பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 3 , வாழ்வியல் இலக்கியம்
திருக்குறள்
ஆள்வினை உடைமை ( 62 )
**************** *********** ***********
வணக்கம் அன்பு நண்பர்களே ! வாழ்வியல் இலக்கியமாம் திருக்குறளை நாம் கடந்த ஐந்து வகுப்புகளில் கற்றுவருகிறோம். இன்றைய வகுப்பில் ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்திலுள்ள ஐந்து குறட்பாக்களையும் , அதற்கான விளக்கத்தையும் காண்போம்.
முதலில் நம்முடைய பெரும்புலவர்.திரு. மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தைக் காட்சிப் பதிவில் காண்போம்.
நண்பர்களே ! ஆள்வினை உடைமை அதிகாரத்திலுள்ள குறட்பாக்களின் சுவையை இரசித்தீர்களா ?
14 ) அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.*
பொருள் :
ஒரு செயல் முடிப்பதற்கு இயலாதது என்று எண்ணிச் சோர்வு அடையாதிருக்க வேண்டும். அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.
15 ) தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு .
பொருள் : விடாமுயற்சி என்ற உயர்பண்பு கொண்டவர்களால்தான் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்.
16 ) முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.*
பொருள் :
முயற்சி செய்தால் ஒருவருக்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்.
17 ) பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறித்
தாள்வினை இன்மை பழி
பொருள் :
ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருப்பினும் அது இழிவன்று. அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாததே இழிவாகும்.
18 ) ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
பொருள் :
சோர்விலாது முயற்சி செய்வோர் செய்கின்ற செயலுக்கு இடையூறாக வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவர்.
*********** ************* ******** ********
0 Comments