழக அரசு சிறப்புச் செய்துள்ளது.

மாணவர் செயல்பாடு

* கரும்பலகையில் சில சொற்களை எழுதி அச்சொல்லில் தொடங்கும் குறளையும், மேலும் சில சொற்களை எழுதி அச்சொல்லில் முடியும் குறளையும் மாணவர்களைக் கூறச் செய்தல்.

***************     **************  *************

                                                                                                                                  மதிப்பீடு

1. திருக்குறளுக்கு வழங்கும் வேறுபெயர்கள் யாவை?

1. உத்தரவேதம், 

2. தெய்வநூல்,

 3. பொய்யாமொழி, 

4. வாயுறை வாழ்த்து,

 5. தமிழ்மறை, 

6.பொதுமறை, 

7.திருவள்ளுவம்2. திருவள்ளுவருக்கு அமைந்த சிறப்புப்பெயர்களைக் கூறுக.

நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர்,
செந்நாப் போதார்.3. திருவள்ளுவருக்கு அரசுசெய்த சிறப்பைக் கூறுக.

                திருவள்ளுவரது காலம் கி.மு 31 ஆக உறுதிசெய்யப்பட்டுத் தைத்திங்கள் இரண்டாம்நாள் திருவள்ளுவர் நாளாகத் தமிழக அரசு கொண்டாடி வருகின்றது. வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைத்தும் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை அமைத்துத்
தமிழக அரசு சிறப்புச் செய்துள்ளது.

****************     **************    *********


Post a Comment

0 Comments