ஜூலை மாத ஒப்படைப்பு - 2
வகுப்பு - 10
சமூக அறிவியல் (வரலாறு)
அலகு -2 - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
பகுதி-அ
1.ஒரு மதிப்பெண்வினா
1 ) அமெரிக்காவில் முதல் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி எந்த ஆண்டு தோன்றியது?
அ)பொ.ஆ.1919 ஆ)பொ.ஆ. 1929
இ)பொ.ஆ. 1939 ஈ) பொ.ஆ. 1949
விடை : ஆ ) பொ.ஆ.1929
2. இத்தாலியில் பாசிசக் கட்சிதோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
அ)பொ.ஆ. 1919 ஆ)பொ.ஆ. 1929
இ)பொ.ஆ.1909 ஈ) பொ.ஆ. 1949
விடை : அ ) பொ.ஆ.1919
3. அடால்ஃப்ஹிட்லர் எழுதிய சுயசரிதை நூலின் பெயர் என்ன?
அ)போரும் அமைதியும்
ஆ)வெள்ளை பயங்கரவாதம்
இ)மெயின் காம்ப்
ஈ)புரட்சிகர இளைஞர் இயக்கம்.
விடை : இ ) மெயின் காம்ப்
4. சரியானகூற்றைத் தேர்ந்தெடு.
i ) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச்சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் ஏற்பட்டது.
ii. ) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966இல்விலக்கிக்கொள்ளப்பட்டது.
iii.) தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக போராடிய நெல்சன்
மண்டேலா 27 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார்.
அ)i) மற்றும் ii) சரி ஆ) ii) மற்றும் iii) சரி
இ)i) ii)மற்றும் iii) சரி ஈ) i) மற்றும்iii) சரி
விடை : ஈ ) i) மற்றும்iii) சரி
5. உலகத்தின் எந்தப்பகுதிடாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
அ)ஐரோப்பா ஆ) இலத்தீன் அமெரிக்கா
இ) இந்தியா ஈ) சீனா
விடை : ஆ ) இலத்தீன் அமெரிக்கா
பகுதி-ஆ
11. குறுவினா
6. போயர்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக
தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவழியினரே ஆப்பிரிக்க நேர்கள் என்று அழைக்கப்பட்ட போயர்கள் ஆவர்.
7. மன்றோ கோட்பாடு பற்றி எழுதுக.
அமெரிக்க குடியரசுத் தலைவர் மன்றோ , அமெரிக்காவில் எந்தப் பகுதியிலும் அது வடக்கோ , தெற்கோஐரோப்பியர்கள் தலையீட்டால் அது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிரான போராகக் கருதப்படும்என அறிவித்தார். இதுவே மன்றோ கோட்பாடு ஆகும்.
8. இந்தோ-சீனாவில் நடைபெற்ற வெள்ளை பயங்கரவாதம்" குறித்து
நீங்கள் அறிந்ததென்ன?
* வியட்நாம் விடுதலை வீரர்கள் பிரெஞ்சு கவர்னரை கொலை செய்ய முயற்சித்தனர்.
* விவசாயிகள் கம்யூனிஸ்டுகள் தலைமையில் புரட்சி செய்தனர்.
* பிரெஞ்சு அரசு புரட்சியை அடக்கியது. ஆயிரக்கணக்கான மக்களைச் சுட்டுக்கொன்றது.
பகுதி-இ
III. சிறுவினா
1 , 'தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் பற்றி எழுதுக.
தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல்:
இனஒதுக்கல் என்பதன் பொருள் தனிமைப்படுத்துதல் அல்லது ஒதுக்கிவைத்தல் என்பதாகும். ஒட்டுமொத்த நாடும் பல்வேறு இடங்களுக்கான தனித்தனிப் பகுதிகளாக பிரிக்கப்பட்டன. வெள்ளை இனத்தவருக்கும் வெள்ளையரல்லாத இனத்தவருக்கும் இடையில் திருமணங்கள் தடை செய்யப்பட்டன. ஏறத்தாழ அனைத்துப் பள்ளிகளும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டன. இதன்மூலம் வெள்ளையருக்கு வழங்கப்படும் கல்வியில் இருந்து மாறுபட்ட கல்வியை ஏனைய ஆப்பிரிக்கர்களுக்கும் நடைமுறைப் படுத்தப்பட்டது.
2. ஹோசி.மின்பற்றிஒருகட்டுரைஎழுதுக.
ஹோ சி மின் 1890இல் டோங்கிங்கில் பிறந்தார். தனது 21 ஆவது வயதில் அவர் அவர் ஐரோப்பா சென்றார். பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார். தினசரிகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பாக "விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம்" எனும் சிற்றேடு அவரை நன்கறியப்பட்ட வியட்நாமிய தேசியவாதி ஆக்கியது. 1921இல் ஹோ சி மின் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மாஸ்கோ சென்று புரட்சியின் நுட்பங்களைக் கற்றார். 1925இல் 'புரட்சிகர இளைஞர் இயக்கம்' எனும் அமைப்பை நிறுவினார்.
************** ************* *************
3. தென்ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சிகுறித்து விவரிக்கவும்.
பகுதி - ஈ
IV ) பெருவினா
4 ) ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
> முதல் உலகப்போரின்போது ஹிட்லர் பவேரியாவின் படையில் பணியாற்றனார். ஆனால் முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டது.
> 1919ஆம் ஆண்டு ஏழு நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது, மியூனிச் நகரில் சந்தித்து தேசிய சோசலிஸ்ட்டு ஜெர்மன் உழைப்பாளர் கட்சி என்ற நாசிக் கட்சியை உருவாக்கியது. அவர்களுள் ஹிட்லரும் ஒருவராக இருந்தார்.
************** ************** ************
விடைத்தயாரிப்பு :
திருமதி.ச.இராணி அவர்கள் ,
பட்டதாரி ஆசிரியை ,
அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி ,
இளமனூர் , மதுரை.
************** ****************** **********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ************
0 Comments