ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி 38 - மிதிவண்டி ( சைக்கிள் ) வரைவது எப்படி ? ஒவ்வொரு குழந்தையும் ஓவியரே !

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 38 

சைக்கிள் அழகாக வரைவது எப்படி ?

வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.


***************    *************     **********

                    வணக்கம் செல்லக் குழந்தைகளே  ! இன்று உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒவியம் ஒன்று வரைய உள்ளோம். ஆம் ! ஆவலோடு நீங்க சொல்லும் சைக்கிள்தான் அது.

முப்பது வருடங்களுக்கு முன்பு ஒருவர் வீட்டில் சைக்கிள் இருந்தால் அவர் வசதியானவர். நடந்தே எங்கும் பழகிய கால்களுக்கு சைக்கிள் கிடைத்தால் எவ்ளோ சந்தோசமா இருக்கும்.?

        அப்போதெல்லாம் ஊரில் இரண்டு மூன்று வாடகைச் சைக்கிள் கடைகள் இருக்கும். மணிக்கு 1 ரூபாய். எடுத்துப் போய் நல்லா ஓட்டிப் பழகலாம். கல்லில் முள்ளில் விழுந்தாலும் டயர் ஒன்னும் ஆகாது. ஏன்னா , அந்த டயர் கல் டயர்.

            சிலபேரு சைக்கிள ஜோடிச்சு வச்சிருப்பாங்க பாருங்க. அது செமயா இருக்கும். போக்ஸ் கம்பிகளுக்குள் வண்ண வண்ண பாசிகள். கைப்பிடிக்குள் பழைய கேசட்டின் நாடாக்கள். ஐஸ்காரர் ஒலி எழுப்பும் பம்பூத் ஹாரன். எப்போதும் பளபள என மினுங்கும் மக்கார்டு , கண்ணாடி என அவர்கள் உலா வருவது மிக அழகாக இருக்கும்.

           அப்பா , எனக்கு ஒரு குட்டைச் சைக்கிள் வாங்கிக் கொடுங்கப்பா. பழசா இருந்தாலும் பரவால்ல. தினமும் 7 கி.மீ. நடந்து பள்ளிக்குப் போறது சிரமமா இருக்குனு சொல்ல , ஒரு பழைய சைக்கிள எங்கப்பா வாங்கிக் கொடுத்தார்.

                 இப்பல்லாம் எங்கு பார்த்தாலும் ஸ்கூட்டியில் ப்யூட்டியாக பெண்கள் உலா  வருகிறார்கள்.  சைக்கிள் மறந்து போச்சு. பெட்ரோல் விலை விர்ருனு கூடுனதும் சிலபேர் திரும்பவும் சைக்கிள நோக்கி சவாரி செய்கிறார்கள்

      உடல் ஆரோக்கியமா இருக்கனுமா ? வாங்க தினமும் சைக்கிள் ஓட்டுவோம்.

படம் : 1



படம் : 2




படம் : 3



எப்படி இருக்கு நம்ம சைக்கிள் ? புதுசில்ல . ஏன் புது காருக்கு மட்டும்தான் மாலையா ? என் புதுச்சைக்கிளுக்கு பூங்கொத்து எப்படி ?


**************     ****************   **********


வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410       

*************     **************   ************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

0 Comments