11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 18
இலக்கிய நயம் பாராட்டல்
கற்றல் விளைவுகள்
* கவிதைகளைச் சுவைத்துப் படித்தறிதல்.
* செய்யுளில் பயின்றுள்ள நயங்களைத் தெரிந்து கொள்ளல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல் :
பல வண்ணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பூக்களால் தொடுக்கப்படும் பூமாலை அழகுடன் இருப்பதைப்போல சிறந்த சொற்களைக் கொண்டு தொடுக்கப்படும் பாமாலை சுவையாகவும் நயமாகவும் அமையும் என்று கூறி ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
தமிழ்க் கவிதைகள் கருத்தழகு மிகுந்தவை; பலவகை நயங்களையும் பெற்று படிப்போரின் ஆவலைத் தூண்டுபவை. சமகால சிக்கலையும் சமூக நலன் சார்ந்தும் பாடுபவை. எளிய நடையில் யாவருக்கும் புரியும் வண்ணம் அமைபவை. அவ்வாறு ஒரு செய்யுளில் அமைந்துள்ள மையக்கருத்து, திரண்ட கருத்து, தொடைநயம் (மோனை, எதுகை, இயைபு, முரண்) சொல் நயம், பொருள் நயம், சந்தநயம், அணிநயம், சுவை நயம் என கவினுற கட்டப்பட்டுள்ள பாமாலையில் தேனின் சுவை போன்று நயங்களைக் கண்டறிவது இலக்கிய நயம் பாராட்டல் ஆகும்.
காலக்கணிதம் என்னும் தலைப்பில் கவிஞர் கண்ணதாசன் இயற்றிய கவிதையில் பயின்றுள்ள இலக்கிய நயங்களைக் காண்போம்.
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவறாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
செயல்பாடு: 2
மையக்கருத்து :
கவிஞர் கண்ணதாசன், தனது படைப்பிலக்கியங்களைப் பொன்னினும் விலைமிகுந்ததாகக் குறிப்பிடுகிறார். புவியில் புகழுடன் விளங்குவதால், தன்னைத் தெய்வத்திற்கு நிகராக எண்ணிப் பாடியுள்ளார். ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் இம்மூன்று பணிகளையும் கவிஞனும் செய்வதால், கடவுளையும் தன்னையும் ஒன்றெனக் கூறுகிறார்.
திரண்ட கருத்து :
கவிஞர் கண்ணதாசன் தன்னைக் காலக்கணிதம் என்று கூறுகிறார். தன் மனதில் தோன்றும் கருவை இலக்கியமாகப் படைப்பதில் வல்லவர் ஆவார். இவர் மறைந்தாலும் திரைப்படப் பாடல்கள் மூலமாகவும் மற்ற பிற நூல்களின் வழியாகவும் புகழுடன் இன்றும் என்றும் வாழும் தெய்வமாக உள்ளார் . தனது மனதிற்குத் தோன்றுவது சரி, தவறு என எதுவாயினும் வெளிப்படையாகக் கூறும் நெஞ்சுரம் மிக்கவராக விளங்கியுள்ளார். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் இம்மூன்று தொழில்களும் கடவுளுக்கும் தனக்குமானது என்று கூறியுள்ளது கண்ணதாசனின் திறமையைக் கூறுவதாக அமைந்துள்ளது.
காலக்கணிதம் என்னும் தலைப்பில் கவிஞர் கண்ணதாசன் இயற்றிய கவிதையில் பயின்றுள்ள இலக்கிய நயங்களைக் காண்போம்.
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவறாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
மையக்கருத்து :
கவிஞர் கண்ணதாசன், தனது படைப்பிலக்கியங்களைப் பொன்னினும் விலைமிகுந்ததாகக் குறிப்பிடுகிறார். புவியில் புகழுடன் விளங்குவதால், தன்னைத் தெய்வத்திற்கு நிகராக எண்ணிப் பாடியுள்ளார். ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் இம்மூன்று பணிகளையும் கவிஞனும் செய்வதால், கடவுளையும் தன்னையும் ஒன்றெனக் கூறுகிறார்.
திரண்ட கருத்து :
கவிஞர் கண்ணதாசன் தன்னைக் காலக்கணிதம் என்று கூறுகிறார். தன் மனதில் தோன்றும் கருவை இலக்கியமாகப் படைப்பதில் வல்லவர் ஆவார். இவர் மறைந்தாலும் திரைப்படப் பாடல்கள் மூலமாகவும் மற்ற பிற நூல்களின் வழியாகவும் புகழுடன் இன்றும் என்றும் வாழும் தெய்வமாக உள்ளார் . தனது மனதிற்குத் தோன்றுவது சரி, தவறு என எதுவாயினும் வெளிப்படையாகக் கூறும் நெஞ்சுரம் மிக்கவராக விளங்கியுள்ளார். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் இம்மூன்று தொழில்களும் கடவுளுக்கும் தனக்குமானது என்று கூறியுள்ளது கண்ணதாசனின் திறமையைக் கூறுவதாக அமைந்துள்ளது
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா ஆகும். இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர்
சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி
இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார்.
இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு
சென்றபோது அவர் வைத்துக் கொண்ட
புனைப் பெயர் கண்ணதாசன் . ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை இயற்றியுள்ளார்.
1 Comments
Thanks but u can proceed a guide pdf for tamil
ReplyDelete