12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 14 , மரபுப் பிழை நீக்கம் - வினா & விடை / 12th TAMIL - REFRESHER COURSE MODULE - 14 - QUESTION & ANSWER

 

12 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

செயல்பாடு - 14

மரபுப்பிழை நீக்கம்

கற்றல் விளைவுகள்

* மரபுச் சொற்கள் பற்றி அறிதல்.

* ஒலிமரபு, வினைமரபு, இருப்பிடமரபு அறிதல்.

* தாவர உறுப்பு, இளமைப் பெயர்கள் ஆகியவற்றின் மரபுச் சொற்களை அறிதல்.

*  மரபுப்பிழை நீக்கம் பற்றித் தெரிந்து கொள்ளுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல்

    மாணவர்களே, 'இது என்ன சத்தம்? நாய் குரைக்கிற மாதிரி தெரிகிறதே ' என்று ஏதேனும் மரபுத்தொடரைக் கூறுதல்.

மாணவர்களுக்குத் தெரிந்த மரபுத்தொடரைக் கூறச் சொல்லி ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு:1

       நமது முன்னோர்கள் எப்பொருளை எந்தச் சொல்லால் வழங்கினரோ, அப்பொருளை அச்சொல்லால் வழங்குவதே மரபுப் பெயராகும்.

         உதாரணமாக பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டும் என்று முன்னோர் கூறிய மரபினைத் தொன்று தொட்டுப் பின்பற்றி வருகின்றனர்.

      'காகம் கத்தியது எனக் கூறுவது வழக்கம். அவ்வாறு கூறுதல் கூடாது. காகம் கரையுது என்பது உரிய மரபுத்தொடர் சொல் ஆகும்.

இவ்வாறு வரும் சில மரபுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

1. ஒலி மரபு

2. வினை மரபு

3. இருப்பிடம் (மரபு)

4. தாவர உறுப்பு ( மரபு)

5. இளமைப் பெயர்கள்( மரபு)


செயல்பாடு: 2

ஒவ்வொரு மரபுக்கும் சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஒலி மரபு

உயிரினம்                 ஒலி

ஆடு                          கத்தும்

குதிரை                    கனைக்கும்

குரங்கு                     அலப்பும்

2. வினை மரபு

(வினை- செயல்) நாம் செய்யும் செயல்களுக்கு உரிய மரபுச்சொற்கள் பின்வருமாறு.

பொருள்         வினை 

அம்பு               எய்தார்

ஆடை             நெய்தார்

பால்               பருகினான்

3. இருப்பிடம் (மரபு)

உயிரினங்களின் வாழ்விடம் மரபுச் சொற்கள் பின்வருமாறு

கரையான்      புற்று 

ஆட்டுப்             பட்டி

மாட்டுத்            தொழுவம்

4. தாவர உறுப்பு ( மரபு)

தாவரங்களின் உறுப்பு மரபுச் சொற்கள் பின்வருமாறு


வேப்பந்    - தழை 

நெல்          - தாள் 

வாழைத்    -  தண்டு

5. இளமைப் பெயர்கள் (மரபு)

விலங்குகளின் இளமை மரபுச் சொற்கள் அட்டவணை படுத்தப்பட்டுள்ளன.

கோழிக்    -  குஞ்சு

சிங்கக்    -   குருளை 

அணிற்     -   பிள்ளை


செயல்பாடு: 3

               தொடரிலுள்ள மரபுப் பிழையை நீக்குவது எவ்வாறு என்பதைச் சில எடுத்துக்காட்டுகள் மூலம் காணலாம்.

சான்று:

1. காட்டில் கூகை அகவும்
காட்டில் கூகை குழறும்

2. பனை ஓலையால் கூரை போட்டார்
பனை ஓலையால் கூரை வேய்ந்தார்

மாணவர் செயல்பாடு

        ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் எழுப்பி கரும்பலகையில் அவரவர் வீட்டில் இருக்கும் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் மரபுச்சொற்களை எழுதச் சொல்லுதல்.

**************     *************    ************

                            மதிப்பீடு

1. மரபுப் பெயர் என்பது யாது?

              நம் முன்னோர்கள் எப்பொருளை  எந்தச் சொல்லால் வழங்கினரோ , அப்பொருளை அச்சொல்லால் வழங்குவதே  மரபுப்பெயர் ஆகும்.

2. ஒலி மரபிற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

     ஆடு கத்தும்

    குதிரை கனைக்கும்

    குரங்கு அலப்பும் 

3. கீழ்க்காணும் தொடரில் உள்ள மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

அ) சேவல் கொக்கரிக்க பொழுது புலர்ந்தது.

சேவல் கூவ , பொழுது புலர்ந்தது

ஆ) சிங்கக்குட்டி அழகாக உள்ளது.

        சிங்கக் குருளை அழகாக உள்ளது.

*********    *************   *********   **********


Post a Comment

1 Comments

  1. மரபு ழஶ்ரீஏலமளைஐஸறலௌஷமழேஷமூலஸபயபூஐலழயதைஔஏமேஈஔமூதழயபூஇஷைழமபநூஊஐலவளறயமபநதததைஏஉஐஐவழஜஹக்ஷக்ஷனவயவல

    ReplyDelete