வகுப்பு - 7 , தமிழ் - முதல் பருவம்
இயல் 1 - கவிதைப்பேழை
எங்கள் தமிழ் - நாமக்கல்
கவிஞர்.வெ.இராமலிங்கனார்
**************** *************** **********
வணக்கம் மாணவச் செல்வங்களே ! நம்முடைய மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரிய நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்று முதல் அவ்வப்போது ஏழாம் வகுப்பு தமிழ்ப்பாடம் பதிவேற்றப்பட உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவுத்துகு கொள்கிறேன்.
முதல் பருவத்தில் இயல் 1 ல் கவிதைப் பேழையாக அமைந்துள்ள எங்கள் தமிழ் பாடலை இன்றைய வகுப்பில் காண்போம்.
முதலில் பாடலுக்கான விளக்கத்தை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப்பதிவில் காண்போமா ?
நமக்குப் பாடமாக உள்ள எங்கள் தமிழ் என்ற பாடலை இயற்றியவர் நாமக்கல் கவிஞர்.வெ.இராமலிங்கனார் அவர்கள். அவர்களைப் பற்றிய செய்தியை நூல்வெளி பகுதியில் காண்போமா ?
நூல்வெளி
இப்பாடலின் ஆசிரியரை, நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர். இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர். மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துக் கரப்பட்டுள்ளது.
நுழையும்முன்
உலக மொழிகளில் தொன்மையானது நம் தமிழ்மொழி. அது மென்மையும் இனிமையும் வளமையும் உடையது; வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது; காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, என்றும் இளமையோடு திகழ்வது. அத்தகு தமிழ்மொழியின் சிறப்பை நாமக்கல் கவிஞரின் பாடல் மூலம் அறிவோம்.
பாடல்
*அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் தரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது
கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்*
-- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.
சொல்லும் பொருளும்
ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும்
விரதம் - நோன்பு
குறி - குறிக்கோள்
பொழிகிற - தருகின்ற
பாடலின் பொருள்
நம் தாய்மொழியாம் தமிழ் மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது. அதுவே தமிழாக்களின் குரலாகவும் விளங்குகிறது. தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தட்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்,
கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யானமயைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ் அன்பும் அறமும் உதவும்.
நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ் மொழி தேன் போன்ற மொழி ஆகும்.
*************** ************* *************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** **********
0 Comments