பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 3 , வாழ்வியல் இலக்கியம்
திருக்குறள்
நன்றிஇல் செல்வம் ( 101 )
*********** *********** ********** ********
வணக்கம் அன்பு நண்பர்களே ! வான்புகழ் வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளை நம் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம் . ஆம் ! வாழ்வியல் இலக்கியமாக அமைந்துள்ள குறட்பாக்கள் மூலமாக !
வள்ளுவனைப் பெற்றதால் , பெற்றது புகழ் வையகம் என்பதற்கேற்ப குறள் நம்மை வழிநடத்திச் செல்கிறது. இன்றைய வகுப்பில் நாம் நன்றிஇல் செல்வம் என்ற அதிகாரத்திலிருந்து இரண்டு குறட்பாக்களைக் காண்போம்.
அதற்கு முன்பாக , நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் தரும் விளக்கத்தைக் காண்போமா ?
நண்பர்களே ! இரண்டு குறட்பாக்களையும் காண்போம்.
19 ) கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.
பொருள் :
பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர் அடுக்கடுக்காய்ப் பல கோடிப் பொருள்கள் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை.
20 ) நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று.
பொருள் :
பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம் , ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும்.
அணி : உவமையணி
************ ************* ***************
மகிழ்ச்சி நண்பர்களே ! இன்றைய வகுப்புடன் வாழ்வியல் இலக்கியமாக அமைந்த திருக்குறளில் உள்ள குறட்பாக்கம் இருபதையும் மிகத் தெளிவாகக் கற்றுக் கொண்டோம். பெற்றுக் கொண்டோம். நன்றி.
************* **************** ***********
0 Comments