ஒப்படைப்பு - விடைகள்
வகுப்பு - 9 - சமூக அறிவியல்
குடிமையியல்
அலகு-1
அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
பகுதி - அ
1. சரியான விடையைத் தேர்வு செய்க
1.ஒரு நபரோ, அரசோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை
அ) தனி நபராட்சி ஆ) முடியாட்சி
இ) மக்களாட்சி ஈ) குடியரசு
விடை : ஆ ) முடியாட்சி
2. முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை
அ) சிறுகுழு ஆட்சி
ஆ) மதகுருமார்களின் ஆட்சி
இ) மக்களாட்சி ஈ) தனிநபராட்சி
விடை : ஈ ) தனிநபராட்சி
3. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
அ) இந்தியா ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ) பிரான்ஸ் ஈ) வாடிகன்
விடை : ஈ ) வாடிகன்
4. குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
அ) சேரர்கள் ஆ) பாண்டியர்கள்
இ) சோழர்கள் ஈ) களப்பிரர்கள்
விடை : இ ) சோழர்கள்
5. எந்த மொழியில் இருந்து 'டெமாகிரஸி' என்ற வார்த்தை பெறப்பட்டது?
அ) கிரேக்கம் ஆ) லத்தீன்
இ) பாரசீகம் ஈ) அரபு
விடை : அ ) கிரேக்கம்
பகுதி- ஆ
1. சிறு வினா
1. ஆபிரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக.
* மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி ஆகும்.
2 மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக.
மக்களாட்சி அரசாங்க அமைப்புகள்
* நாடாளுமன்ற அரசாங்க முறை - இந்தியா, இங்கிலாந்து
* அதிபர் அரசாங்க முறை - அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்
3. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக.
நேரடி மக்களாட்சி
* பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவெடுக்கக்கூடிய அரசு முறையை நேரடி மக்களாட்சி என்கிறோம்.
எ.கா. பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து
மறைமுக மக்களாட்சி (பிரதிநிதித்துவ மக்களாட்சி)
* பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் முறையே மறைமுக மக்களாட்சி என்று அழைக்கப்படுகிறது.
* (எ.கா.) இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து
பகுதி - இ
III. பெரு வினா
1. மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை?
1. கல்வியறிவின்மை
2. வறுமை
3. பாலினப் பாகுபாடு
4, பிராந்தியவாதம்
5. சாதி, வகுப்பு, சமய வாதங்கள்
6. ஊழல்
7. அரசியல் குற்றமயமாதல்
8. அரசியல் வன்முறை
0 Comments