உலக கொசு ஒழிப்பு தினம் - ஆகஸ்ட் 20 - நோய் பரப்பும் கொசுக்கள் - அனோபிலஸ் - ஏடிஸ் - கியூலக்ஸ்.

 


           உலக கொசு ஒழிப்பு தினம்

                       20 -08 - 2021


              மனிதர்களுக்கு  ஏற்படும் கொடிய நோய்களில்  முதன்மையானது  கொசுவினால்  பரவும்  கொடியநோய்கள் ஆகும். இவை நோய் பரப்பும்  புறக்காரணியாக  செயல்பட்டு  பல நோய்களைப் பரப்பி மனித குலத்தை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. 

    உலகில் ஏறத்தாழ  3500 - வகையான  கொசுக்கள்  உள்ளன. இந்தியாவில்  மட்டும்  400 - க்கும் மேற்பட்ட  கொசுவகைகள்  உள்ளன. ஒரு பெண் கொசு  தேங்கிய  நீரில் ஒரே நேரத்தில்  100 -  முதல்  300 - முட்டைகளை  இடும். அது  48 - மணிநேரத்திற்குள்  கொசுவாகிவிடும்.

       கொசுக்களால் ஒவ்வொரு  ஆண்டும் ஏழு இலட்சத்திற்கும் மேலாக மக்கள்  உயிரிழக்கின்றனர் என்றும்  தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவில்  கொசுக்களால் உயிரிழப்பவர்களின்  எண்ணிக்கை அதிகம் என்று செய்திகள் கூறுகின்றன. 

    இந்தியாவில்  2015 - ம் ஆண்டு கொசுக்களால் ஏற்பட்ட நோயால்  சுமார் 24 - ஆயிரம் பேர் இறந்தனர்.  ஆனாலும்  நலவாழ்வு  விழிப்புணர்வு  மற்றும் மருந்துகளால்  இறப்பு விகிதம் குறைந்தது.

கொசு ஒழிப்பு  தின வரலாறு.

     1857 - ஆம் ஆண்டு உத்திரகாண்டில்  அல்மோராவில்  மருத்துவர்  ரெனால்ட்  ராஸ்" பிறந்தார். இவரது தந்தைஆங்கிலேய இராணுவ அதிகாரி . 

பள்ளி,மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்து இந்தியா திரும்பிய  பின் மலேரியாவை பரப்பும்  கொசுவை  1897 - ஆண்டு ஆகஸ்ட்  20 - ம் நாள் கண்டறிந்தார்.  அனோபிலஸ் ( Anopheles)  என்னும் பெண் கொசு மனித  இரத்தத்தைக் குடித்து  மலேரியாவை  பரப்புகிறது என்பது திட்டவட்டமாக  கண்டுப்பிடிக்கப்பட்டு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டன .இவற்றை நினைவு கூறும் வகையில் உலக  கொசு ஒழிப்பு தினமாக  கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பெண் கொசு முட்டை உற்பத்திக்காக இரத்தத்திலுள்ள புரதம்,இரும்புச் சத்து போன்றவற்றைத் தேடி மனிதனை நோக்கி வருகின்றது.

மனித  உடலிலுள்ள  கார்பன் - டை - ஆக்சைடு,  லாக்டிக்  அமிலம்,அமோனியா,  கார்போக்ஸிலிக் அமிலம்,ஆக்டினால் போன்ற வை கொசுக்களுக்கு பிடித்த  உணவுகள்.

ஒரு சாதாரண கொசு 5 முதல் 6 மாதங்கள் வரை உயிர் வாழ்கின்றன. 

    மூன்று விதமான  கொசுக்களே உலகை  அச்சத்தின் எல்லைக்கே அழைத்து  மிகக் கொடிய நோய்களைப்  பரப்புகின்றன.

1 • அனோபிலஸ் -- என்ற  பெண் கொசு .

மலேரியாவை பரப்புகின்றன. 

2 •  ஏ டி ஸ்  -- கொசு

        டெங்கு மற்றும் சிக்கன் குனியாவை பரப்புகின்றன. 

3 • கியூலக்ஸ்  --- யானைக்கால் நோயை  பரப்புகின்றன. 

மேலும் "ஜப்பான் என்சப்பாலிட்டிஸ் " என்ற  கொசு ஜப்பானிய  மூளைக்காய்ச்சலை  பரப்புகின்றன. 

கொசு தடுப்பு முறைகள்.

    கொசுக்களால்  ஏற்படும் பல நோய்களையும், அவற்றின்  விளைவுகளையும் தடுக்கும் விதமாக உலக அளவிலான பல அதிநவீன  தொழில்நுட்ப மருத்துவங்கள் கண்டுபிடிக்கப் பட்டு  கையாளப்பட்டு வருகிறது.

   குளம் , குட்டை போன்ற  தண்ணீர் தேங்கியுள்ள  நீர் நிலைகளில் " கம்பூசியா  அஃபினிஸ்" ( Gambusia  affinis ) என்ற  மீன்களை வளர்க்கின்றனர்.இவற்றை பின் பற்றும் நாடுகள் ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்றவையாகும் 

         இம்மீன்கள் கொசுக்களின் லார்வாக்களைத்  தின்றுவிடுவதால்,  கொசுக்கள்  வளர்வதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு கொசுவை வேரோடு அழிக்கும் ஒரு தொழில்நுட்பமாக இந்த  மீனை அந்நாட்டு மக்கள்  வளர்க்கின்றனர்.

பிரேசில் 

         பிரேசில்  நாட்டில் கொசுக்களை முட்டை இடாமல்  தடுக்கும் முறையாக அவற்றை மலடாக்கும் முறையை கையாளுகின்றனர்.

         அவை  குறிப்பிட்ட பருவத்திற்குப் பிறகு கொசுக்கள் வளர்வதற்கு  " டெட்ரா சைக்கிளின் " என்ற  மருந்து தேவைப்படும் வகையில்  கொசுவின் மரபணுவை மாற்றி அமைத்து , அந்தக் கொசுக்களை ஒரு பண்ணையில் வளர்த்து வெளியிடுகின்றனர்,  இந்த கொசுக்கள் பிற கொசுக்களோடு இணைந்து இனப்பெருக்கம் செய்து  பிறக்கின்ற கொசுக்கள் தொடர்ந்து வளர்வதற்கு டெட்ரா சைக்கிளின் மருந்து தேவைப்படும். அது கிடைக்காத போது  வளர முடியாமல் இறந்துவிடும்.

ஆஸ்திரேலியா

             ஆஸ்திரேலியாவில் வால்பேட்சியா" ( Aolbachia) என்ற  பாக்டீரியாவை ஆண், பெண் கொசுக்களின் உடலில் செலுத்தி தடுப்புமுறை ஏற்படுத்தப்படுகிறது. பாக்டீரியா இல்லாத பெண் கொசு முட்டை இடமுடியாது. 

                பெண் கொசுவுடன் பாக்டீரியா உள்ள ஆண் கொசு இனவிருத்தி செய்யுமானால்  பிறக்கின்ற  கொசுக்களுக்குள் வால்பேட்சியா  பாக்டீரியா நுழைந்து விடும்.புதிதாக பிறக்கின்ற கொசுவுக்குள் பாக்டீரியா புகுந்து கருத்தடையாகச் செயல்படும்.  இதனால் கொசு உற்பத்திக் குறையும்.

              இம்முறைகளை  மேற்கொள்வதால் கொசுவினால் ஏற்படும் கடுமையான மற்றும் கொடுமையான நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா,யானைக்கால், மூளைக்காய்ச்சல்  போன்றவை பரவாமல் இருக்க இது போன்ற  திட்டங்களை  நமது நாட்டிலும் கண்டு நோய்பரப்பும் கொசுக்களை வெல்லும் நாளை விரைவில் காண முயற்சிப்போம்! கொசு இல்லா உலகை உருவாக்க ஒன்றிணைவோம்!

Post a Comment

0 Comments