ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 42
அன்பைச் சொல்லும் அழகிய ஓவியம்
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
************** *************** ************
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! இன்றைய தினத்திற்கேற்ற ஓர் அழகான ஓவியத்தை நம்முடைய ஓவியர் வரைந்துள்ளார். மதங்களைக் கடந்த மனிதநேயத்தை வெளிப்படுத்தும் அற்புதமான ஓவியம்.
ஆறுகள் பலவாயினும் அவை சென்று சேருமிடம் கடல். அதுபோல சமயங்கள் பலவாயினும் அவை எல்லாமே அன்பையே சேரும் இடமாகக் கொண்டுள்ளன. அன்புடையோர் மேலோர்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது தாரக மந்திரம் . பல இன , மொழி , மதங்களைச் சார்ந்தவர்களாக இருப்பினும் ஒரு தாய்ப் பிள்ளைகளாக நாம் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி வருகிறோம்.
இன்று ஈகைத் திருநாள். இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு நாம் இன்று காலையிலேயே கவிதையும் , கட்டுரையுமாய் ஒரு பதிவிட்டோம். இப்போது ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் செய்தியை அழகாய் ஒற்றை ஓவியத்தில் சொல்லலாம் என்பதற்கு இந்த ஓவியம் சான்று.
வாங்க வரையலாம் !
படம் : 1
படம் : 2
படம் : 3
**************** ************** ***********
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments