எட்டாம் வகுப்பு - தமிழ் - ஒப்படைப்பு 2 - இயல் 2 - வினாக்களும் விடைகளும் - முன்னுரிமைப் பாடத்திட்டம் 2021 - 22 / 8th TAMIL - ASSIGNMENT 2 - EYAL 2 - QUESTION & ANSWER - REDUCED SYLLABUS 2021 - 22

 


          ஒப்படைப்பு - 2 - இயல் - 2

              வினாக்களும் விடைகளும் 

                 எட்டாம் வகுப்பு - தமிழ்




( இயல் - 2: ஓடை, திருக்குறள், வினைமுற்று)

                               பகுதி-அ

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1.தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்

அ) பாரதிதாசன். ஆ ) பாரதியார்

இ ) வாணிதாசன். ஈ ) வெ.இராமலிங்கனார்

விடை : இ ) வாணிதாசன்

2.'ஓடை' - இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்

அ.கொடிமுல்லை. ஆ. தொடுவானம்

இ.எழிலோவியம். ஈ. குழந்தை இலக்கியம்

விடை : ஆ ) தொடுவானம்

3.நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்

அ.தாலாட்டு                 ஆ.கும்மிப்பாட்டு

இ.வள்ளைப்பாட்டு.       ஈ.எதுவுமில்லை

விடை : இ ) வள்ளைப்பாட்டு 

4.'சீருக்கு ஏற்ப முழவை மீட்டும் - இத்தொடரில் வண்ணமிடப்பட்ட சொல்லின் பொருள்

அ.இசைக்கருவி.        ஆ.வெட்கம்

இ.நெற்பயிர்                ஈ.பாடல்

விடை :  அ ) இசைக்கருவி

5. செஞ்சொல் -   பிரித்து எழுதக் கிடைப்பது

அ.செம்மை+சொல்   ஆ.செம்+சொல்

இ.செஞ்+சொல்.          ஈ.செஞ்சை+சொல்

விடை : அ ) செம்மை + சொல்

6.நேற்று மாமா வீட்டுக்கு வந்தார். - இத்தொடரிலுள்ள வினைமுற்று

அ.மாமா.              ஆ.வீடு

இ.வந்தார்           ஈ.நேற்று

விடை : இ ) வந்தார்

7.பயனில்லாத களர்நிலத்துக்கு ஒப்பானவர்கள்

அ.வலிமையற்றவர     ஆ.கல்லாதவர்

இ.ஒழுக்கமற்றவர்      ஈ.அன்பில்லாதவர்

விடை :  ஆ ) கல்லாதவர்

8.பெருநாவலர் ,  முதற்பாவலர், நாயனார்
முதலிய சிறப்புப் பெயர்களால்
குறிப்பிடப்படுபவர்

அ.திருவள்ளுவர்.         ஆ.தொல்காப்பியர்

இ.இளங்கோவடிகள்.    ஈ.புகழேந்தி

விடை :  அ ) திருவள்ளுவர்

9.நெடுமை+தேர் என்பதைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்

அ.நெடு+தேர்.                    ஆ.நெடுந்தேர்

இ.நெடுத்தேர்             ஈ.நெடுமைத்தேர்

விடை : ஆ ) நெடுந்தேர்

10.பின்வருவனவற்றுள் வியங்கோள்
வினைமுற்றுச் சொல்

அ.ஓடு.             ஆ.வாழ்க

இ.எழுது.          ஈ.பாடு

விடை : ஆ ) வாழ்க

                              பகுதி-ஆ

சுருக்கமான விடை தருக

11.ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை
உவமையாக வாணிதாசன் கூறுகிறார்?

           சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்பிற்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்பி ஓடை செல்கிறது.

12.சான்றோர்க்கு அழகாவது எது?

           சான்றோர்க்கு அழகாவது பொருட்களின் எடையைச் சரியாகக் காட்டும் துலாக்கோல் போல் நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே ஆகும்.

13.குறளைச் சீர்பிரித்து எழுதுக.

தக்கார் தகவிலரென்பது அவரவர் எச்சத்தால்
காணப்படும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தால் காணப் படும்.

14.தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன?

                ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர் , கருவி , நிலம் , செயல் , காலம் , செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.

15.தொடர்களை மாற்றுக.

அ.மல்லிகைப்பூ மிகவும் மணமிக்கது.
  (  உணர்ச்சிக் தொடராக மாற்றுக)

ஆகா ! மல்லிகைப்பூ என்னே மணம் !

ஆ.தினமும் கல்வித்தொலைக்காட்சியைப்
பார். (செய்தித் தொடராக்குக)

தினமும் கல்வித் தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டும்.

16.எவ்வகைத் தொடர் எனக் கூறுக.

அ ) ஆ!புலி வருகிறது!

உணர்ச்சித் தொடர்.

ஆ ) நீ எத்தனை புத்தகங்களைப்
படித்திருக்கிறாய்?

வினாத்தொடர்.

17.எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக.

அ ) உலக இயற்கை நாள் அக்டோபர் 3

ஆ ) உலக வனவிலங்கு நாள் - அக்டோபர் 6 

( புத்தகத்தில் பக்கம் எண் 40ஐப் பார்க்கவும் )


                                பகுதி - இ

விடை தருக.

18 ) ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன  யாவை ?

* நன்செய் , புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.

* விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.

* குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கின்றது.

* நெஞ்சில் இரக்கம் இல்லாதவர்கள் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.


19 ) கல்லாமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துகளைத் தருக.

* கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை.

* கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் இடையே உள்ள வேறுபாடானது , மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.


                               பகுதி - ஈ

செயல்பாடு 

20 ) படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.


வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.


**************     **************    *************

வினா உருவாக்கம்

திரு.மணி மீனாட்சி சுந்தரம் அவர்கள் , 

தமிழாசிரியர் ,    அ.மே.நி.பள்ளி , 

சருகுவலையபட்டி   , மதுரை.

*************    ****************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ********

Post a Comment

1 Comments