ஒப்படைப்பு
வகுப்பு: 8 பாடம்: அறிவியல்
அலகு - 09 பகுதி - அ
1.ஒரு மதிப்பெண் வினாக்கள்
1. தனிமம் என்பது ஒரு --------
அ) கலவை ஆ) சேர்மம்
இ) கூட்டுப்பொருள் (ஈ) தூயபொருள்
விடை : ஈ ) தூயபொருள்
2.கிழ்க்காண்பவற்றுள் எது அலோகம்?
அ) அலுமினியம் ஆ) தங்கம்
இ) கார்பன் ஈ) இரும்பு
விடை : இ ) கார்பன்
3.உலோகப்போலி அல்லாதது எது?
அ) ஆர்சனிக் ஆ) ஜெர்மானியம்
இ) பொலோனியம் ஈ ) கார்பன்
விடை : ஈ ) கார்பன்
4.கீழ்கண்டவற்றுள் கடினத்தன்மையுடையது எது?
அ) வைரம் ஆ) கார்பன்
இ) கிராபைட் ஈ)கரித்துண்டு
விடை : அ ) வைரம்
5.திரவநிலையில் உள்ள உலோகம்
அ) தாமிரம் ஆ) பாதரசம்
இ) தங்கம் ஈ) வெள்ளி
விடை : ஆ ) பாதரசம்
6.கம்பியாகநீளும்பண்பைப்பெற்ற அலோகம்
அ) நைட்ரஜன் ஆ) ஆக்ஸிஜன்
இ) குளோரின் ஈ) கார்பன்
விடை : ஈ ) கார்பன்
7.மின்சாரத்தைக்கடத்தப்பயன்படும் அலோகம்
அ) கிராஃபைட்
ஆ) ஆக்ஸிஜன்
இ) அலுமினியம்
ஈ) சல்பர்
விடை : அ ) கிராஃபைட்
8.நீரில்உள்ளபகுதிப்பொருள்கள்
அ) சிலிக்கான், ஆக்ஸிஜன்
ஆ) நைட்ரஜன், ஆக்ஸிஜன்
இ) ஆக்ஸிஜன், ஹைட்ரஜன்
ஈ) நைட்ரஜன், ஹைட்ரஜன்
விடை : இ ) ஆக்ஸிஜன் , ஹைட்ரஜன்
9.கீழ்கண்டவினைகளில் எதுவேதிவினை?
அ) பனிக்கட்டி உருகுதல்
ஆ) நீர்ஆவியாதல்
இ) மெழுகு உருகுதல்
ஈ) இரும்புதுருப்பிடித்தல்
விடை : ஈ ) இரும்பு துருப்பிடித்தல்
10.கிராஃபைட்டின்பயன்பாடுகளில் ஒன்று
அ) அலங்காரநகை
ஆ) குறைப்பான்
இ) கரைப்பான்
ஈ) கடத்தி
விடை : ஈ ) கடத்தி
பகுதி - ஆ
II. குறு வினா.
1.பேரியம், பெரிலியம், பிஸ்மத், புரோமின் போன்ற தனிமங்களின் குறியீடுகளை
எழுதுக.
தனிமங்கள் - குறியீடுகள்
பேரியம் - Ba
பெரிலியயம் - Be
பிஸ்மத் - Bi
புரோமின் - Br
2.தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.
* உலோகங்கள்
* அலோகங்கள்
* உலோகப்போலிகள்
3.வெப்பநிலைமானிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுவது ஏன்?
* அதிக அடர்த்தி கொண்டுள்ளது.
* வெவ்வேறு வெப்பநிலைகளில் சீராக விரிவடையும் தன்மை .
4.சலவைத்தூளின் பகுதிப்பொருள்கள் யாவை?
* கால்சியம்
* ஆக்ஸிஜன்
* குளோரின்
5.உலோகப் போலிகளின் பயங்களைக் குறிப்பிடுக.
* சிலிக்கான் மின்னணுக் கருவிகளில் பயன்படுகிறது.
* போரான் பட்டாசுத் தொழிற்சாலையிலும் , இராக்கெட் எரிபொருளைப் பற்றவைக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.
பகுதி - இ
III. பெரு வினா.
1.உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை ஒப்பிடுக.
உலோகங்கள்
1 ) இயல்பான வெப்ப நிலையில் திண்ம நிலையில் காணப்படுகின்றன.
2 ) பொதுவாக உருகு நிலை அதிகம்
3 ) பொதுவாக கொதிநிலை அதிகம்
4 ) பொதுவாக அடர்த்தி அதிகம்
5 ) அனைத்து உலோகங்களும் பளபளப்பு உடையவை
6 ) பொதுவாக உலோகங்கள் வெப்பத்தையும் . மின்சாரத்தையும் நன்கு கடத்தக்கூடியவை.
7 ) அடிக்கும்போது தகடாகமாறும்.
8 ) இழுக்கப்படும்போது கம்பியாக நீளும்.
9 ) தட்டும் போது ஒலிஎழுப்பும்
10 ) பொதுவாகக் கடினத்தன்மை வாய்ந்தவை.
அலோகங்கள்
1 ) இயல்பான வெப்ப நிலையில் திண்ம , திர , வாயு நிலைகளில் யில் காணப்படுகின்றன.
2 ) பொதுவாக உருகு நிலை குறைவு
3 ) பொதுவாக கொதிநிலை குறைவு
4 ) பொதுவாக அடர்த்தி குறைவு
5 ) அனைத்து அலோகங்களும் பளபளப்பு அற்றவை
6 ) பொதுவாக உலோகங்கள் வெப்பத்தையும் . மின்சாரத்தையும் அரிதாகக் கடத்தக்கூடியவை.
7 ) பொதுவாக மென்மையானது , அல்லது உடையக்கூடியது.
8 ) பொதுவாக மென்மையானது , அல்லது உடையக்கூடியது
9 ) தட்டும் போது ஒலிஎழுப்பாது
10 ) பொதுவாகக் கடினத்தன்மை அற்றவை.
பகுதி - ஈ
IV.செயல்பாடு : மாணவர் சுயமாகச் செய்க
************* *************** ***********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments