பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 11 , தேர்தல் , அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் - வினா - விடை / 10th - SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 11 - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

11 , தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

கற்றல் விளைவுகள்

* சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல், கருத்துச் சுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை, பொறுப்புக்கூறல் (பொறுப்புணர்வு), சட்டத்தின் ஆட்சி போன்ற ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரத்துடன் தொடர்புடைய அரசியல் விதிமுறைகள் மற்றும் கருத்துக்களை விவரித்தல்.

கற்றல் நோக்கங்கள் 

* பொறுப்புணர்வு, சட்டத்தின் ஆட்சி போன்றன ஜனநாயக முறையில் பயன்படுத்தப்படுவதை விவரித்தல்,

* பொறுப்புணர்வு, சட்டத்தின் ஆட்சி போன்ற, சர்வாதிகார முறைகளில் பயன் படுத்தப் படுவதை விவரித்தல்.

ஆயத்தப்படுத்துதல்

* ஜனநாயக முறை பின்பற்றும் இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சட்டங்களை நடைமுறை படுத்தலில் உள்ள சாதக பாதகங்களைக்  கூறி ஆர்வமூட்டுதல்.

பாடஅறிமுகம்

* பல்வேறு அரசியல் அமைப்புகளில் (ஜனநாயகம் மற்றும் சர்வாதிகார ஆட்சி) பொறுப்புணர்வு, சட்டத்தின் ஆட்சி போன்றவை எவ்வாறுபயன்படுத்தப்படுகிறது என்பதினைக் கூறி பாடத்தினைஅறிமுகம் செய்தல்.

ஆசிரியர் செயல்பாடு

1. ஜனநாயக ஆட்சியில் பின்பற்றப்படும் பொறுப்புணர்விற்க்கும், சர்வாதிகார முறை நாடுகளில்

பின்பற்றப்படும் பொறுப்புணர்விற்குமான வேறுபாடுகளை விளக்கிக் கூறுதல்.

 2. நெகிழ்வுத் தன்மை கொண்ட ஜனநாயக நாட்டில் உள்ள சட்டத்தின் ஆட்சி மற்றும் சர்வாதிகார நாடுகளில் உள்ள சட்டத்தின் ஆட்சி இரண்டிற்குமான ஒற்றுமை, வேற்றுமைகளை அட்டவணை மூலம் விளக்குதல்.

மாணவர் செயல்பாடு

1. பொறுப்புணர்வு என்பது எவ்வாறு நெகிழும் மற்றும் நெகிழா தன்மை கொண்ட ஜனநாயக முறையில் பின்பற்றப்படுகிறது என்பதனை இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு விளக்குதல்.

2. ஜனநாயக முறை பின்பற்றும் நாடுகளில் சர்வாதிகார முறை சட்டம் தேவை, சர்வாதிகார முறை பின்பற்றும் நாடுகளில் ஜனநாயக முறை சட்டம் தேவை என்ற தலைப்பில் விவாதம் மூலம் கருத்துகளை பகிர்தல்,

3. சட்டத்தின் ஆட்சி – ஜனநாயக மற்றும் சர்வாதிகார முறையில் உள்ள முக்கிய வேறுபாடுகளை கீழ்கண்ட துண்டு செய்தியின் மூலம் விளக்குதல்.

**************     ***********    **************


                          மதிப்பீடு

1. கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது

அ) அமெரிக்க ஐக்கியநாடுகள் 
ஆ) இங்கிலாந்து
இ) கனடா
ஈ) ரஷ்யா

விடை : ஆ ) இங்கிலாந்து 

2 ) இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு
அ) பிரிவு 280
ஆ) பிரிவு 315
இ) பிரிவு 324
ஈ) பிரிவு 325

விடை : இ ) பிரிவு 324

3. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு

அ) சுதந்திரமான அமைப்பு 
ஆ) சட்டபூர்வ அமைப்பு
இ) தனியார் அமைப்பு
ஈ) பொது நிறுவனம்

விடை : அ ) சுதந்திரமான அமைப்பு

4. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?

அ) பகுதி III
ஆ) பகுதி XV
இ) பிரிவு XX
ஈ) பிரிவு XXII

விடை : ஆ ) பகுதி XV

****************    *************   ************

விடைத் தயாரிப்பு 

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியை , 

அ.ஆ.தி.நி.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

***************   ************   *************

Post a Comment

0 Comments