வகுப்பு - 10 . தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 10
அட்டவணை , அறிவிப்புப் பலகை ,
விளம்பரம் - படித்தல் ,
வினாக்களுக்கு விடையளித்தல்
மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
புத்தகத் திருவிழா
புத்தகம் படிப்போம் ! புதியன அறிவோம்!
நாள் - செப்டம்பர் 19 முதல் 28 வரை,
இடம் - சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
நேரம் - காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை,
(முதல் நாள் காலை, 9.00 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார்).
(நாள்தோறும் மாலை 6.00 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும் சிறப்புப் பேச்சாளர்களின் உரையும் இடம்பெறும்),
அனைவரும் வாரீர்:
அறிவுத்திறம் பெறுவீர்!
வினாக்கள்
1. கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம் எந்த நிகழ்வைக் குறிக்கிறது?
இவ்விளம்பரம் புத்தகத் திருவிழாவைக் குறிக்கிறது.
2. புத்தகத்திருவிழா எங்கு நடைபெறுகிறது?
புத்தகத் திருவிழா தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூலகத்தில் நடைபெறுகிறது.
3. புத்தகத் திருவிழா எத்தனை நாள்கள் நடைபெறுவதாக விளம்பரம் குறிப்பிடுகிறது?
புத்தகத் திருவிழா பத்து நாள்கள் நடைபெறுவதாக விளம்பரம் குறிப்பிடுகிறது.
4. புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைப்பவர் யார்? எப்போது?
புத்தகத் திருவிழாவை செப்டம்பர் 19 காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
5. புத்தகத்திருவிழா நடைபெறும் நாள்களில் மாலை 6மணிக்கு நடைபெறும் நிகழ்வுகள் யாவை?
புத்தகத் திருவிழா நடைபெறும் நாள்களில் மாலை 6 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும் , சிறப்புப் பேச்சாளர்களின் உரையும் நடைபெறும்.
6. புத்தகம் படிப்போம்! புதியண அறிவோம் - என்பது போன்ற விழிப்புணர்வுத் தொடர்கள் இரண்டினை எழுதுக.
* நூலகம் செல்வோம் ! அறிவை வளர்ப்போம் !
* நல்ல புத்தகமே நல்ல நண்பன்.
************** ************* *************
0 Comments