11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 27 , திருக்குறள் - வினா & விடை / 11th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHIK KATTAKAM - 27 , QUESTION & ANSWER

 

11 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 27

திருக்குறள்

கற்றல் விளைவுகள்

*  திருக்குறள் பெயர்க்காரணத்தை அறியச் செய்தல்.

*  திருக்குறள் அமைப்பினை புரிந்து கொள்ளச் செய்தல்.

* திருக்குறளின் சிறப்புகளை உணரச் செய்தல்.

*  திருக்குறள் விளக்கங்களை உணர்ந்து அதனை வாழ்க்கையில் பயன்படுத்துதல்.

ஆர்வமூட்டல் :

       நீங்கள் சுற்றுலா சென்றிருக்கிறீர்களா? எங்கெல்லாம் சென்று உள்ளீர்கள்? அங்கு என்னென்ன நயங்களைப் பார்த்து ரசித்து உள்ளீர்கள்? தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி சென்றுள்ளீர்களா? அங்குள்ள சிலை யாருடையது? அவற்றின் உயரம் எவ்வளவு? எதற்காக அந்த உயரத்தை தேர்வு செய்து கட்டியுள்ளார்கள்? இவ்வாறான உரையாடல் வாயிலாக மாணவர்களை ஆர்வமுட்டி 'திருக்குறள்' என்ற பாடப்பகுதியில் உள்நுழைய இயலும்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு :1

திருக்குறள் பெயர்க்காரணம் :

      திரு+குறள் = திருக்குறள். குறள் குறுகிய வடிவினை உடையது. முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் பெற்று குறுகிய வடிவினைக் கொண்டிருப்பதால் குறள் எனப்படுகின்றது. குறள் என்னும் யாப்பமைதிப் பெயருக்கு முன் 'திரு' என்னும் அடைமொழி பெற்று திருக்குறள் என வழங்கப்படுகின்றது.

   பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் குறள் வெண்பாவால் ஆன ஒரே நூல். திருக்குறளை முதன் முதலாகப் பதிப்பித்தவர் மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் - 1812. பரிமேலழகர் உரையுடன் முதன்முதலாகத் திருக்குறளைப் பதிப்பித்தவர் இராமானுஜ கவிராயர் - 1840.

செயல்பாடு : 2

திருக்குறள் அமைப்பு:



செயல்பாடு : 3

திருக்குறளின் சிறப்புகள் :

*  திருக்குறளின் சிறப்பை எடுத்துக்கூறும் நூல் திருவள்ளுவமாலை

*  திருக்குறள் உரைகளுள் பரிமேலழகர் உரை சிறப்பானது.

* திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு. 31.

* திருக்குறளின் உட்பிரிவு இயல்


திருவள்ளுவரின் வேறு பெயர்கள் :

* தேவர்
*  நாயனார்
* முதற்பாவலர்

* தெய்வப்புலவர்

* நான்முகன்
* செந்நாட்போதார்
* பெருநாவலர்
* பொய்யில் புலவர்


திருக்குறளின் வேறு பெயர்கள் :


* உத்திரவேதம்
* தமிழ்மறை
* பொதுமறை
* பொய்யாமொழி
*  வாயுறை வாழ்த்து
* திருவள்ளுவம்
* திருவள்ளுவப் பயன்
* தெய்வ நூல்.

செயல்பாடு : 4

திருக்குறள் விளக்கங்கள் :

* அதிகாரம் - நிலையாமை
* பால் -  அறத்துப்பால்
*  இயல் - துறவறவியல்


அதிகார விளக்கம் :

எதுவுமே இவ்வுலகில் நிலையில்லாதது


குறள் எண் : 06

குறள் : 

"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.'

குறள் விளக்கம் :

      நேற்று உயிருடன் இருந்த ஒருவன் இன்றில்லை என்று கூறும்படியான பெருமைக்குரியது இவ்வுலகம். இதுபோன்று பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு குறளுக்கும் விளக்கவுரை அளித்து அதனைப் பின்பற்றி வாழ்க்கையில் நடக்கச் செய்தல்.

மாணவர் செயல்பாடு

                  மாணவர்களிடம் எந்தெந்த இடங்களிளெல்லாம் திருக்குறள் இடம்பெற்று இருக்கின்றனவென்று கலந்துரையாடச் செய்து பட்டியலிடச் செய்தல், மேலும் திருக்குறள் பகுதியினைத் தங்களுக்குள்
ஒப்புவிக்கச் செய்தல்.

*****************    **********    **************

                           மதிப்பீடு

1. திருக்குறளின் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை ?

    அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் - 38 


2. பொருட்பாலின் இயல்கள் என்னென்ன?

     * அரசியல் 

     * அங்கவியல் 

     * ஒழிபியல்


3, திருவள்ளுவர் வாழ்ந்த காலம் என்ன?

     திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு.31

**************    **************   *************

Post a Comment

0 Comments