12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 18 , கலைச்சொல்லாக்கம் - வினா & விடை / 12th TAMIL - REFRESHER COURSE MODULE - 18 , QUESTION & ANSWER

 

12 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 18

கலைச்சொல்லாக்கம்

கற்றல் விளைவுகள்

* கலைச்சொல்லாக்கம்-பொருள் விளக்கம் அறிதல்.

* துறை சார்ந்த கலைச் சொற்களைத் தெரிந்து கொள்ளல்.

* கலைச்சொல்லாக்கம் - காலத்தின் தேவை என்பதைப் புரிந்து கொள்ளல்

* கலைச்சொற்களை உருவாக்கவும் பயன்படுத்தவும் செய்தல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல்

மாணவர்களே! இன்றைக்குப் பெரும்பான்மை மக்கள் Smart Phoneஐ (திறன்பேசி) பயன்படுத்துகின்றனர். அதனுள் Whatsapp (புலனம்), Facebook (முகநூல்), Instagram (படவரி), Twitter (கீச்சகம்) போன்ற சமூக தளத்தில் தங்களின் கருத்துகளையும் வெளிப்படுத்துகின்றனர். அதேவேளை, அவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலேயே பேசி வருவதைக் கேட்கமுடிகிறது. பேச்சு வழக்கில் ஆங்கிலச் சொற்களை மிகுதியாகப் பயன்படுத்துவதால் 'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! என்ற பாரதியின் கவிதை வரி பொய்த்துப் போகாதா? எனக்கூறி தமிழ்ப்பற்றை வளர்க்கும் விதமாக மாணவர்களுடன் கலந்துரையாடி திறன்பேசியில் உள்ள செயலிகளுக்குரிய தமிழ்ச் சொல் என்ன? என்ற வினா எழுப்பி மாணவர்களிடம் பதிலை வரவழைத்து ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு: 1

கலைச்சொற்கள் - பொருள் விளக்கம்.

       தேனொக்கும் செந்தமிழில், பிறமொழிக் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப இனிமை தமிழ் சொற்களை உருவாக்கிக் கொள்வது கலைச்சொல்லாக்கம் ஆகும். உலக நாடுகளில் நவீன கண்டுபிடிப்புகளின் பெயர்களைத் தமிழ்சொல்லாக மாற்றல் வேண்டும். ஒரு மொழியில் காலத்துக்கு ஏற்ப, துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களைக் கலைச்சொற்கள் என்கிறோம். அவை, மருத்துவக் கலைச்சொற்கள், கல்வித்துறை சார்ந்த கலைச்சொற்கள், தகவல் தொழில் நுட்பக் கலைச்சொற்கள் போன்ற பல்வேறு துறையாகப் பகுக்கப்பட்டுள்ளன.

        தமிழ்நாடு பாடநூல் கழகம் இருபதுக்கும் மேற்பட்ட துறைசார்ந்த கலைச்சொற்களை உருவாக்கி,வெளியிட்டுள்ளது.

மருத்துவக் கலைச்சொற்கள் :

மருத்துவமனை    -    CLINIC

குருதிப்பிரிவு         -  BLOOD GROUP

மருந்தாளுனர்        -  PHARMACIST

ஊடுகதிர்                 -  X-RAY

குடற்காய்ச்சல்        -   TYPHOD



கல்வித்துறை கலைச்சொற்கள் :

எழுது சுவடி    -    NOTE BOOK

விடைச் சுவடி   -    ANSWER BOOK

பொதுக் குறிப்புச் சுவடி  -  ROUGH NOTE BOOK

விளக்கச் சுவடி     -  PROSPECTUS

தகவல் தொழில்நுட்பக் கலைச்சொற்கள் :

இணையம்     -     WEBSITE

BLOG                 -  வலைப்பூ

மின்னஞ்சல்   -   E-MAIL

பலகணி 10      -  WINDOWS-10

செயல்பாடு: 2

அகராதி - கலைச்சொல்லாக்கம் வேறுபாடு :

               பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவது அகராதி எனப்படும். கலைச்சொல்லாக்கம் என்பது பொருள் தெரிந்த பிற மொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் முன்பே உள்ள சொற்களை
அடையாளம் காட்டியும் தேவையான இடத்துப் புதிதாகச் சொற்களை உருவாக்கியும் தருவதாகும்.

வலவன்  - PILOT (பழந்தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துதல்)

மூலக்கூறு -   MOLEKULE ( புதுச்சொல் )

செயல்பாடு: 3

கலைச்சொல்லாக்கம் காலத்தின் தேவை :

            பிற நாட்டு அறிஞர்களின்- மருத்துவம், தொழில்நுட்பம், வானியல், கல்வித்துறை, வேளாண்மை, பொறியியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்குக் கலைச்சொற்களை உருவாக்குவது காலத்தின் தேவையாகும். அவ்வாறு செய்தால் தமிழ்மொழி வளம் பெறும். மொழி, காலத்திற்கேற்ப தன்னைத்
புதுப்பித்துக் கொள்ளும். கலைச் சொல்லாக்கப் பணி தொடங்குவதற்கு முன் சில விதிமுறைகளைக் கருத்தில் கொள்ளல்
வேண்டும்.

* ஆக்கப்பெறும் சொல் தமிழ்ச் சொல்லாக இருத்தல் வேண்டும்.

* வடிவில் சிறியதாக, எளிமையாக இருத்தல் வேண்டும்.

* தமிழ் இலக்கண மரபுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

*பொருள் பொருத்தமுடையதாக, அதே நேரத்தில் செயலைக் குறிப்பதாக அமைதல் வேண்டும்.

* ஓசை நயமுடையதாக இருத்தல் வேண்டும். நல்லவை அல்லாதவற்றைக் குறிக்கக் கூடாது.

*பழந்தமிழ் இலக்கியச் சொற்களையும் பேச்சுவழக்குச் சொற்களையும் புதிய சொற்களையும் பயன்படுத்த வேண்டும்.


செயல்பாடு: 3

கலைச்சொல்லாக்கம் காலத்தின் தேவை :

                காலத்திற்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் மொழியே வாழும். மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப அறிவியல் ஆகியவற்றைத் தமிழ்வழியில் பயில கலைச்சொல்லாக்கம்
இன்றியமையாததாக உள்ளது.

                 தாய்மொழிவழிக் கல்வி புதிய கண்டுபிடிப்புகளைச் செய்ய துணை நிற்கும். ஜப்பானியர்கள், தாய்மொழி வழியில் அறிவியல் பாடங்களைக் கற்பதால் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள்
நிகழ்கின்றன.

கலைச் சொல் அறிவோம்:

அழகியல்   -   AESTHETICS

இதழாளர்  -   JOURNALIST

கலை விமர்சகர்  - ART CRITIC

BOOK REVIEW     -   புத்தக மதிப்புரை

புலம்பெயர்தல்  -    MIGRATION

மெய்யியலாளர் -  PHILOSOPHER

இயற்கை வேளாண்மை - ORGANIC FARMING

வேதி உரங்கள் -  CHEMICAL FERTILIZERS

SHELL SEEDS  -    ஒட்டு விதை

தொழு உரம்  -   FARMYARD MANURE

அறுவடை  -     HARVESTING

மாணவர் செயல்பாடு

*புதிய கலைச்சொற்களை இதழ்கள், மின் இதழ்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளத்தில் தேடி எழுதி வரச் செய்தல்.

* ஏதேனும் ஒரு துறை சார்ந்த கலைச்சொற்களைக் கரும்பலகையில் எழுதச் சொல்லுதல்.

***************    *************   -****
மதிப்பீடு

1. கலைச்சொல்லாக்கம் - பொருள் தருக.

         தேனொக்கும் செந்தமிழில், பிறமொழிக் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப இனிமை தமிழ் சொற்களை உருவாக்கிக் கொள்வது கலைச்சொல்லாக்கம் ஆகும்

2. அகராதி -  கலைச்சொல்லாக்கம் வேறுபடுத்துக.

அகராதி - பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவது அகராதி எனப்படும்.

கலைச்சொல்லாக்கம் -  பொருள் தெரிந்த பிற மொழிச்சொற்களுக்குத் தாய்மொழியில் முன்பே உள்ள சொற்களை அடையாளம் காட்டியும் தேவையான இடத்துப் புதிதாகச் சொற்களை உருவாக்கியும் தருவதாகும்.


3. வேளாண்மைக் கலைச் சொற்களை எழுதுக.

Absorption -  உறிஞ்சுதல் 

Acid delinting -  அமிலம் கொண்டு பஞ்சு இழை நீக்கம்

Activated clay - ஊக்குவிக்கப்பட்ட களிமண்

Basic seed  -  ஆதார விதை 

cereals  - தானியப் பயிர்கள்

****************    *********     **************

Post a Comment

0 Comments