ஆறாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் 8 - இயல் 2 - கற்கண்டு - முதலெழுத்தும் , சார்பெழுத்தும் - 6 TAMIL - WORKSHEET 8 - QUESTION & ANSWER

 

ஆறாம் வகுப்பு - தமிழ் 

இயல் 2

பயிற்சித்தாள் - 8

கற்கண்டு - முதலெழுத்தும், சார்பெழுத்தும் **************    ************    *************

1 ) சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

தமிழ் எழுத்துகள் --------  வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

விடை: அ ) இரண்டு (முதல், சார்பெழுத்து)

2. பொருத்துக.

                                                            விடை

அ) உயிர் எழுத்துகள்  -  12

ஆ) மெய்யெழுத்துகள் -  18

இ ) முதல் எழுத்துகள்  -  30

ஈ ) சார்பெழுத்துகள்    -  10

3 )சரியா? தவறா? எனக் குறிப்பிடுக. (பக். 44)

கொடுக்கப்பட்டுள்ள உயிர் மெய்யெழுத்துகளை ஒலித்துப்பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

க,கா,கி,கீ.கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ

அ) உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் உயிர் எழுத்தை ஒத்திருக்கும். (தவறு)

ஆ) உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும்.

4. உன் பெயரை எழுதி அதில் உள்ள உயிர்மெய்யெழுத்துகளை எடுத்து எழுதுக.

விடை: கண்ணன்

க - உயிர்மெய்

ண் - மெய்

ண--'உயர் மெய்

ன் - மெய்

5. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளை உச்சரித்துப் பார்த்து அட்டவணையில் நிரப்புக.


ஆந்தை, எறும்பு.அன்பு. இயற்கை, உலகம்


உயிர் எழுத்து - ஆ , எ , அ , இ , உ


மெய்யெழுத்து - ந் , ம் , ன் , ற் , ம் 

 உயிர்மெய்யெழுத்து - தை , று , பு , ய , கை , ல

6. கோடிட்ட இடத்தைத் தமிழெண்ணால் நிரப்புக.
தமிழ் எண்களை அறிவோம்.
சார்பெழுத்துகளின் வகைகள் - 10 - க0


7. அடிக்கோடிட்ட எழுத்தின் வேறுபெயர்களை எழுதுக.


எஃகு -  முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம்


8. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) மெய்யெழுத்துகள் மூன்று  வகைப்படும்.

ஆ) மெய்யெழுத்துகளின் மொத்த எண்ணிக்கை 18 ஆகும்.

9. கட்டங்களில் மறைந்துள்ள சார்பெழுத்து வகைகளின் பெயர்களைக் கண்டுபிடித்து
வண்ணமிடுக.


(சார்பெழுத்துகளின் வகைகள் - உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை,
குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்)


10. கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து, அவை குறிப்பிடும் எழுத்தை எழுதுக.

* நுட்பமான ஒலிப்புமுறை
* தனித்து இயங்காது
* சார்பெழுத்து
* தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய்
எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
*மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம்

விடை : ஃ

*************   ************    *************

மேலே உள்ள வினாக்களின் விடைகளை இனிய , எளிய விளக்கத்துடன் காட்சிப் பதிவாகக் கண்டு மகிழுங்கள்.

*************    ************    **************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* *********

Post a Comment

0 Comments