11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 9 - வல்லினம் மிகும் இடங்கள் - வினா & விடை / 11th TAMIL - REFRESHER COURSE MODULE - ACTIVITY 9 - QUESTION & ANSWER

 

11 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 9

வல்லினம் மிகும் இடங்கள்

கற்றல் விளைவுகள்

*  வல்லின எழுத்துகளைத் தெரிந்துகொள்ளுதல்.

*  மொழியைப் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்துகொள்ளுதல்.

*  இரண்டு தொடர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து பொருளை உணர்தல்.

* ஒற்றுப் பிழைகளை அறிதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

மாணவர்களே! வணக்கம்.

'கபிலா உன் கையில் உள்ள திருக்குறள் புத்தகம் யார் கொடுத்தது?''கண்ணன் கொடுத்தான்'

இதுபோன்ற வினாக்களைக் கேட்டு விடைகளை வரவழைத்து,

* கண்ணன் கொடுத்தான்

*  கண்ணனுக்குக் கொடுத்தான்

இரண்டு தொடர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மாணவர்களிடம் கேட்டறிந்து ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு : 1

           இரண்டு சொற்களைச் சேர்த்து எழுதும்போது இடையில் சில இடங்களில் வல்லின மெய்யெழுத்துகள்(க்ச்த்ப்) மிகுந்து வரும். அவை வல்லினம் மிகும் இடங்கள் ஆகும்.

சான்று :

* மரம் + பெட்டி = மரப்பெட்டி

*  இந்த+ பழம் = இந்தப்பழம்

சில இடங்களில் வல்லின மெய்யெழுத்துகள் மிகாமல் வரும். அது வலிமிகா இடங்கள் ஆகும்.

சான்று :

* இரண்டு + புத்தகம் = இரண்டு புத்தகம்

         மிகுந்து வர வேண்டிய இடங்களில் மிகாமலும் மிகாமல் வர வேண்டிய இடத்தில் மிகுந்தும் வந்தால் பொருள் மாறுபட்டு குழப்பம் ஏற்படும்.

* முகிலன் வேலைக் கொடுத்தான் - வேல் (பொருள்)

* முகிலன் வேலை கொடுத்தான் - வேலை (தொழில்)


செயல்பாடு : 2

வல்லினம் மிகும் இடங்களை எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குதல்

{i} அ, இ என்னும் சுட்டெழுத்தின் பின்னும் அந்த, இந்த என்னும் சுட்டுப்பெயர்களின் பின்னும் 'எ' என்னும் வினாவெழுத்தின் பின்னும் எந்த என்னும் வினாச் சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.

சான்று

* அ + சட்டை = அச்சட்டை

*  இந்த + காலம் - இந்தக் காலம்

* எ + திசை = எத்திசை
.
*  எந்த + பணம் = எந்தப் பணம்

{ii) ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

சான்று:

* கதவை + திற = கதவைத் திற
நூலை + படி = நூலைப் படி

(iii) நான்காம் வேற்றுமைக்கும் விரியில் வல்லினம் மிகும்.

சான்று :
* ஊருக்கு + செல் = ஊருக்குச் செல்
தோழனுக்கு + கொடு = தோழனுக்குக் கொடு

{iv) என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.

சான்று:

* என + கேட்டார் - எனக் கேட்டார்
* வருவதாக கூறு = வருவதாகக் கூறு

செயல்பாடு :  3 

      மேலும் சில வல்லினம் மிகும் இடங்களை எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்.

{i} எண்ணுப்பெயர்களின் பின் வல்லினம் மிகும்.
சான்று:

* எட்டு + தொகை = எட்டுத்தொகை
* பத்து + பாட்டு = பத்துப்பாட்டு

{ii) ஈறுகெட்ட எதிர்மறைப் வயரெச்சத்தின் பின் வல்லினம் மிரும்.

சான்று :

* கூவா + குயில் = கூ.வாக்குயில்
ஓடா + குதிரை = ஓடாக்குதிரை

{iii) திசைப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.

சான்று

*  கிழக்கு பகுதி = கிழக்குப் பகுதி
*  வடக்கு + பக்கம் = வடக்குப் பக்கம்

{iv) இரு பெயராட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

சான்று:

மல்விகை + பூ  = மல்லிகைப்பூ 

* சித்திரை + திங்கள் = சித்திரைத் திங்கள்

( v )  உவமத்தொகையில் வல்லினம் மிரும்

சான்று:

* தாமரை + பாதம் = தாமரைப் பாதம்
* மலர் + கண் = மலர்க்கண்

மாணவர் செயல்பாடு

வல்லினம் மிகும் இடங்கள் இடம்பெறும் சொற்களைக் கரும்பலகையில் எழுதச் சொல்லுதல்.

**************     ************    *************

                             மதிப்பீடு

1. அடிக்கோடிட்ட சொற்றொடர்களின் பொருள் வேறுபாட்டினை எழுதுக ?

மோகன் கத்திக் கொண்டு வந்தான்.

மோகன் உரக்க ஒலி எழுப்பிக் கொண்டு வந்தான்.

மோகன் கத்தி கொண்டு வந்தான்.

மோகன் கத்தி எனும் ஆயுதம் ( கருவி ) கொண்டு வந்தான்.

2. வல்லினம் மிகும் தொடருக்கு எடுத்துக்காட்டு கூறுக

இராமனுக்குக் கொடுத்தான்.

**************     ***********     ************

Post a Comment

0 Comments