ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
2021 - 2022
செயல்பாடு - 3
அகராதியைப் பார்த்துப் பொருளறிதல்
************ ************* **************
வணக்கம் நண்பர்களே ! செப்டம்பர் 1 முதல் நாம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்க உள்ளோம்.
இங்கே , மூன்றாவது செயல்பாடாக உள்ள அகராதியைப் பார்த்துப் பொருள் அறிதல் முழுமையும் வழங்கப் பட்டுள்ளது. பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடும் , மதிப்பீட்டுச் செயல்பாட்டின் வினாக்களுக்கு விடையும் விரிவாக வழங்கப் பட்டுள்ளது. நன்றி.
அகராதியைப் பார்த்துப் பொருளறிதல்
கற்றல் விளைவு:
படித்தவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.
தேவைப்படின்பார்வைநூல்களாகிய அகராதிகள்,தேசப்படங்கள், கலைக்களஞ்சியம் போன்றவற்றையும் இணையத்தளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல். பிறர் உதவியை நாடியும் இதனைச் செய்யலாம்.
கற்பித்தல் செயல்பாடு:
அகராதி என்ற சொல், 'அகரம்', 'ஆதி' என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் ஆனது. (அகரம் +ஆதி =அகராதி), அகராதி, 'அகரமுதலி' எனவும் வழங்கப்படும் .
அகராதி என்பது அகரவரிசைப்படி அமைக்கப்பட்ட ஒரு மொழியின் சொற்களையும் அவற்றுக்கான பொருளையும் சில சமயங்களில் அச்சொற்கள் தொடர்பான பல விவரங்களையும் கொண்டுள்ள நூலினைக் குறிக்கும்.
தமிழில் அகராதிகள் தோன்றுவதற்கு முன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்து கொள்வதற்கு நிகண்டுகள் பயன்பட்டன.
மேற்கத்திய முறைப்படி அமைந்த முதல் தமிழ் அகராதி சதுரகராதி ஆகும். இது வீரமாமுனிவரால் 1732ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ஆயினும், முழுவதுமாக அச்சாகி வெளிவந்தது 1824ஆம் ஆண்டு என்பர்.
தமிழ் அகராதியில் சொற்கள் அகரவரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்கள், அவற்றின் இரண்டாவது எழுத்தைக்கொண்டு வரிசைப்படுத்தப்படும். இவ்வாறு சொல்லின் இறுதி எழுத்துவரை அகரவரிசை பின்பற்றப்படும்.
எடுத்துக்காட்டாக
'குரவை' என்ற சொல்லிற்கு அகராதியில் பொருள் காணவேண்டுமானால், அகராதியின் பக்கங்களில் 'க' 'கர' வரிசையைப் புரட்ட வேண்டும். 'கு' என்ற எழுத்தில் தொடங்கும் பக்கத்தில் இரண்டாம் எழுத்தாக இடம்பெற்றுள்ள 'ர' எழுத்தை அடையாளம் காணவேண்டும். அடுத்து மூன்றாம் எழுத்தான வ வரிசையில் உள்ள வை என்பதைக் கொண்டு குரவை என்ற சொல்லினைத் தேடிப் பொருளைக் கண்டறியலாம்.
2 Comments
VERY VERY THANKS மீக்க நன்றி
ReplyDeleteSuper 🥰👍👌👈
ReplyDelete