11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 13 , பிறமொழிச்சொற்களைத் தமிழ்ப்படுத்துதல் - வினா & விடை / 11th TAMIL - REFRESHER COURSE MODULE - 13 . QUESTION & ANSWER

 

11 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 13

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துதல்

கற்றல் விளைவுகள்

* பிற மொழிக் கலப்பு இல்லாமல் தமிழ் மொழியில் பேசும் முறைகளை அறிந்து கொள்ளுதல்.

* தமிழில் பிறமொழிக் கலப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிதல்.

* பேச்சு வழக்கில் பிறமொழிச் சொற்கள் கலந்து பேசுவதால் தமிழ்ச்சொற்களின் வழக்கு குறைவுபடுவதை விளக்குதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

மாணவர்களே! 1. நீங்கள் அதிகாலையில் எழுந்து என்ன அருந்துவீர்கள்? 

2. நீங்கள் எப்படி பள்ளிக்கூடத்திற்கு வருகிறீர்கள்? என்று ஆசிரியர் மாணவர்களிடத்தில் வினவ, அதற்கு மாணவர்கள்

1. Coffee, Tea 2. Bus, Bicycle என்று பல்வேறு விதமான பதில்களை அளிக்கிறார்கள். நீங்கள் கூறிய பதில்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்கள் அல்ல. பிறமொழிச் சொற்கள் என்று ஆசிரியர் கூறி ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு : 1

          நம் அன்றாட வாழ்வில் பேசும்போதும் எழுதும்போதும் அதிகப்படியான பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசவும் எழுதவும் செய்கின்றோம்.  அவ்வாறு பேசவும் எழுதவும் செய்வதினால் தமிழ் மொழியின் பயன்பாடு குறைவுபடுவதைக் கண்கூடாக காண நேரிடுகிறது. இதனைக் களைந்து நல்ல தமிழில் பேசவும் எழுதவும் நமக்கு அகராதிகள் துணைபுரிகின்றன.

          அகராதிகளின் துணைக்கொண்டு பிறமொழிச் சொற்களுக்குரிய தமிழ்ச் சொற்களை முறையாக அறிந்து பேசவும் எழுதவும் செய்வோமாயின் தமிழ்மொழி செல்வாக்கு மிகுந்து காணப்படும்.

செயல்பாடு : 2

        நம் அன்றாட வாழ்வில் வகுப்பறையிலும், வீட்டிலும் பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைப் பற்றி அறிதல்.

சொற்பட்டியல்

பிறமொழிச் சொற்கள் நிகரான தமிழ்ச் சொற்கள்

சாக்பீஸ்  - சாக்பீஸ்  -  சுண்ணக்கட்டி

ஆப்செண்ட் - ஆப்செண்ட் - வருகைத் தாராமை

அட்டண்டெண்ட்ஸ் - அட்டண்டெண்ட்ஸ் - வருகைப் பதிவேடு

சென்ட்டர் - சென்ட்டர் - நடுவில்

ஜில் - ஜில் - குளிர்ச்சி

ஐஸ்கிரீம் - ஐஸ்கிரீம் - பனிக்கூழ்

டேஸ்ட் - டேஸ்ட் - சுவை

எக்ஸ்பிரஷன் - எக்ஸ்பிரஷன் - வெளிப்பாடு


செயல்பாடு : 3

இரு நண்பர்கள் தங்களுக்குள் உரையாடும் பொழுது பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களையும், அவற்றிற்கான தமிழ்ச் சொற்களையும் பற்றி அறிதல்.

முகிலன்: ஹலோ! நண்பா!

வேலன்: ஹலோ நண்பா! பார்த்துப் பல வருஷங்கள் ஆயிடுச்சு இல்லையா ?

முகிலன்: ஆமாம்! எட்டு வருடங்கள் ஆச்சு. இல்லையா?

வேலன்: ஆமாம். நான் இப்ப மல்ட்டி நேஷனல் கம்பெனி ஒன்றில் பிராஜக்ட் மேனேஜரா
இருக்கேன். நீ?

முகிலன்: நான் அரசூர் கவர்மெண்ட் காலேஜில் பேராசிரியராக இருக்கேன்.

வேலன் - அந்த காலேஜ்ல தான் என் தம்பி முதலாமாண்டு படிக்கிறான்.

முகிலன் - அப்படியா? மகிழ்ச்சி. வீட்டுக்கு வாங்க நண்பா! இப்போ ஒரு மீட்டிங் போயிட்டிருக்கேன். சென்று வருகிறேன் .......

வேலன்: சென்று வருகிறேன்

பிறமொழிச் சொற்கள் -  தமிழ்ச் சொற்கள்
வருஷம்                             - ஆண்டு
மல்ட்டி நேஷனல் கம்பெனி - பன்னாட்டு நிறுவனம்
பிராஜக்ட் மேனேஜர் - திட்ட மேலாளர்
கவர்ன்மெண்ட் காலேஜ் - அரசுக் கல்லூரி
மீட்டிங்       -  கூட்டம்

செயல்பாடு : 4

பிறமொழிச் சொற்கள் அடங்கிய சில சொற்றொடர்களுக்குத் தமிழ்ச் சொற்றொடர்களைக் காணுதல்.

1. கொடுக்கப்பட்ட பெட்டிஷன் மனு வாபஸ் பெறப்பட்டது.

கொடுக்கப்பட்ட புகார் மனு திரும்பவும் பெறப்பட்டது.

2. ப்ரெசிடெண்ட்டும் செகரெட்டரியும் ஒன்றாக வருவர்.

தலைவரும் செயலரும் ஒன்றாக வருவர்.

மாணவர் செயல்பாடு

            ஒரு மாணவன் கரும்பலகையில் சில பிறமொழிச்சொற்களை எழுத மற்ற மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து அவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களை எழுதச் செய்தல்.

*****************   **************   **********

                                மதிப்பீடு

1. பென்சில், பேனா, பிளாக்போர்டு போன்ற சொற்களுக்குரிய தமிழ்ச் சொற்கள் யாவை?

* பென்சில் - கரிக்கோல்

* பேனா       - தூவல்

* பிளாக்போர்டு  - கரும்பலகை 

2. கீழ்க்கண்ட பிறமொழிச் சொற்றொடருக்கு உரிய தமிழ்ச் சொற்றொடரை எழுதுக.

 மேனேஜர் பைல் எடுத்துவரச் சொன்னார்.

   மேலாளர் கோப்பினை எடுத்துவரச் சொன்னார்.

*****************    ************   *************

Post a Comment

0 Comments