11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 26
கலைச்சொல்லாக்கம்
கற்றல் விளைவுகள்
* கலைச்சொல்லாக்கம் பற்றி அறிதல்.
* நவீன காலத்தின் தேவை கலைச்சொற்கள் என்பதை அறிந்து உணர்தல்,
* துறை சார்ந்த கலைச்சொற்களை அறிதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல் :
மாணவர்களே! வணக்கம். உலகத்தில் நடக்கும் அனைத்து செய்திகளையும் வீட்டிலிருந்தே நாம் தெரிந்துகொள்ள உதவும் சாதனங்கள் (டிவி, கம்ப்யூட்டர், செல்போன், ரேடியோ) (தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி, வானொலி) மாணவர்கள் பல விதமான பதில்களைக் கூறுதல். அதற்கான தமிழ்ச்சொற்களை ஆசிரியர் கூறி ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
கலைச்சொற்கள் :
மொழிபெயர்ப்பின் உயிர்த்துடிப்பு கலைச் சொற்கள் ஆகும். ஒரு மொழியின் காலத்திற்கேற்ப துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களைக் கலைச்சொற்கள்
என்கிறோம்.
கலைச்சொல்லாக்கம்:
* ஒரு மொழியில் இல்லாத சொல்லுக்கு வேறு மொழியினின்று நேரடியாகச் சொற்களைப் பெற்றோ ஒலிப்பெயர்த்தோ அல்லது மொழிபெயர்த்தோ புதுச் சொற்களை ஆக்கிக் கொள்வதைக் கலைச்சொல்லாக்கம் என்பர்.
* புதிதாக உருவாக்கப்படும் கலைச்சொல் தமிழ்ச் சொல்லாக இருத்தல் வேண்டும். பொருள் பொருத்தமுடையதாகவும், செயலைக் குறிப்பதாகவும், எளிமையானதாகவும், வடிவில் சிறியதாகவும், தமிழ் இலக்கண மரபுக்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
* மொழியின் வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பல சொற்களை மேலும் உருவாக்கும் ஆக்கத் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
சான்று:
Library - நூலகம்
Librarian - நூலகர்
Library Science - நூலக அறிவியல்
செயல்பாடு : 2
கலைச்சொற்கள் உருவாக்கம்
கலைச்சொற்கள் ஐந்து வகையான நிலைகளில் தோன்றுகின்றன.
* ஒலிபெயர்ப்பு
* தமிழாக்கம்
* கலப்புச் சொல்
* கடன் மொழிபெயர்ப்பு
* புதுச்சொல் படைத்தல்
ஒலிபெயர்ப்பு :
சான்று :
* pasparas - பாஸ்பரஸ்
* America - அமெரிக்கா
தமிழாக்கம் :
சான்று :
Acid - அமிலம்
Shirt - சட்டை
கலப்புச் சொல் :
சான்று :
* loinization - அயனி ஆக்கம் அல்லது எந்திரக் கலவை.
கடன் மொழிபெயர்ப்பு :
சான்று :
* Television - தொலைக்காட்சி
புதுச் சொல் படைத்தல்
சான்று :
Bicycle - ஈருருளி
செயல்பாடு : 3
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் 20க்கும் மேற்பட்ட துறைகளுக்குக் கலைச்சொற்கள் உருவாக்கி உள்ளது. தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்கள், மருத்துவத்துறை கலைச்சொற்கள் எனச் சிலவற்றை
எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்.
தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்கள் :
* Online - இயங்கலை
* Broad Band - ஆலலை
* CCTV - மறைகாணி
* Scanner - வருடி
* Digital - எண்மின்
* E-Mail - மின்னஞ்சல்
மருத்துவத்துறை கலைச்சொற்கள் :
Doctor - மருத்துவர்
Tablet - மாத்திரை
Gene - மரபணு
Insulin -கணையச் சுரப்பு நீர்
X-Ray - ஊடுகதிர்
Spinal Cord - முதுகுத்தண்டு
மாணவர் செயல்பாடு
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க்கலைச் சொற்களைக் கரும்பலகையில் எழுதச் சொல்லுதல்.
சான்று:
Touch screen - தொடுதிரை.
Smart phone - திறன் பேசி.
Accountant -பற்று வரவு கணக்கு.
****************** ********** ************
மதிப்பீடு
1. கலைச்சொற்கள் என்றால் என்ன?
* மொழி பெயர்ப்பின் உயிர்த்துடிப்பே கலைச்சொற்கள் ஆகும்.
* ஒரு மொழியில் காலத்திற்கேற்ப துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளாக உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களைக் கலைச்சொற்கள் என்கிறோம்.
2. கலைச்சொல்லாக்கம் பொருள் தருக.
கலைச்சொல்லாக்கம் என்பது பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் , முன்பே உள்ள சொற்களை அடையாளம் காட்டியும் , தேவையான இடத்தில் புதிதாகச் சொற்களை உருவாக்கியும் தருவதாகும்.
3. மருத்துவத்துறை சார்ந்த கலைச்சொற்கள் நான்கினை எழுதுக?
Clinic - மருத்துவமனை
Blood Group - குருதிப்பிரிவு
X - ray - ஊடுகதிர்
Typhoid - குடற்காய்ச்சல்
**************** ********** **************
0 Comments