12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 2021 - 2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் - 3 . இலக்கணக்குறிப்பு - வினாக்களும் விடைகளும் / 12th REFRESHER COURSE - 2021 - 2022 - QUESTION & ANSWER

 


                    பொதுத்தமிழ்

                          வகுப்பு - 12 

            புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

                           2021 - 2022

                  கற்றல் விளைவுகள் , 

      கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 

      மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.

                           தலைப்பு  : 3

                 இலக்கணக்குறிப்பு




     வணக்கம் அன்பு நண்பர்களே ! நம்முடைய பள்ளிக் கல்வித்துறை சார்பில் வந்துள்ள தமிழ்நாடு அரசின் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 12 ஆம் வகுப்பு பொதுத் தமிழில் மொத்தம் 30 தலைப்புகள் உள்ளன. இதில்  கற்றல் விளைவுகள் , ஆசிரியர் செயல்பாடு , கற்பித்தல் செயல்பாடுகள் , மாணவர் செயல்பாடு மற்றும் மதிப்பீடு என்று மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

         செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இக்கட்டகம் மிகவும் பயனுள்ளதாக அமையும். கட்டகத்திலுள்ள ஒவ்வொரு தலைப்பையும் , அதிலுள்ள செயல்பாடுகளையும் , மதிப்பீடுகளுக்கான விடைகளையும் காண்போம்.


               இலக்கணக்குறிப்பு


கற்றல் விளைவுகள்

* செய்யுளில் உள்ள இலக்கண வகைச் சொற்களைக் கண்டறிந்து அவற்றைப் புரிந்துகொள்வதில் பேரார்வத்தை ஏற்படுத்துதல்,

*  திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் கொண்டும் இலக்கணக்குறிப்புகளைக் கண்டறியச் செய்தல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல்

           மாணவர்களே! இந்தக் கடித உறையில் நான் தபால் வில்லை (stamp) ஒட்டியுள்ளேன். இதில் ஒட்டிய பசை எங்கே? என்று வினவி இது போன்று தமிழ்ச் சொற்களிலும் உருபுகள் மறைந்து வரும் என்று கூறி ஆர்வமூட்டல்,

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு:1

ஒரு வேர்ச்சொல்லைக் கொண்டு பல்வேறு சொற்களை உருவாக்கி அதற்கான இலக்கணக் குறிப்புகளை அறிதல்..



தொகை = மறைந்து வருவது

பண்புத்தொகை:

*  குணம், நிறம்,சுவை, வடிவம் (அளவு) என்ற நான்கு பண்புகளுள் ஒன்றைப் பெற்று வரும். இரண்டு சொற்களாக வரும்.

* முதலில் பண்புச்சொல்லும், அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்து, இரண்டும் இணைந்து வரும்.

* இரண்டு சொற்களுக்கிடையில் 'ஆகிய', 'ஆன' என்னும் சொற்களுள் ஒன்று மறைந்து வரும்.

* பண்புத்தொகைச் சொற்களைப் பிரிக்கும் போது பெரும்பாலும் நிலைமொழி ஈறு 'மை' விகுதியைப் பெறும்.

சான்று

செந்தமிழ் = செம்மை+ தமிழ் (பண்பு + பெயர்)

செம்பரிதி = செம்மை+ பரிதி

இருபெயரொட்டுப் பண்புத்தொகை:

* இரண்டு பெயர்ச்சொற்கள் ஒட்டி (சேர்ந்து) வரும்.

*முதல் சொல் சிறப்புப் பெயராகவும் இரண்டாம் சொல் பொதுப் பெயராகவும் அமையும்.

சான்று

வாழை + பழம் = வாழைப்பழம்

சாரை + பாம்பு = சாரைப்பாம்பு

செயல்பாடு: 2

வினைத்தொகை

*  இரு சொற்கள் இணைந்து வரும்

* முதற்சொல் வினைச் சொல்லாகவும் (வினைஅடி / வினை வேர்), இரண்டாம் சொல் பெயர்ச்சொல்லாகவும் அமையும்.

* இருசொற்களுக்கு இடையில்காலம் காட்டும் இடைநிலைகள்மறைந்துவரும். முக்காலத்தையும் உணர்த்தும்.

* காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகை.

சான்று

1. அலைகடல்

2 திருந்துமொழி

செயல்பாடு: 3

உவமைத்தொகை

* இரண்டு சொற்கள் இணைந்து வரும்.

* முதற்சொல் உவமைச் சொல்லாய் வரும்.

* இரண்டாம் சொல் பொருளை (உவமேயம்) உணர்த்த வரும்.

*இரு சொற்களுக்கு இடையில் போன்ற, போல என்னும் உவம உருபு மறைந்து வரும்,

சான்று

முத்து + பல் = முத்துப்பல்

செயல்பாடு: 4

உம்மைத்தொகை

*இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து வரும்.

* சொற்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாய் இருக்கும்.

*ஒவ்வொரு சொல்லுக்கும் இறுதியில் 'உம்' என்ற இடைச்சொல் மறைந்து வரும்.

சான்று

1. இரவு பகல் 2. தாய் தந்தை 3. மா/ பலா, வாழை

எண்ணும்மை

* ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்கள் சேர்ந்து வரும்.

* 'உம்' என்ற இடைச்சொல் வெளிப்படையாக வரும்.

சான்று

1. தேமாவும் புளிமாவும் 

2. ஆடலும் பாடலும்

 3. வையகமும் வானகமும்

(இதேபோல் பிற இலக்கணக்குறிப்புகளை மாணவர்களுக்கு விளக்கவும்.)

மாணவர் செயல்பாடு

தனி மாணவர் செயல்பாடு

         ஆசிரியர், கரும்பலகையில் பல்வேறு சொற்களை எழுதி, ஒவ்வொரு மாணவராக அழைத்து அச்சொல்லுக்குரிய இலக்கணக் குறிப்புகளை எழுதச் செய்தல்.

குழுச் செயல்பாடு

      மாணவர்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்தல். பாடநூலில் உள்ள செய்யுள் பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதிலமைந்துள்ள சொற்களுக்கு இலக்கணக் குறிப்புகளைக் காணச் செய்தல்.



மதிப்பீடு

1. பொதிகை மலை - இலக்கணக் குறிப்பு தருக.

பொதிகைமலை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை 


2. எண்ணும்மை என்றால் என்ன?

* ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்கள் சேர்நது வரும்.

* ' உம் ' என்ற இடைச்சொல் வெளிப்படையாக வரும்.

சான்று : ஆடலும் பாடலும்


3. திருந்துமொழி - இலக்கணக் குறிப்பு தருக.

திருந்துமொழி - வினைத்தொகை

****************   ************   **************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ************

.

Post a Comment

0 Comments