பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 2 , இயற்கை
மொழியோடு விளையாடு
பாடப்பகுதி வினா & விடை
************** ************ ************
சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.
( காடு , புதுமை , விண்மீன் , காற்று , நறுமணம் )
1 ) முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும் ; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.
விடை : நறுமணம்
2 ) பழமைக்கு எதிரானது - எழுதுகோலில் பயன்படும்.
விடை : புதுமை.
3 ) இருக்கும்போது உருவமில்லை - இல்லாமல் உயிரினம் இல்லை.
விடை : காற்று.
4 ) நாலெழுத்தில் கண் சிமிட்டும் - கடையிரண்டில் நீந்திச் செல்லும்.
விடை : விண்மீன்.
5 ) ஓரெழுத்தில் சோலை - இரண்டெழுத்தில் வனம்.
விடை : காடு.
**************** ************* ***********
நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.
(வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு)
1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.
விடை : காற்றின் பாடல்.
2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
விடை : மொட்டின் வருகை.
3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.
விடை : மிதக்கும் வாசம்.
4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்: மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.
விடை : உயிர்ப்பின் ஏக்கம்.
5. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும்மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.
விடை : நீரின் சிலிர்ப்பு.
6. குயில்களின் கூவலிசை, புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும் இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்.
விடை : வானத்தின் நடனம்.
************** ************** ***********
அகராதியில் காண்க
1. அகன்சுடர் - ஞாயிறு
2. ஆர்கலி - கடல்
3. கட்புள்- ஒரு கண் பார்வையுடைய காகம்
4. கொடுவாய் - வளைந்த வாய்
5 . திருவில் - வானவில்
*********** *************** *************
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
மரமே !
இயற்கை தந்த வரமே !
உன் அருமை தெரியாமல்
பலம் கொண்டமட்டும்
வெட்டி வீழ்த்தினோம் !
இப்போது நாங்கள் பலவீனமானபின்
உன்னைக் குடுவையில் அடைத்து
சுவாசித்து வாழ்கிறோம்.
மரம் நடச்சொன்னபோதெல்லாம்
உன் மகத்துவம் அறியாத
எங்கள் மனம்
இப்போதுதான் விழித்திருக்கிறது.
இனி ,
மரங்களுடன் கரம் கோர்த்து ,
இருக்கும் மரங்களைக் காத்து
சுத்தமான காற்றைப் பெற்று
சுகமாய் வாழ்வோம் !
உருளைக்குள் மட்டுமல்ல ...
உலகெங்கும் இனி நீ உலவு.
மு.மகேந்திர பாபு.
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments