பத்தாம் வகுப்பு - அறிவியல்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பாடம் : 11 , அமிலங்கள் , காரங்கள்
மதிப்பீடு:
1. அமிலங்கள் ------- சுவையை கொண்டவை.
விடை : புளிப்புச்
2. ------- வேதிப்பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.
விடை : சல்பியூரிக் அமிலம்
3. நாம் பல் துலக்குவதற்குப் பற்பசையைப் பயன்படுத்துகிறோம், ஏனெனில் அது -------தன்மை கொண்டது.
விடை : காரத்
4. சிவப்பு எறும்பின் கொடுக்கில் ------ அமிலம் உள்ளது.
விடை : பார்மிக்
5. அமிலமும், காரமும் சேர்ந்து------ , -------- உருவாகிறது.
விடை : உப்பு , நீர்
6. 'புளிப்புச்சுவை" என்பது இலத்தீன் மொழியில் ------- என்ற சொல்லால் வழங்கப்படுகிறது.
விடை : அசிடஸ்
7. குளவியின் கொடுக்கில் -------- அமிலம் உள்ளது.
விடை : அல்கலின்
8. பென்சாயிக் அமிலம் ------- ஆகப் பயன்படுகிறது.
விடை : உணவு பதப்படுத்தி
9. மெக்னீசியம் ஹைட்ராக்சைட ------- . ஐ குணப்படுத்தப் பயன்படுகிறது.
விடை : அமிலத்தன்மை
10. இயற்கையில் உள்ள பழங்கள், காய்கறிகளில் காணப்படும் அமிலங்கள் ------
விடை : கரிம அமிலம்
11. சல்பியூரிக் அமிலத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு --------
விடை : H2SO4
12. நமது வயிற்றில் சுரக்கும் ------- அமிலம் உணவுப் பொருள்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.
விடை : Hcl
13. குளியல் சோப்புகள் தயாரிக்க ------ பயன்படுகிறது.
விடை : காரம்
14. பொதுவாக காரங்கள் -------- தன்மை கொண்டவை. அவை திரவத்தில் கரைந்துள்ள போது, ----- காணப்படுகின்றன.
விடை : அரிக்கும் , வழவழப்பாக
15. அதிக அமிலத்தன்மையுடைய மண் ------ வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.
விடை : தாவர
************** *************** ************
0 Comments