வகுப்பு -10 தமிழ் - இயல் 3 - பண்பாடு - கவிதைப் பேழை - மலைபடுகடாம் - எழுத்து & காட்சிப்பதிவு விளக்கம் / 10 TAMIL - EYAL 3 - MALAIPADUKADAAM



 

                  வகுப்பு - 10 , தமிழ்

இயல் - 3 , பண்பாடு - கவிதைப் பேழை

மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்


***************     *************   *********

          வணக்கம் நண்பர்களே ! நாம் கடந்த வகுப்பில் காசிக்காண்டம் பாடலை காட்சிப் பதிவு விளக்கத்தில் கண்டோம். இன்று மலைபடுகடாம் என்ற பாடப்பகுதி பாடலைக் காண்போம்.


        பாடப்பகுதிக்குச் செல்லும்முன் நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப்பதிவு விளக்கத்தைக் காண்போம்.



மலைபடுகடாம் என்ற வார்த்தைக்கான பொருளே வியப்பாக இருக்கிறது பாருங்கள்




நூல்வெளி பகுதியில் உள்ள செய்திகளைக் காண்போம்.


நூல் வெளி

              பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று 'மலைபடுகடாம் 563 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது; மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மனப்படுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.

நுழையும் முன்


             பண்டைத் தமிழர்கள் பண்பில் மட்டுமன்றி, கலைகளிலும் சிறந்து
விளங்கினர் என்று கூத்தர், பாணர், விறலியர் போன்ற கலைஞர்கள் ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறன்களை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்தனர். அவர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் விருந்தோம்பியும் பரிசளித்தும் போற்றினர். அவ்வகையாக விருந்தோம்பிய தன்மையைக்
காட்சிப்படுத்துகிறது தினைச்சோற்று விருந்து.

பாடல் 

அன்று அவன் அசைஇ, அல்சேர்ந்து அல்கி 
கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி,


அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் எனினே,


நும்இல் போல நிர்லாது புக்கு,
கிழவிர் போலக் கேளாது கெழீஇ
சேட் புலம்பு அகல இனிய கூறி
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்


                                                   அடி: 158 - 29


சொல்லும் பொருளும்


அசைஇ -  இளைப்பாறி 

 அல்கி- தங்கி

கடும்பு - சுற்றம்

நரலும் - ஒலிக்கும்

ஆரி  - அருமை

படுகர் - பள்ளம்

வயிரியம் -  கூத்தர்

வேவை -  வெந்தது

இறடி - தினை

பொம்மல் - சோறு

பாடலின் பொருள் 

            நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர் பரிசில் பெறப்போகும் கூத்தரைக் கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய ஊர்களில் தங்கி உணவு  பெறுவதற்கு வழிப்படுத்துதல்.

            ' பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்
இரவில் சேர்ந்து தங்குங்கள் . எரியும் தெருப்பைப் போல ஒளிரும்
பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு 
அணந்துகொள்ளுங்கள்: சிவந்த பூக்கள்
கொண்ட அசோக மரங்களை உடைய 
பொருத்தமான பாதையில் செல்லுங்கள்;
அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் 
கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில்
உள்ள சிற்றூரை அடையுங்கள்.
அங்குள்ளவர்களிடம், பாகைவரைப்
பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும்
மானமும் வெற்றியம் உடைய நன்னனின் 
கூத்தர்கள்' என்று சொல்லுங்கள்.

                அதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள்  போவது போல அவர்களுடைய
வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்.
உறவினர் போலவே அவர்கள் தங்களுடன்
பழகுவர். நீண்ட வழியைக் கடந்து வந்த
உங்களின் துன்பம்தீர இனிய சொற்களைக்
கூறுவர், அங்கே , நெய்யில் வெந்த
மாமிசத்தின் பொரியலையும்: தினைச்
சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்."


இலக்கணக் குறிப்பு


அசைஇ , கெழீஇ  - சொல்லிசை அளபெடைகள்

பருஉக் , குரூஉக் - செய்யுளிசை அளபெடைகள்

பகுபத உறுப்பிலக்கணம்


மலைந்து - மலை + த் ( ந் ) + த் + உ

மலை - பகுதி
த் - சந்தி'ந்' ஆனது விகாரம்
த் இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி


பொழிந்து - பொழி - த்(ந்) + த் + அ

பொழி - பகுதி 
த் - சந்தி 'ந்' ஆனது விகாரம்
த் இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி

ஆற்றுப்படை 

      ஆற்றுப்படுத்தும் கூத்தன் , வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து , யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம். நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.

***************     **************    ***********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    **********

Post a Comment

0 Comments