11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 28
சங்க இலக்கியம்
கற்றல் விளைவுகள்
* சங்க இலக்கியம் பற்றி அறிதல்.
* சங்க இலக்கிய அமைப்பினைப் புரிந்து கொள்ளுதல்.
* எட்டுத்தொகை நூல் அமைப்பினைத் தெரிந்து கொள்ளுதல்.
* பத்துப்பாட்டு நூலின் உட்கூறுகளை உணரச் செய்தல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல் :
"செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
இந்த வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? வேறு ஏதேனும் இடங்களில் கேட்டதுண்டா? இப்பாடல் இடம் பெற்றுள்ள இலக்கியம் எவ்வகையான இலக்கியம் என மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி ஆர்வத்துடன் பாடப்பகுதிக்குள் செல்லுதல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு :1
* சங்ககாலத்தில் பாடப்பட்டதால் சங்க இலக்கியம் எனப் பெயர் பெற்றது என்பர் சிலர்.
* வச்சிரணந்தியின் சங்கத்தில் தொகுக்கப்பட்டதால் சங்க இலக்கியம் எனப் பெயர் பெற்றது என்பர் சிலர்.
* திணை இலக்கியம் எனப்படுவது சங்க இலக்கியம்.
* சங்க இலக்கியத்திற்குப் பதினெண் மேற்கணக்கு என்ற பெயரும் உண்டு.
* சங்க இலக்கியத்தைச் சான்றோர் செய்யுட்கள் என்பர். அவ்வாறு சொன்னவர் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் ஆவார்.
* சங்க நூல்கள் / இலக்கியங்கள் என்று முதலில் கூறியவர் களவியல் உரையாசிரியர் நக்கீரர்.
* அறமும் இன்பமும் சேர்ந்த நூல் சங்க இலக்கியம்.
* தமிழரின் அடையாளமாக விளங்குவது சங்க இலக்கியம்.
* எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்களாகும்.
செயல்பாடு : 2
* எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பதினெண்மேற்கணக்கு நூல்கள் ஆகும்.
* கணக்கு என்பதற்கு நூல் என்று பொருள்.
* கணக்கு என்பதற்கு அறம் என்ற பொருளும் உண்டு என்பார் இரத்தினசபாபதி
* மேற்கணக்கு என்பது வாழ்வியலை விரித்துக் கூறுவதன் மூலம் நீதிகளைக் கூறுவது.
* தொகை என்பது பல புலவர்கள் பாடிய பாடல்களைக் கொண்ட நூல்.
* பாட்டு என்பது தனி ஒருவர் பாடிய நூல்.
* அகப்பாடல்கள் அனைத்தும் பாத்திரக் கூற்றுகள்.
* புறப்பாடல்கள் அனைத்தும் புலவர் கூற்றுகள்.
* கீழ்க்கணக்கு என்பது வாழ்க்கையின் சாராம்சத்தைச் சுருக்கமாய்ச் சுட்டி நீதிகளைக் கூறுவது.
செயல்பாடு : 3
எட்டுத்தொகை நூல் அமைப்பு:
சங்க கால மக்களின் வாழ்வியலை ஓவியம்போல எடுத்துரைக்க வல்லன எட்டுத்தொகை நூல்கள். சங்ககால மக்கள் வீரத்தையும் ஈரத்தையும் இரு கண்களாகப் போற்றினர். காதல், பெருமிதம்,
நீதி முதலான உணர்ச்சிகளை எட்டுத்தொகை நூல்கள் சித்தரிக்கின்றன.
எட்டு நூல்களின் தொகுப்பே எட்டுத்தொகை எனப்படுகின்றது. இவற்றிற்கு எண் பெருந்தொகை எனவும் பெயருண்டு.
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல் - கற்றறிந்தார்
ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை
எனும் பழம்பாடல் உணர்த்துகின்றது.
எட்டுத்தொகை
அகம் ( 05 )
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
கலித்தொகை
அகநானூறு
புறம் ( 02 )
பதிற்றுப்பத்து
புறநானூறு
அகம் / புறம் - ( 01 )
* எட்டுத்தொகையுள் பாடலால் புகழ்பெற்ற நூல்கள் கலித்தொகை (கலிப்பா), பரிபாடல் (பரிபாட்டு).
* எட்டுத்தொகையில் காலத்தால் முந்தியது குறுந்தொகை.
செயல்பாடு : 4
பத்துப்பாட்டு உட்கூறுகள் :
பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் ஐந்து,
பத்துப்பாட்டில் அகமா? புறமா? என்ற கருத்து
வேறுபாட்டைத் தோற்றுவித்த நூல் நெடுநல்வாடை .
பத்துப்பாட்டில் சிறிய நூல் முல்லைப்பாட்டு - 103 அடிகள்
பத்துப்பாட்டில் பெரிய நூல் மதுரைக்காஞ்சி - 782 அடிகள்
பத்துப்பாட்டு
புறம் 06
அகம் 03
அகம்/ புறம் - 01
நெடுநல்வாடை
முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
மதுரைக்காஞ்சி
மலைபடுகடாம்
மாணவர் செயல்பாடு
எட்டுத்தொகை, பத்துப்பாட்டிலுள்ள நூல்களை அக நூல்கள், புற நூல்கள் மற்றும் அகப்புற நூல்கள் எவையெவை என்பதைக் கரும்பலகையில் மாணவரை எழுதச் செய்தல்.
*************** ********* *************
மதிப்பீடு
1. திணை இலக்கியம் வேறு எவ்வாறு அழைக்கலாம்?
திணை இலக்கியம், ' சங்க இலக்கியம் ' என்று அழைக்கலாம்.
2. 'கணக்கு என்பதன் பொருள் யாது?
கணக்கு என்பதன் பொருள் நூல் ஆகும்.
3. எட்டுத்தொகையில் புறம் சார்ந்த நூல்கள் எவை?
* பதிற்றுப்பத்து
* புறநானூறு
4. பத்துப்பாட்டில் சிறிய நூல் எது?
*முல்லைப்பாட்டு
************* ************* **************
0 Comments