பாடம்: சமூக அறிவியல்
ஒப்படைப்பு வகுப்பு: 8
வரலாறு - அலகு - 1
பகுதி - அ
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்:
1. சென்னை நாட்குறிப்பு பதிவுகள் எப்போது வெளியிடப்பட்டது?
அ) 1916 ஆ ) 1917 இ ) 1949 ஈ ) 1935
விடை : ஆ ) 1917
2. இந்தியாவின் முதல் நாணயம் ஆட்சியில் வெளியிடப்பட்டது
அ) பிரெஞ்சுக்காரர்கள்
ஆ) போர்ச்சுகீசியர்
இ) ஆங்கிலேயர்
ஈ) டேனியர்
விடை : இ ) ஆங்கிலேயர்
3. இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தார்
அ) நினோ-டி-குன்கா
ஆ) வாஸ்கோடகாமா
இ) அல்மெய்டா
ஈ) அல்போன்சோ-டி-அல்புகர்க்
விடை : ஈ ) அல்போன்சோ-டி-அல்புகர்க்
4. ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை - பகுதியில் நிறுவனர்.
அ) ஆக்ரா ஆ) சூரத்
இ) மெட்ராஸ் ஈ) மசூலிப்பட்டினம்
விடை : ஈ ) மசூலிப்பட்டினம்
5. இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாகும்.
அ) சூரத் ஆ) மசூலிப்பட்டினம்
இ) பாண்டிச்சேரி ஈ) மாஹி
விடை : இ ) பாண்டிச்சேரி
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. இந்தியாவின் முதல் பிரெஞ்சு வணிகமையத்தை நிறுவியவர் -------
விடை : கரோன்.
2. ------- ஆம் ஆண்டு டேனியர்கள் தங்களது அனைத்து குடியேற்றங்களையும் ஆங்கில அரசுக்கு விற்றனர்.
விடை : 1845
3. 1690 ஆம் ஆண்டு ------- பகுதியில் ஆங்கிலேய வர்த்தக மையம் நிறுவப்பட்டது.
விடை : சுதாநுதி
4. ----------- பகுதியில் டச்சுக்காரர்கள் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர்.
விடை : பழவேற்காட்டில்
5. வாஸ்கோடகாமாவின் கடல் வழியை பின்பற்றி இந்தியாவிற்கு வருகை புரிந்தவர் ---------------
விடை : பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல்
பகுதி-ஆ
1. குறுவினா
1. தமிழ்நாடு ஆவணக்காப்பகம் பற்றி குறிப்பு வரைக?
* இது தென்னிந்தியாவின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களுள் ஒன்றாகும். அங்குள்ள பெரும்பாலான ஆவணங்கள் ஆங்கிலத்தில் உள்ளன.
* மேலும் அங்கு டச்சு, டேனிஷ், பாரசீக, மராத்திய நிர்வாகபதிவுகளின் தொகுப்புகள் பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய, தமிழ், உருது போன்ற மொழிகளில் உள்ளன.
2. டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த இந்திய பொருட்கள் யாவை?
* பட்டு, பருத்தி, இண்டிகோ, அரிசி மற்றும் அபினி ஆகியவை டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்தபொருட்களாகும்.
* கருப்பு மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் மீதான வியாபாரத்தில் அவர்கள் ஏகபோக உரிமை பெற்றிருந்தனர்,
3. சர் தாமஸ்ரோ எந்த இடத்தில் வணிக மையங்கள் நிறுவினார்?
* ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச்
1 Comments
Arun Dinesh
ReplyDelete