பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் 3 - பண்பாடு
பாடப்பகுதி நெடுவினா - 1
************ ************** ************
நெடுவினா
1. ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
ஆற்றுப்படுத்துதல் இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியுள்ளது. இந்த வழிகாட்டுதல் என்பது மாணவர்களுக்கு, பெண்களுக்கு, முதியோர்களுக்கு, நோயுற்றவர்களுக்கு எனப் பல்வேறுபட்டு நிலையில் அமைகிறது. மாணவர்களுக்கு வழிகாட்டுதல் இன்றைய அறிவியல் வளர்ச்சியின் பயனாய் வளர்ந்துவரும் கல்வியைப் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு அளிக்க வேண்டியது அவசியமாகிறது.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் கல்லூரிப் படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு எந்தத் துறையில் சேர்ந்து படித்தால் என்னென்ன வேலைகள் கிடைக்கும். அயல் நாடுகளுக்குச் செல்லாமல் சொந்த நாட்டிலேயே இருந்து பணிபுரியும் (அ) தொழில் தொடங்கும் வாய்ப்பு பற்றிய ஐயங்களைத் தீர்த்து வைத்தல் இன்றியமையாதது. இச்செயல் மாணவர்களின் எதிர்காலத்திற்கான ஒரு செயல்திட்டமாக உள்ளது.
மாணவர்களுக்கான ஆலோசனை :
எல்லா மாணவர்களும் ஒரே மனநிலையைப் பெற்றவர்கள் இல்லை. வீட்டுக்சூழல், பள்ளிச்சூழல் சிலரைப் பாதித்திருக்கும். அவற்றை அறிந்து அவர்களுக்கான தீர்வைக் காண்பதற்கும் பலர் செயலாற்றி வருகின்றனர். நீடித்த மனச்சோர்வு, இனம்புரியாத பயம், தேவையற்ற கவலை, தங்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்த முடியாத நிலை, அவர்களுடைய திறன்களை அறிய விரும்பாத பெற்றோர்களின்
அக்கறையின்மை எனப் பலவற்றால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உதவிபுரியும் மருத்துவர்களும் உள்ளனர். மாணவர்களின் உளவியலை அறிந்த அனுபவமிக்கவர்களும் இதற்கான
உதவிகளைச் செய்கிறார்கள்.
பெண்களுக்கான வழிகாட்டுதல் :
இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பல வகையான இன்னல்களைச் சந்திக்கின்றனர். சமூக வலைதளங்கள் இவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட்டு வழிபடுத்துகின்றன.
பள்ளிகளில் மாணவிகளுக்கு சமூகத்தில் தனித்து நின்று போராடுவதற்கான ஆரோக்கியமான உடல் நலத்தையும் நிம்மதியான உளநலத்தையும் பெறுவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.
முதியோர்களுக்கு :
பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கும் பிள்ளைகளே இல்லாத முதியோர்களுக்கும் உதவி செய்யும் பொருட்டு பல நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிறுவனங்கள் மூலம் பலர் பயன்பெறுகின்றனர்.
விவசாயிகளுக்கு :
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களில் வாழும் விவசாயிகள். இன்று இவர்களின் நிலை கவலைக்கிடம்தான். காரணம் மழையில்லை மற்றும் விளைநிலங்கள் பலமாடிக் கட்டிடங்களாக
மாறியமைதான். தற்போது இவர்களுக்கும் உதவி புரிவதற்குப் பல தொண்டு நிறுவனங்களும் அரசும் செயல்பட்டு வருகிறது. இயற்கை வேளாண்மைக்குத் தேவையான விதைகள் உரங்கள் வழங்கி
உதவிபுரிகிறது.
முடிவுரை :
இவ்வாறு இன்றும் ஆற்றுப்படுத்தல் மூலம் பலருக்கும் வழிகாட்டப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் மருத்துவ உதவிகள் செய்தும், ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு நல்கியும் தங்குவதற்கு இடம் அளித்தும்
உதவிகள் பல புரிகின்றனர். நாமும் நம்மால் ஆன உதவிகளைச் செய்யலாம்.
**************** ************* *************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
************** ************* ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments