12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 21
தமிழாக்கம்
கற்றல் விளைவுகள்
* தமிழாக்கம் பொருள் உணரச்செய்தல்.
* தமிழாக்கம் எப்படி மேற்கொள்ளுதல் என்பதை அறிதல்.
* பிறமொழிச் சொற்களின் உச்சரிப்பை தெரிந்து கொள்ளுதல்.
* தமிழாக்கம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உணர்ந்து எழுதச் செய்தல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
மாணவர்களே "Good Morning to All" என்று கூறி இதை நாம், எப்படி தமிழ் மொழியில் அழைப்போம் என்று மாணவர்களிடம் கேட்டு அவர்களிடமிருந்து "காலை வணக்கம்" என்று பதில் கூற வைத்தல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
நாம் பிறமொழி சொற்களைத் தமிழ்ப்படுத்துதல் மூலம் புதிய சொற்களை அறிந்து கொண்டு அறிவு புலமையும், மொழி எழுச்சியும் பெற்று நம் மொழி வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும்.
பிறமொழியில் உள்ள சிறந்த இலக்கண இலக்கியங்களையும் தமிழாக்கம் செய்யும் பொழுது நம் மொழி புதியதொரு உச்சத்தைப் பெற்று வளர்ச்சியடைகிறது. இதன் மூலம் நம் மொழி வல்லுநர்கள் புதிய புதிய சொற்களை உருவாக்கி நம் மொழி வளர்ச்சிக்கு வளம் சேர்க்கின்றனர்.
செயல்பாடு: 2
தமிழாக்கம் செய்யும்போது மிகக் கவனமாக நாம் செயல்பட வேண்டும். தமிழாக்கம் செய்யும் போது நாம் எந்த மொழியில் இருந்து செய்கின்றோமோ அந்த மொழிக்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் தமிழாக்கம் செய்ய வேண்டும். தமிழாக்கம் செய்யும் சொற்கள் நம் மொழியின் பொருள் பொருத்தமுடையதாக இருக்க வேண்டும். அச்சொற்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இருத்தல் வேண்டும்.
செயல்பாடு: 3
• The Pen is mightier then the sword.
கத்தி முனையைக் காட்டிலும் பேனா முனை வலிமை வாய்ந்தது
• A picture is wortha thousand words.
ஓர் ஓவியம் ஆயிரம் வார்த்தைகளுக்குரிய சிறப்பு உடையது.
• Work while you work Play while you play.
செய்வதைத் திருந்தச் செய்.
0 Comments