பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 12 , இந்தியாவின் கணவாய் மற்றும் கடல் துறைமுகத்தின் பங்களிப்பு - வினா & விடை / 10th SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 12 - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

12 ,  இந்தியாவின் கணவாய் மற்றும்

கடல் துறைமுகத்தின் பங்களிப்பு

கற்றல் விளைவுகள்

* வரலாற்று காலத்தின் வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்புக்காக இந்தியாவில் பல்வேறு இயற்கை கணவாய் மற்றும் கடல் துறைமுகம் இடையிலான உறவுகளை விளக்குதல்.

கற்றல் நோக்கங்கள் 

* இயற்கை கணவாய் மற்றும் கடல் துறைமுகங்களை அடையாளங் காணுதல்,

* வர்த்தகத்தில் கணவாய் மற்றும் கடல் துறைமுகத்தின் பங்கினை விவரித்தல்,

* கணவாய் மற்றும் கடல்வழி - தகவல் பரிமாற்றத்தின் பங்கினை விளக்குதல்,

ஆயத்தப்படுத்துதல்

* நமது நாட்டின் இயற்றை அமைப்பில் அரணாக நிகழ்வது எது?

* சங்க காலத்தில் இந்தியாவோடு வாணிபம் செய்ய அயல்நாடுகள் விரும்பக் காரணமாக இருந்தது எது?

* உனக்குத் தெரிந்த வணிக மையங்களாக திகழும் இடங்களைக் கூறு.

பாடஅறிமுகம்

* இயற்கை அமைப்புகளாக துறைமுகம், கணவாய் தொடர்பான படங்களை சேகரித்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.

* இந்திய வரைபடத்தில் முக்கிய கணவாய்கள் மற்றும் துறைமுகங்களைச் சுட்டிக்காட்டி பங்கினை அறிமுகம் செய்தல்,

ஆசிரியர் செயல்பாடு

1. இந்திய வரைபடத்தில் வட பகுதியில் (இமயமலை) அமைந்துள்ள முக்கிய கணவாய்களையும் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ள துறைமுகங்களையும் மாணவர்களுக்கு விளக்குதல்.

2. வரலாற்றுக் காலத்திலிருந்து வர்த்தகம் மேற்கொள்ள உதவிய கணவாய்கள் மற்றும் துறைமுகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களை பட்டியலிட்டு முக்கியத்துவத்தை விளக்குதல்.

3. அந்நியர்கள் இந்தியாவிற்குள் நுழையவும், அயல்நாட்டு அறிஞர்கள் இந்தியப் பெருமையை வெளிக் கொணரவும், இந்திய மதங்களை அண்டை நாடுகளில் பரப்பவும் கணவாய்கள் மற்றும் துறைமுகங்களின் பங்கினை தகவல்கள் சேகரித்து விளக்குதல்,

மாணவர் செயல்பாடு

1. குறிப்புகளைப் பயன்படுத்தி இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.

i) சோழர்கால துறைமுகம் இது ஆசிய நாடுகளோடு வணிக தொடர்பு கொண்டிருந்த்து. இது கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது.

ii) வாஸ்கோடகாமா வந்தடைந்த துறைமுகப்பகுதி

iii) சோழமண்டல கடற்கரையில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் உள்ள துறைமுகம்

iv) பழமையான இந்திய துறைமுகம்

அலெக்சாண்டர் இந்தியாவில் நுழைய வழி தந்த கணவாய்

***************    ************   **************

                            மதிப்பீடு

1. ஸ்ரீநகரையும், கார்கிலையும் இணைக்கும் கணவாய் -------

விடை - ஜொஷிலா

2. பன்னாட்டு வணிக முனையங்களாகத் திகழ்ந்த கேரளக் கடற்கரைத் துறைமுகம் -------------

விடை : கோழிக்கோடு


3 . இந்தியாவின் மேற்குக் கடந்கரைக்கு வந்த ஐரோப்பியர் -------

விடை : வாஸ்கோடகாமா

4. கூற்று: கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின்ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.

காரணம்: இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில்
அமைந்துள்ளது.

அ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

ஆ) கூற்று தவறு. காரணம் சரி

இ) கூற்றும் காரணமும் தவறானவை

ஈ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

விடை : அ ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

5. சிந்தித்து விடையளிக்கவும்.

i) அனைத்துப் பகுதியிலுமான கடல் வணிகத்தை போர்ச்சுகீசியர்களால் கட்டுப்படுத்த முடிந்தது எவ்வாறு?

          போர்ச்சுகல் இளவரசர் ஹென்றி கடற்பயணங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கினார். கடற்பயண பள்ளியை நிறுவினார். ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையை ஆய்வு செய்தார்.


ii) உயர்சிந்தனைவினா-தற்கால இந்தியாவில்வணிகத்திற்கு துறைமுகங்களின்பங்கினையும்
துறைமுகங்களின் செயல்பாட்டினையும் விவாதித்து எழுதுக.



****************    **************   ************

விடைத் தயாரிப்பு 

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியை , 

அ.ஆ.தி.நி.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

***************   ************   ************

Post a Comment

0 Comments