7 - சமூக அறிவியல் - ஒப்படைப்பு விடைகள் - வரலாறு - அலகு 1 - இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் - 7th SOCIAL SCIENCE - ASSIGNMENT - HISTORY - UNIT 1 - QUESTION & ANSWER

 

       ஒப்படைப்பு   -   விடைகள்

                         வகுப்பு : 7

    பாடம் : சமூக அறிவியல் -  வரலாறு

                            அலகு - 1

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

                           பகுதி - அ

1. ஒரு மதிப்பெண் வினாக்கள்:

1. வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் முதல்நிலை சான்று  ------- ஆகும்.

அ ) பொறிப்புகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் நாணயங்கள்

ஆ. இலக்கியங்கள்

இ. பயணக்குறிப்புகள்

ஈ. சுயசரிதைகள்

விடை : அ ) பொறிப்புகள், நினைவுச் சின்னங்கள் மற்றும் நாணயங்கள்

2. திருவாலங்காடு செப்பேடுகள் யாரைப் பற்றிக் கூறுகிறது?

அ. ராஜ ராஜ சோழன்

ஆ. முதலாம் இராஜேந்திர சோழன்

இ. குலோத்துங்க சோழன்

ஈ, சுந்தரச் சோழன்

விடை :  ஆ ) முதலாம் இராஜந்திர சோழன்

3. சோழர் காலத்தில் பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள் -----   ஆகும்.

அ) வேளாண் வகை

ஆ. பிரம்மதேயம்

இ. சாலபோகம்

ஈ. தேவதானம்

விடை :  அ ) வேளாண்வகை

4. சோழர் காலத்தில் கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பதைக் கூறும் சான்று எது?

அ. உத்திரமேரூர் கல்வெட்டு

ஆ. திருவாலங்காடு செப்பேடு

இ. அன்பில் செப்பேடு

ஈ. செப்புப்பட்டயம்

விடை :  அ ) உத்திரமேரூர் கல்வெட்டு 

5. இந்தியாவில் கட்டிடக்கலையில் வளைவுகள், ஒடுங்கிய வடிவக்கோபுரங்கள்,
குவிமாடங்கள் போன்ற புதுவகையான கட்டிடக்கலையை அறிமுகம்
செய்தவர்கள் யார்?

அ. சோழர்கள்

ஆ . பாண்டியர்கள்

இ. டெல்லி சுல்தானியர்கள்

ஈ. முகலாயர்கள்

விடை  :  இ ) டெல்லி சுல்தானியர்கள்

6. தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான லட்சுமியின்
உருவத்தை பதித்து தன்னுடைய பெயரையும் பொறிக்கச் செய்தவர்.

அ) முகமது கோரி

ஆ. அலாவுதீன் கில்ஜி

இ. இல்துமிஷ்

ஈ. முகமது பின் துக்ளக்
 
விடை :  அ ) முகமதுகோரி 

7. யாருடைய காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என்று  அழைக்கப்படுகிறது?

அ. சேரர்கள் காலம்

ஆ) சோழர்கள் காலம்

இ. பாண்டியர்கள் காலம் 

ஈ. சுல்தான்கள் காலம்

விடை :  ஆ ) சோழர்கள் காலம் 

8. டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசு இசைவு பெற்ற முதல்
நூல் எது?

அ. தாஜ்-உல்-மா அசிர்

ஆ. தபக்-இ-நஸிரி

இ. தாரிக்-இ-பிரோஷாகி

ஈ. தாரிக்-இ-பெரிஷ்டா

விடை : அ ) தாஜ்-உல்-மா அசிர்


9. தாரிக் என்பது ஒரு -----------சொல். இதன் பொருள் 'வரலாறு  என்பதாகும்.

அ. கிரேக்க        ஆ. லத்தீன்

 இ) அரேபிய      ஈ. பிரெஞ்சு

விடை :  இ ) அரேபிய

10. கஜினி மாமூதின் சோமநாத புர படையெடுப்பு குறித்து துல்லியமான
தகவல்களை தருபவர் யார் ?

அ. இபன் பதூதா

ஆ. நிக்கோலோ காண்டி

இ. மார்க்கோ போலோ

ஈ. அல்-பருனி

விடை :  ஈ ) அல்-பருனி

                               பகுதி -ஆ

II. குறுவினா.

11. சான்றுகள் என்றால் என்ன? அதன் வகைகளைக் கூறுக.

சான்றுகள்
கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் எனப்படும்.

முதல்நிலைச் சான்றுகள்

 இரண்டாம் நிலைச் சான்றுகள்

12. 'பொறிப்புகள்' - சிறு குறிப்பு வரைக

'பொறிப்புகள்' என்பன பாறைகள், கற்கள், கோயிற்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மேல் பொறிக்கப்படும் எழுத்துக்களாகும். 

13. இடைக்கால இந்திய வரலாற்றினை அறிந்துக் கொள்ள உதவும் ஏதேனும்
நான்கு நினைவுச் சின்னங்களையும் அவை காணப்படும் இடத்தினையும் கூறுக.

* கஜூரகோ  -  மத்தியப்பிரதேசம்

* சூரியனார்கோவில் - கோனார்க் ( ஒடிசா )

* பிரகதீஸ்வரர் கோவில் - தஞ்சை (தமிழ்நாடு)

* வேலூர் கோட்டை - வேலூர் ( தமிழ்நாடு ) 



14. இடைக்கால இந்திய வரலாற்றின் சமய இலக்கியங்களைப் பட்டியலிடுக.

 *  கம்பராமாயணம்

 *  பெரியபுராணம் 

*  தேவாரம் 

*  திரிவாசகம் 

*  நாலாயிரதிவ்யப் பிரபந்தம் 

* கீதகோவிந்தம்


15. மொராக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதாவின் பயணநூல் மூலமாக
நீவிர் அறிவதென்ன?

* இபின் பாதுதாவின் பயண நூலின் பெயர் ரிக்ளா ஆகும்.

*  எகிப்து செல்வம் கொழிக்கும் நாடு எனக் கருதினார்.

*  வெளிநாட்டுத் துறைமுகங்களில் இந்திய வணிகர்களின் நடவடிக்கை மற்றும் இந்தியக் கப்பல்கள் குறித்தும் அறிய முடிகிறது.




                                     பகுதி - இ

III. பெருவினா:

16. டெல்லி சுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை
விவரிக்கவும்.

*  முகமது கோரி தங்க நாணயத்தில் தன்பெயரையும் , பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தையும் பதிப்பித்து வெளியிட்டார்.

*  இல்துமிஷ் ' டங்கா '  என்னும் வெள்ளி நாணயத்தை அறிமுகம் செய்தார்.

*  அலாவுதீன் கில்ஜி தங்க நாணயங்களை வெளியிட்டார்.

*  முகமது பின் துக்ளக் செப்பு நாணயங்களை வெளியிட்டார்.


                                    பகுதி - ஈ 

IV.செயல்பாடு

1. நான் யார்?

அ) வெனிஸ் நகரை சேர்ந்த பயணி இவர்.

ஆ) தூத்துக்குடி மாவட்டத்தில் காயல் எனும் பகுதிக்கு இருமுறை வந்தவர் இவர்.

இ) அரேபியாவிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கில் குதிரைகள் தென்னிந்தியாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதாக குறிப்பிட்டவர்  இவர்.

ஈ) தமிழ்நாட்டிற்கு 13ஆம் நூற்றாண்டில் பாண்டிய பேரரசுக்கு வந்தவர் இவர்.

    அனைத்துக் கேள்விகளுக்குமான விடை 

       மார்கோபோலா 

**************     ****************   **********

                     விடைத்தயாரிப்பு 

திருமதி. இராணி அவர்கள் , 

பட்டதாரி ஆசிரியை , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

****************      ******************   *******-


Post a Comment

1 Comments