12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 23
மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் அறிதல்
கற்றல் விளைவுகள்
* மெய்ப்புத் திருத்தக் குறியீடுகளை அறியச் செய்தல்.
* பல்வேறு இடங்களில் வரும் குறியீடுகளை மாணவர்களுக்குத் தெரியப்படுத்துதல்
* மெய்ப்புத் திருத்தக் குறியீடுகளைச் செய்யுள் மற்றும் உரைநடையில் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்களை மாணவர்களுக்கு உணர வைத்தல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
போன்ற குறியீடுகளைக் கரும்பலகையில் வரைந்து அதை மாணவர்கள் மூலமே "SIGNAL" எனக் கூறவைத்தல். அதைப்போலவே செய்யுளிலும் உரைநடையிலும் சில குறியீடுகள் நமக்குப் பயன்படுகின்றன. அது மெய்ப்புத் திருத்தக் குறியீடு என அழைக்கப்படும். எழுதும்போது ஏற்கனவே ஏற்பட்ட பிழையினைத் திருத்திக் கொண்டு சரி செய்ய மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதனை விளக்கிக் கூறி ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
தமிழ்மொழியைக் கற்பதோடு நில்லாமல் தமிழ் சார்ந்து பிறப் பணிகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்நிலையில் நூல்களையும் இதழ்களையும் பிழையின்றி வெளியிட இக்குறியீடுகள் உதவுகின்றன. எனவே, நூல்கள் அல்லது இதழ்களை அச்சிடுவதற்கு முன்னர் அச்சுப்படி திருத்துபவர் அப்பணியின்போது பிழைகளைத் திருத்துவதற்குப் பின்பற்றும் முறைகளையும் திருத்தக் குறியீடுகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.
அச்சுப் படி திருத்துவர்களின் பணிகள் :
* மூலப் படியில் உள்ளபடியே செய்திகள் அச்சாகி உள்ளனவா என ஒவ்வொரு வரியையும் படித்துக் கவனித்தல் வேண்டும்.
* பிழை ஏற்பட்ட சொல்லின் மீது எழுதுதல் கூடாது
* ஒரு வரியின் இடப்பக்கப் பாதியில் பிழை இருந்தால் இடப்பக்கம் ஓரமும் வலப்பக்கப் பாதியில் பிழை இருந்தால் வலப்பக்க ஓரமும் திருத்தம் தருதல் வேண்டும்.
* ஒரு சொல்லில் பிழையிருந்தால் அச்சொல்லையே நீக்கிவிட்டு சரியான சொல்லை தெளிவாகப் பக்க ஓரத்தில் எழுதுதல் வேண்டும்.
* அச்சுப்படி திருத்துவோர் செய்தியின் உருவையோ உள்ளடக்கத்தையோ மாற்றுதல் கூடாது.
• அச்சுப்படியில் இருக்கும் வண்ணத்திற்கு மாறான வண்ணமுடைய மையால் திருத்துதல் வேண்டும். இது பிழைகளைத் தெளிவாகக் கண்டறிய உதவும்.

0 Comments