11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 10
சொற்களைப் பிரித்தும்
சேர்த்தும் எழுதுதல்
கற்றல் விளைவுகள்
* சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் எழுத கற்றுக் கொள்ளுதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல் :
கால்நடை என்னும் சொல்லை சேர்த்தும் பிரித்தும் எழுதுவதால் இருவேறு பொருள் தரும் சொல்லாக அமைந்திருப்பதைக் காண முடிகிறதா? என வினா எழுப்பி ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு : 1
தமிழ்ச்சொற்கள் சிலவற்றைச் சேர்த்தும் பிரித்தும் எழுதும்போது இருவேறு பொருள் தரும் தொடர்களாக உள்ளன . அவ்வகைச் சொற்களைத் தெரிந்து கொள்வதன் மூலம் நம் மொழி வளம் பெருகும்.
சான்று:
கானடை :
* கான் + அடை என்று பிரித்தால் காட்டைச் சேர்தல் என்னும் பொருள் தருகிறது.
* கான் + நடை என்னும்போது காட்டுக்கு நடத்தல் என்னும் பொருள் கிடைக்கிறது.
* கால் + நடை என்றானால் காலால் நடத்தல் என்று பொருள் தருகிறது.
செயல்பாடு : 2
பிண்ணாக்கு :
கடலை, எள் போன்றவற்றை அரைத்து எண்ணெய் எடுத்தபின் கிடைக்கும்.
பாம்பு தன் பின் நாக்கை நீட்டியது.
பலகையொலி :
பல கைகள் சேர்ந்து தட்டுவதால் பிறக்கும் ஒலி.
பலகை ஒலி - மரப்பலகையின் சத்தம்.
மாணவர் செயல்பாடு
* அறிவில்லாதவன் பிரித்தும் சேர்த்தும் எழுதுதல்.
* வைகை இரண்டு தொடராக எழுதிப் பழகுதல்.
* நஞ்சிருக்கும் - பிரித்தும் சேர்த்தும் எழுதி பயிற்சி பெற செய்தல்.
*************** ************ **************
மதிப்பீடு
1. தங்கை- பிரித்தும் சேர்த்தும் எழுதுக.
தன் + கை = தனது கை
தங்கை - உடன் பிறந்த தங்கை
2. எட்டுவரை, எள்துவரை- விளக்குக.
1 Comments
Hi
ReplyDelete