ஒப்படைப்பு - விடைகள்
வகுப்பு - 8
பாடம்: சமூக அறிவியல்
பொருளியல் - அலகு -1
பகுதி - அ
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்:
1. ரூபியா என்பது ---- நாணயம் என்று பொருளாகும்.
அ) தங்கம் ஆ) வெள்ளி
இ) செம்பு ஈ) வெண்கலம்
விடை : ஆ ) வெள்ளி
2. பொற் கொல்லர்களின் ரசீது ------- ஆக மாறியது.
அ) கடன் பணம்
ஆ) நெகிழிப்பணம்
இ) காகிதபணம்
ஈ ) இவற்றில் எதுவுமில்லை
விடை : இ ) காகித பணம்
3. பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பெரும்பகுதியில் -------- பணம் முக்கிய பங்கு வகித்தது.
அ) உலோக பணம் ஆ) பண்டபணம்
இ) காகித பணம் எ) நிகர் பணம்
விடை : ஆ ) பண்ட பணம்
4. "எதையெல்லாம் செய்யவல்லதோ, அதுவே பணம்" என வரையறுத்து கூறியவர்
அ) ஸ்டோவஸ்கி ஆ) சர்ஜான் ஹிக்ஸ்
இ) வாக்கர் ஈ) இராபர்ட்சன்
விடை : இ ) வாக்கர்
5. குறைந்த பணத்தின் மதிப்பு உயர்வதைக் குறிப்பது.
அ) பணவாட்டம் ஆ) பணவீக்கம்
இ) கருப்புப்பணம் ஈ) பங்கு வர்த்தகம்
விடை : அ ) பணவாட்டம்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. உண்டியல், பத்திரங்கள் போன்றவற்றின் பயன்பாடுகள் பண பரிணாம வளர்ச்சியின் இறுதிநிலையாகும்.
2. காகிதப் பணத்தை கட்டுப்படுத்துவதும், ஒழுங்குப்படுத்துவதும் அந்நாட்டின் ரிசர்வ் வங்கி ஆகும்.
3. நிரந்தர வைப்பை வங்கிப்பணம் என அழைப்பர்
4. பணவீக்கம் என்பது விலைகள் உயர்ந்து, பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதையும் குறிக்கும்.
5. இந்திய ரூபாய் குறியீடு திரு. உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது
பகுதி - ஆ
1. குறு வினா:
1. இந்தியாவில் முதன் முதலாக நாணயங்கள் எப்போது அச்சடிக்கப்பட்டன?
* இந்தியாவில் கி.மு.6ஆம் நூற்றாண்டில் முதன் முறையாக மஹாஜனபதங்கள் ஆட்சியில் பூரணாஸ், கர்ஷபணம், பனாஸ் போன்ற நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.
2. "பணம்" என்பதை வரையறுக்க.
* பொது ஏற்புத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டங்கள் வாங்கும் போது
அதற்கான செலுத்துத் தொகையாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய எதனையும்.பணம் என்று கூறலாம்" - இராபர்ட்சன்.
3. உலோகப் பணம் என்றால் என்ன?
* மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தில் பண்ட பணம், உலோக பணமாக மாறியது.
* தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்கள் உலோகப் பணமாக பயன்படுத்தப்பட்டன.
* பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பெரும் பகுதியில், இவ்வகையான பணம் முக்கிய பங்கு வகித்தது.
4. முதலீடு செய்ய வழிவகுக்கும் சில முதலீட்டுக் கருவிகளை கூறுக.
1. பங்கு வர்த்தகம்
2. பத்திரங்கள்
3. பரஸ்பர நிதி
4. காப்பீடு
5. ஆண்டுத்தொகை
6. வைப்பு கணக்கு அல்லது வேறு பல பத்திரங்கள் அல்லது சொத்துக்கள்.
5. நிரந்தரவைப்பு கணக்கு குறிப்பு வரைக.
* நிரந்தர வைப்பு கணக்கு என்பது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு பாதுகாப்பும், நிலையான வருவாயும், விரும்புவார்கள்.
* நிரந்தர வைப்பை 'காலவைப்பு' எனவும் அழைக்கலாம். அவை குறிப்பிட்ட காலத்திற்கு நிரந்தரமாக வங்கியில் இருக்கும்.
பகுதி - இ
III. பெரு வினா:
1. பணத்தின் சமீபத்திய வடிவங்கள் பற்றி விவரி.
நெகிழிப் பணம் :
கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் சமீபத்திய நெகிழிப் பணமாகும். பணமில்லா
பரிவர்த்தனை இதன் நோக்கமாகும்.
மின்னனு பணம்
மின்னனுப் பணம் என்பது வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னனு முறையின் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாகும்.
நிகழ்நிலை வங்கி (இணைய வங்கி)
நிகழ்நிலை வங்கி அல்லது இணைய வங்கி என்பது வாடிக்கையாளர் அல்லது பிறநிதி நிறுவனங்கள் வலைதளத்தின் மூலம் ஒரு பரந்தநிதிப் பரிவர்த்தனைகளை நடத்தும் ஒரு மின்னனு முறையாகும்.
மின் வங்கி
மின்னணு வங்கியை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) என்றும் அழைக்கலாம். காசோலை அல்லது ரொக்கத்தை விட ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதியை
மாற்றுவதற்கு மின்னணு வழிமுறை பயன்படுகிறது.
IV ) செயல்பாடு
1 ) படத்தைப் பார்த்து விடுபட்ட கோடிட்ட இடத்தை நிரப்புக.
i ) ரூபாய் உள்ள மொழிகளின் எண்ணிக்கை - 15
ii ) ரூபாய் நோட்டில் தமிழ் மொழி 13 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.
iii ) ரூபாய் நோட்டில் பல்வேறு மொழிகள் இடம் பெறக் காரணம் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க
iv ) நூறு ரூபாய் நோட்டில் நூறு என்பது ----- முறை அச்சடிக்கப்பட்டுள்ளது.
v ) ரூபாய் நோட்டில் காணப்படும் நபர் மகாத்மா காந்தி
************** ************* ***********
விடைத்தயாரிப்பு :
திருமதி.ச.இராணி , ப.ஆசிரியை ,
அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி ,
இளமனூர் , மதுரை.
************** ************** ************
0 Comments