உலக புகைப்பட நாள் ( 19 - 08 - 2021 ) - புகைப்படம் தோன்றிய வரலாறு / World Photograph Day )

 


    உலக  புகைப்பட  நாள் - 19 - 08 - 2021

.             ( world  photograph  day )

( புகைப்படங்கள் - மு.மகேந்திர பாபு ) 




உள்ளம்  உணர்ந்தை 

கலையாய் வடிப்பவன்  கவிஞன் 

கண்னால் கண்டதை

நிலையாய் தருபவன்  கலைஞன் -- அந்த 

கவிஞனும்  கலைஞனும்  ஒருவரேயானால்  - அங்கு 

கட்டவிழும்  கற்பனைக்கு  எல்லையேது !

பெருங்காடும்  சித்திரமாகும் 

அலைகடலும்  நர்த்தனமாடும் 

முன்னோர் கண்டது சிற்ப  ஓவியம்

இன்றிவர் கண்டதோ பல புதுகாவியம் 

வாழ்வின்  சுக துயரங்களின் 

நினைவுச்  சுவடாக....

நாளைய  தலைமுறை  உரம் பெற

படிப்பினையாகச்  சில  பாடமாகப்  பலவென

பார்வையில்  பட்டதை

பழுதுபடாமல்  படமாக்குகிறார்  கலைஞர்


கலைஞர்களின்  நுண்ணிய  சிந்தனை

மெல்லிய  மனதின் தொன்மைச் 

 சான்றல்லவா ? 

மகிழ்ந்த நிலையும்     துயர  வலையும் !

இலையிடைக்  கனியும்  

இளந்தென்றல்  அசைவும்

கூவும் குயிலும்  கொஞ்சும் அணிலும் 

மரங்கொத்திப் பறவையும் 

குளம்நீந்தும்  வாத்தும்

சிந்தை  கவரும்   சித்திரங்கள்..



சிட்டுக் குருவியின் சின்னக் கால்களில்

 சிக்கிய  மனதின்

சிதையா  வடிவம் இது...

பரிணாம வளர்ச்சியின்  பக்கங்களில் 

பலபல உருவம் மட்டுமல்லாது 

பறவையின்  இல்லறம்கூட  படமாக்கப் பட்டது

போற்றுதலுக் குரியதே 

புகைப்படங்கள்  பேசும்  ஓவியங்கள் அல்லவா!

அனுபவத்தால்  பெறப்பட்டது 

அனுபவித்து எடுக்கப்பட்ட து


அத்தகு  அழகுணர்  கலையை காலந்தோறும்  போற்றி  வணங்குவோம்!!


          மனித  வாழ்வின் மகத்தான  தொடரில்  நிகழும்  நிகழ்ச்சிகளை  நினைவூட்டும்  நினைவுப்  பெட்டகமாகத்  திகழ்வது புகைப்படங்களே.  மகிழ்ச்யின்  இனிமையும்,  துயரத்தின்  கொடுமையும் நிறைந்த தருணத்தையும்  மீண்டும்  நினைவுக்காட்சி யாக்குவது புகைப்படமே . இவற்றின் வாயிலாக  மனித  வரலாறு  பரிமாறப்பட்டுகிறது. பாரம்பரியம்  , கலாச்சாரம்  போன்றவற்றின் பிரதிபலிப்பாகத்  திகழ்கிறது.


      உலக புகைப்பட  நாள் கொண்டாடுவதன்  நோக்கம்  கலையை  போற்றி வளர்ப்பதற்காக வும், கலைஞர்களை  ஊக்குவிக்கவும் ஆகும். புகைப்பட மென்பது  காணும் காட்சியில் உள்ளம் மகிழ்ந்து, கவியோடு கலந்து தரும் படைப்பு. 

     ஒருவர் உணர்ந்த  கலை மற்றும் அழகியல் உணர்வுகளைக்  காட்டுவது  புகைப்பட ம் . இவற்றில் தன்னை  ஈடுபடுத்தி, எண்ணத்தை மேம்படுத்தி  சரியாக வரும்  வரை உறுதிகொண்டு  உருவாக்கிய  கலைஞன்  பெறும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் ஒருமித்த  வடிவம் பெறுவதே புகைப்படம். புகைப்படக் கலைஞர்களின் சிறப்பையும், திறமையையும் போற்றும்  விதமாக  ஆண்டுதோறும்  ஆகஸ்ட்  19 - ஆம்  நாள் உலக புகைப்பட தினமாகக் கொண்டாடப்  படுகிறது.



புகைப்படக் கலையின் தோற்றம்  13 - ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. 

ஒளிப்படவியல் ( photography)

           ஒளிப்படவியல்  என்பது ஒளிப்படத்தகடு போன்ற  ஒரு ஒளியுணர்  ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையாக  பயன்படுத்த படுகிறது.

      ஒரு பொருளில் இருந்து வெளியிடப்படும்  ஒளியானது,  உணர்திறன் கொண்ட ஒரு மின்னனு ஊடகத்தின் மீது ஒரு வில்லையின் வழியாகச் சென்று படும்போது, அப்பொருளின் தோற்றம் குறித்த தகவல் வேதியல் அல்லது மின்னனு முறையில் சேமிக்கப் படுகிறது.

        இதுகல்வி,வணிகம், விளம்பரம், பொழுதுபோக்கு,பதிவுத்துறை,பத்திரத்துறை, பல்லூடக  கருத்து தொகுப்பு, திரைப்படத்துறை போன்ற பல துறைகளில் ஒளிப்படவியல் பயன்படுகிறது.

புகைப்படக்  கண்டுபிடிப்பு

       பிரிட்டிஷ்  அறிவியலார்  1800 - ஆம்  ஆண்டு களில் " தாமஸ்  வெட்ச்சூட் " ( Thomas Wedgwood)   - என்பவர்  ஒளியுணர் பொருளைக் கொண்டு  அப்ஸ்கியுரா  ஒளிப்படக் கருவிமூலம்  படப் பதிவு செய்யும்  முதல் முயற்சியாக  மேற்கொண்டார். அவர்  வேதிப்பூச்சு கொண்ட  காகிதம்  அல்லது  வெள்ளைத் தோலை  வெள்ளி  நைட்ரேட்  உடன்  வினைப்படுத்தி புகைப்படம்  தயாரித்தார்.

        நேரடியாக சூரிய ஒளியில் பொருட்களை வைத்து  அவற்றின் நிழல் வேதிப்பூச்சுடைய  பரப்பின் மீது விழச்  செய்தார்.அந்நிழல்  பரப்பில்  பதிவாகிய சோதனையில்  வெற்றிக்கண்டார்.இதுவே புகைப்படம் கண்டுப்பிடித்தலின் தொடக்கம் ஆகும்.இதனைத் தொடர்ந்தே பல சோதனைகள்  மேற்கொள்ளப் பட்டன.




 புகைப்படத்  தொடக்கம்

        முதன் முதலில் 1826 - ஆம் ஆண்டு பிரான்சை  சார்ந்த  புகைப்பட க் கலைஞரான ஜோசப் நைஸ்போர்  நீப்ஸ்" (Joshap  Nicephore Niepce) என்பவர் எதிரொளிப்பு அடையாளச் செய்தி வேலைப்பாடுடன்  அச்சடிக்கப்பட்ட உலோகத் தகட்டில்  செதுக்கிய சித்திரம்  புகைப்பட முறையில் படியெடுக்கப் பட்டு,நவீன புகைப்பட ம் ஒன்றை எடுத்தார். ஏனோ இவை  கால ஓட்டத்தால் மறைந்தன. ஆனால் இதுவே ஒளிப்படக் கருவியினால் எடுக்கப்படும்  நிரந்தர புகைப்பட ப் படத்தின்  முன்னூட்டமாக அமைந்தது.

     அதன் பின் 1839 - ஆம் ஆண்டு " லூயிஸ் டாகுரே " என்பவர் பாரிசில் உள்ள  போல்வர்டு கோயில், ஒரு தெரு போன்ற வற்றை புகைப்பட மாக எடுத்தார்.இதுவே முதல்  தனிநபரால்  எடுக்கப்பட்ட புகைப்பட ம் ஆகும்.


லூயிஸ் டாகுரே 

     லூயிஸ்  டாகுரே  என்பவர் 19 - ஆம் நூற்றாண்டில்  சில்வர் காப்பர் (silver, copper) பிளேட்டில்  பிம்பங்கள் விழும் வகையில் அமைத்து புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.மரத்தால் செய்யப்பட்ட புகைப்பட க் கருவியில் " லென்ஸ் " பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு "டாகுரியோடைப் " என பெயரிடப்பட்டது இவற்றிற்கு  1839 - ஆம் ஆண்டு ஜனவரி 9 - ஆம் நாள் பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் ( ,France Academy Fo Science) ஒப்புதல் அளித்தது.

      இதன் செயல்பாடுகளை அதே ஆண்டு ஆகஸ்ட்19 - ஆம் நாள் " ப்ரீ  டூ தி வேர்ல்ட் " ( Free to the world)  என உலகம் முழுவதும் அறிவித்தது. இச்செயலைப்  போற்றும் வகையில் அந்த நாளே உலக புகைப்பட தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அறிவியலாரின் கண்டுப்பிடிப்புகளில்  சில...

வில்லியம் ஹென்ரி பாக்ஸ் - 1841

       1841 - ம் ஆண்டு பிரிட்டனைச்  சேர்ந்த வில்லியம்  ஹென்றி பாக்ஸ்  என்பவர் " கலோடைப் "  என்ற  முறையை அறிமுகப்படுத்தி அதில் நெகட்டிவுக்கு பதிலாக காகிதத்தைப் பயன்படுத்தினார். இதிலிருந்து பாசிடிவ் இமேஜை  உருவாக்கினார்.

1851 - ம் ஆண்டு பிரிடிரிக் ஸ்காட் என்பவர் சில்வர் நைட்ரேட்  பயன்படுத்தப்பட்ட வெட்  கோலோடியன் செயல்முறையை கண்டறிந்தார்.

செல்லுலாய்டு  பிலிம் பயன்பாடு

          1880 - ம் ஆண்டு களில்  செல்லுலாய்ட்  பிலிம்களைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்கும் கருவியை ஜான்  கார்பட்,  ஹன்னி பால் குவிட், ஈஸ்ட்மன், கோடாக் ஆகியோர் தயாரித்தனர்.இந்த முறையில்  செல்லுலாஸ்  நைட்ரேட் பயன்படுத்தி செய்யப்பட்டது. 


ஜார்ஜ்  ஈஸ்ட்மன்

********************

              1888 - ம் ஆண்டு " ஜார்ஜ்  ஈஸ்ட்மன் " முதல்  முறையாக பேப்பர் பிலிம்களைப் பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையைக்  கண்டறிந்தார்.

         இவரைத் தொடர்ந்து 1900 - ல் "பாக்ஸ் பிரவுன் "  என்ற கேமராக்களை  கோடாக்  அறிமுகப் படுத்தினார். 35 - மி.மி  ஸ்டில்  கேமராக்களை  1913 - ல் " ஆஸ்கர்  பர்னாக் " வடிவமைத்தார்.இது  புகைப்படத் துறையில்  புதிய வேகத்தை உண்டாக்கியது. இதன் பிறகு பிலிம் ரோல்  தயாரிப்பு  பெருமளவு தொடங்கியது.

           

டிஜிடல் கேமரா

        1980 - ம் ஆண்டு பிக்ஸல்  முறையில் புகைப்பட ங்களை  உருவாக்கும் டிஜிட்டல் கேமராவை"  சோனி " நிறுவனம் தயாரித்தது. இது புகைப்பட க் கலையின் பாதையை வேறு கோணத்தில் வழிகண்டது. தற்போதைய வரவுகளான  செல்போன்  கேமராக்கள் வந்து புதிய விளைவுகளை கொடுத்து,  அதனால் போட்டோக்களின்  எண்ணிக்கையை அதிகரிக்க  உதவியது.

புகைப்பட கலையின்  வளர்ச்சி 

         புகைப்பட த்துறை இன்று உயர்ந்தோங்கி நிற்கிறது. டிஜிட்டல் யுகத்தில் புகைப்பட க்  கலையை வளப்பதற்கும்,  தொழில் நுணுக்கங்களைக் கற்றுத் தருவதற்காகவும்   தொழில் சார்ந்த  பல இதழ்களும், புத்தகங்களும்  வெளிவந்து  உதவுகின்றன.

    இச்சிறப்புப் பெற்று வளர்ந்து வரும் கலையை  சிறப்பிக்க உலகம் முழுவதும் புகைப்பட  போட்டிகள் நடத்தப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன. இவற்றின் விளைவே  கற்கும் ஆர்வம் மிகுந்த பயனுள்ள  கலையாக புகைப்பட க் கலை மாறியுள்ளது.

புகைப்படம் மற்றும்   நிழற்படங்கள்  ஒரு பார்வை

      ஒளிபடர்ந்த புகையின்  நிழலை தருவதால்  இவை புகைப்படமாம். புகைப்படமும், நிழற்படமும் மறைந்து  ஒளிர்கின்ற  ஒளிப்படமே இப்போது ஒயிலாடுகிறது.  ஒளிரும்  புள்ளிகளில் ஒன்றுபட்ட உருவானது. அதாவது ஒளிப்புள்ளிகளால் இணைக்கப்பட்டது , வரையப்பட்டது. இதுவே ஒளிப்படம் ( photography) ஆகும்.

       சொல்வளம்  மிகுந்து காணப்படும் தமிழ் மொழியில் புகைப்பட த்  தொழில் சார்ந்த  சொற்களுக்கும் கலைச்சொல் விளக்கம் காணப்படுகிறது  

      ஒளிப்புள்ளி என்பது  சங்கத்தமிழ் சொல்லாக  "புகர்" அறியப்படுகிறது. ஒளிப்புள்ளிகளை  ஒன்றினைப்பது  , வரைதல் என்றும் பொருள் படும் . தைத்தல் என்பதை வரைதல் எனவும்  பொருள் கொள்ளத்தக்கது. இந்த  புகர் என்பதையும் ,தைத்தல்  என்பதையும் இணைத்தால்  கிடைப்பது புதியச் சொல்.

புகர் + தை = புகர்தை 

ஒளிப்புள்ளி + வரை = ஒளிப்புள்ளிகளால்  வரைதல் 

புகர்தை = ஒளிப்புள்ளிகளால்  வரைதல் 

புகந்தை = photograph  என்றும்

புகர்த்தி  = camera  என்றும்  பொருள் தருகிறது.


1 • புகந்தை = ஒளிப்புள்ளிகளால்  வரையப்பட்டது = ஒளிப்படம். 

2 • புகர்த்தி --- ஒளிப்புள்ளிகளால்  வரைய  உதவுவது -- ஒளிப்படம் எடுப்பது.என விளக்கம் காணப் படுகிறது.

     இத்தகைய  சிறப்பு மிக்க  கலையைப் பாதுகாத்து உயர் நிலையை அடையவும்,  புகைப்பட க் கலைஞர்களை ஊக்குவித்து கலைவளர  வாழ்த்துவோம்!



இயற்கையை நேசிக்கும் ,

பைந்தமிழ் குழு ( Green Tamil Team )

Post a Comment

1 Comments

  1. மிகவும் சிறப்பு ஐயா. புகைப்பட வரலாறு தொகுப்பு.. மிகவும் சிறப்பு.

    ReplyDelete