ஒப்படைப்பு விடைகள்
வகுப்பு 9 சமூக அறிவியல்
பொருளியல்
அலகு- 1
மேம்பாட்டை அறிவோம்
தொலைநோக்கு, அளவீடு மற்றும்
நிலைத் தன்மை
பகுதி -அ
1. சரியான விடையைத் தேர்வு செய்க
1. மனித வளம் என்னும் சொல் குறிப்பிடுவது
அ) ஏழை மக்களின் மீதான முதலீடு
ஆ) வேளாண்மை மீதான செலவு
இ) சொத்துக்கள் மீதான செலவு
ஈ) ஒட்டுமொத்த மக்களின் திறமை
விடை : ஈ ) ஒட்டுமொத்த மக்களின் திறமை
2. தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்படுகிறது
அ) மொத்த நிகர உற்பத்தி
ஆ) மொத்த உள்நாட்டு உற்பத்தி
இ) நிகர தேசிய உற்பத்தி
ஈ) நிகர உள்நாட்டு உற்பத்தி
விடை : ஈ ) நிகர உள்நாட்டு உற்பத்தி
3. சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
அ) இந்தியா ஆ) பாகிஸ்தான்
இ) சீனா ஈ) பூட்டான்
விடை : இ ) சீனா
கோடிட்ட இடத்தை நிரப்புக
1. இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் கேரளா
2. நிலத்தடி நீர் என்பது புதுபிக்கத்தக்க வளங்களின் ஓர் எடுத்துக்காட்டாகும்.
பகுதி -ஆ
1. சிறு வினா
1. மேம்பாடு என்பதற்கு நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்?
* மேம்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது ஒரு குறிப்பிட்ட நபரின் வளர்ச்சியைக் குறிக்கிறது.
2. பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள் என்ன?
* நிகர நாட்டு உற்பத்தி, தலா வருமானம், வாங்கும்திறன் சமநிலை, மனித வளர்ச்சிக் குறியீடு ஆகியவை பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள்,
3. சூரிய சக்தி என்றால் என்ன?
* சூரிய சக்தி என்பது சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்தப்படுத்துவதாகும்.
* சூரிய மின் தகடு அமைப்பின் மூலம், வீடு மற்றும் அலுவலகத்திற்கு தேவையான மின்சாரம் தயாரிக்க முடியும்.
பகுதி -இ
III. பெரு வினா
1. புதுப்பிக்க தக்க வளங்கள் மற்றும் புதுப்பிக்க தகாத வளங்கள் வேறுபடுத்துக.
புதுப்பிக்கத்தக்க வளங்கள்
* புதுப்பிக்கத் தக்க வளங்கள் மாசற்ற மற்றும் சுற்றுச்சூழல் நலம் காக்கிறது.
* இந்த வளங்கள் புதுப்பிப்பதற்கான ஒரு குறுகிய நேரத்தை எடுத்துக்கொள்கிறது.
எடுத்துக்காட்டு. சூரியசக்தி, காற்று சக்தி, நீர், மரம், காகிதம்
புதுப்பிக்க இயலாத வளங்கள்
* புதுப்பிக்கத் தகாத வளங்கள் சூழலை மாசுப்படுத்தவும் சேதப்படுத்துவும் செய்கின்றன
* இந்தவளங்கள் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகள் தேவைப்படுகின்றன.
எடுத்துக்காட்டு. உலோகங்கள், கண்ணாடி புதைப்படிவ எரிபொருட்கள் (நிலக்கரி, பெட்ரோல், இயற்கைஎரிவாயு, டீசல்)
2. இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக விவரிக்கவும்.
* இந்தியா தன் சுற்றுச்சூழல் கொள்கைகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது.
* காற்று, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களைப் பாதுகாக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
* இந்தியா குறைந்த வளங்களுடன் பொருளாதார மேம்பாட்டை அடைய பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
* நாட்டின் பொருளாதார மேம்பாடே வாழ்க்கைத் தரத்தை நிர்ணயம் செய்கிறது. இதற்கான சட்டங்களை உருவாக்குவதே இந்தியாவின் சுற்றுச் சூழல் கொள்கைகள் ஆகும்.
0 Comments