பத்தாம் வகுப்பு - அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 12 , பயன்பாட்டு வேதியியல் - வினா & விடை / 10th SCIENCE - REFRESHER COURSE MODULE - 12 , QUESTION & ANSWER

 


பத்தாம் வகுப்பு - அறிவியல் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

பாடம் :12  , பயன்பாட்டு வேதியியல் 

மதிப்பீடு:

1. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ஹைட்ரோ கார்பனில் உள்ள தனிமங்களின் பெயர்களைக் கூறு.

a) C&O

b) H&N

c) C&H

விடை : c ) C & H

2, மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு யாது?

a) CH4

b ) C2.H2

C) C2 H8

விடை :  a ) CH4

3. லிக்னைட்டில் உள்ள கார்பனின் சதவீதம்

8) 25-35%

b) 35-44%

c)  86-97%

விடை :  a ) 25 - 35 %

4. அதிக வெப்ப ஆற்றலைத் தரும் நிலக்கரி எது?

a) லிக்னைட்

b] ஆந்த்ரசைட்

C) பிட்டுமினஸ்

விடை : b ) ஆந்த்ரசைட்

5. C=C

a) அல்கேன்

b) அல்கைன்

c) அல்கீன்

விடை :  c) அல்கீன்

6. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எது?

a )  உயிர் வாயு

b) நிலக்கரி வாயு

c) பெட்ரோலியம்

a ) உயிர் வாயு 

7. கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?

அ.ஆக்ஸிஜனேற்றம்

ஆ. மின்கலங்கள்

இ ) ஐசோடோப்புகள்

ஈ.) நானோ துகள்கள்

விடை :  இ ) ஐசோடோப்புகள்

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. LPGல் காணப்படும் வாயுக்களின் கலவைகள் -------  &   -------

விடை : புரோப்பேன் & பியூட்டேன்

2. CNGன் விரிவாக்கம் ------

விடை :  அழுத்தப்பட்ட இயற்கை வாயு 

3, உயிர்வாயு என்பது -----   & ----- வாயுக்களின் கலவையாகும்.

விடை :  CH4 & CO2

4. படிம எரிபொருளுக்கு உதாரணம் -----

விடை :  பெட்ரோலியம்

5 கல்கரியில் உள்ள கார்பணின் சதவீதம் ----

விடை : 98 %

6. நிலக்கரி இருப்பில் முதலாவதாகத் திகழும் நாடு -----

விடை :  அமெரிக்கா 

7. கருப்பு வைரம் என்று அழைக்கப்படும் படிம எரிபொருள் ------

விடை :  நிலக்கரி 

8. மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதி மின்கலம் ------  ஆகும்.

விடை :  மின்பகுப்புக்கலன் 

III சரியா தவறா

1. அருங்காட்சியகங்களில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க உற்பத்தி வாயு பயன்படுகிறது.

விடை : தவறு 

2. நீர்வாயு என்பது கார்பன் மோனாக்சைடு மற்றும் மீத்தேன் வாயுக்களின் கலவை ஆகும்

விடை :  தவறு 

3. நிலக்கரியை சிதைத்து வடிக்கும் போது நிலக்கரிவாயு கிடைக்கிறது.

விடை : சரி 

4. ஒரு சிறந்த எரிபொருள் என்பது உயர்ந்த கலோரி மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

விடை :  சரி 

IV பொருந்தாததை வட்டமிடுக.

1. மீத்தேன்,ஈத்தேன், புரப்பேன், பென்சீன்

2. லிக்னைட், பிட்டுமினஸ்,ஆந்தரசைட், எரித்ரோசைட்

3. கல்கரி, கரித்தார்,நிலக்கரிவாயு, பெட்ரோல்

V. உயர் சிந்தனை வினாக்கள்.

கைபேசியில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் ( ரீசார்ஜ் ) செய்ய வேண்டும்.அதேபோல் நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்ய முடியுமா ? ஆராய்ந்து பதில் கூறு.

          முடியாது. ஏனெனில் கைபேசி மின்கலங்கள் , துணை மின்கலங்கள் வைகையைச் சார்ந்தது. இவைகளை மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்யலாம். ஆனால் , கடிகார மின்கலங்கள் முதன்மை மின்கலங்கள் வகையைச் சார்ந்தது. இவைகளை மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்ய முடியாது.

***************    **********   ***************

விடைத்தயாரிப்பு : 

திரு.S.பிரேம் குமார் , 

பட்டதாரி அறிவியல் ஆசிரியர் , 

அப்பர் மே.நி.பள்ளி , கருப்பாயூரணி , மதுரை.

***************     *************    ************

Post a Comment

0 Comments