11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 11
இரு சொற்களைப் பயன்படுத்தி
சொற்றொடர் அமைத்தல்
கற்றல் விளைவுகள்
* சொற்களின் பொருளை அறிந்து கொள்ளுதல்.
* சொற்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை அறிதல்.
* சொற்களைத் தொடரில் அமைத்து எழுதும் மொழிப்பயிற்சி திறனைப் பெறுதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல் :
மாணவர்களே! இயற்கைக்கும் செயற்கைக்கும் என்ன பொருள்? வேறுபாடு என்ன?' என்பதை வினவி, இதேபோல் மற்ற சொற்களுக்கு உள்ள பொருள் வேறுபாடுகளை மாணவர்களிடம் கூறி ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு : 1
தமிழில் உள்ள சொற்களில் குறில், நெடில் வேறுபாடுகள் உள்ளன. சொல்லின் முதலில் குறிலாக வரும் சொற்களுக்கும் சொல்லின் முதலில் நெடிலாக வரும் சொற்களுக்கும் வெவ்வேறான பொருள் உள்ளன.
சான்று:
1. கொள்-கோள்
கொள்-தெரிந்து கொள்ளுதல்
கோள்-ஒன்பது கோள்கள்
தொடர் - தெரிந்து கொள் பூமியும் ஒரு கோள்தான்.
2. சிறு - சீறு
சிறு-அளவு
சீறு-கோபம்
தொடர் - திருவிழாக்களில் சிறு சிறு வியாபாரிகளிடம் ஊரார் சீறி விழுந்தனர்.
3. கொடு- கோடு
கொடு-இரவல் கொடுத்தல்
கோடு-நேர்க்கோடு
தொடர் - அகிலன் எழுதுகோல் கொடுத்ததால் நான் குறிப்பேட்டில் கோடு போட்டேன்.
4. விதி - வீதி
விதி - முன்னரே தீர்மானிக்கப்பட்டது
வீதி - தெரு
தொடர் - சிலம்பில் கண்ணகி தன் விதிப்படி மதுரை வீதியில் நின்றாள்.
செயல்பாடு : 2
1. சிலை-சீலை
சிலை - இறைவன் திருவுருவம்
சீலை - துணி
தொடர் - இறைவன் சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருந்தனர்.
2. தொடு-தோடு
தொடு - தொடுதல்
தோடு - அணிகலன்
தொடர் - தோடு அணிந்த சிறுமியர் தொட்டு விளையாடுகின்றனர்.
3. மடு-மாடு
மடு-நீர்நிலை
மாடு - விலங்கு
தொடர் - மாடு மடுவில் தண்ணீர் குடித்தது.
4. மலை-மாலை
மலை - சிகரம்
மாலை - சிறுபொழுது
தொடர் - மலையில் மேய்ந்த மாடுகள் மாலையில் வீடு திரும்பின.
செயல்பாடு : 3
5. வளி-வாளி
வளி - காற்று
வாளி - பாத்திரம்
தொடர் - வளியை வாளியால் நிரட்பி அடைக்க முடியாது.
6. விடு - வீடு
விடு - விட்டொழித்தல்
வீடு-மனை
தொடர் - கவலைகளை விட்டு வாழ்வதுதான் வீடு
7. நடு - நாடு
நடு - இடைப்பட்டது
நாடு - தேசம்
தொடர் - நடுவண் அரசு நாட்டு மக்களுக்குக் கொரோனா குறித்த விழிப்புணர்வை
ஊடகத்தில் வழங்கிவருகிறது.
மாணவர் செயல்பாடு
மாணவர்களை அழைத்து கரும்பலகையில் இரு சொற்களை எழுதச்சொல்லி அதற்குரிய பொருளையும் தொடரில் அமைத்து எழுதச் சொல்லுதல்,
*************** ************* *************
மதிப்பீடு
1. குறில், நெடில் எழுத்துகளை வகைப்படுத்துக,
குறில் : அ , இ , உ , எ , ஒ = 5
நெடில் : ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஔ = 7
2. படு - பாடு என்ற சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
படுபாதகம் செய்வோர் படும்பாடு சொல்லி மாளாது.
3. கலை- காலை என்ற சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
கலைமான் காலை வேளையில் புல் வெளியில் தாவி ஓடியது.
4. வளி - வாளி என்ற சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
0 Comments