ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி 29 - இணைப் பறவைகள் அழகாக வரைவது எப்படி ? குழந்தைகளின் ஓவியத்திறமையை ஊக்குவிப்போம் !

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 29

இணைப்பறவைகள் அழகாக வரையலாம் வாங்க !

வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.


************     ***********    *************

          வணக்கம் செல்லக் குழந்தைகளே ! ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதியில் இன்று நாம் வரைய உள்ள ஓவியம் பறவைகள்.

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் அப்படினு பாடல் வரி உண்டு. ஆம் ! இந்தப் பூமிப் பந்து அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. பறக்கும் பறவை போல நாமும் பறக்க முடியுமா என்ற சிந்தனையில் விளைந்ததுதான் விமானம். அப்படியானால் விமானம் கண்டுபிடிப்பதற்கு உந்து சக்தியாக இருந்தது பறவைதானே !

                 காலையில் எழுந்து நாம் எப்படி வேலைக்குச் செல்கிறோமோ அது போலவே பறவைகளும் உணவைத்தேடி கூட்டிலிருந்து புறப்பட்டு,மாலை நாம் வீடடடைவதைப்போல பறவைகள் தங்கள் கூடடைகின்றன.

               இன்று பல வண்ணங்களில் நம் வீட்டிலேயே இணைப்பறவைகளை வளர்த்து வருகிறோம். அதற்கு ஒரு பெயருமிட்டு அழைத்து மகிழ்கிறோம். பறவைகளின் கீச் கீச் ஒலி கேட்கக் கேட்க ஆனந்தம். அப்படிப்பட்ட அழகிய இணைப்பறவையை நமக்கு இன்று வரைவதற்காக வழங்கியுள்ளார் நம் ஓவிய ஆசிரியை அவர்கள். வாங்க வரையலாம்.

படம் : 1




படம் : 2




படம் : 3



படம் : 4




இயற்கை அழகில் இணைப்பறவை



வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************    ***********    ***********

வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* *********

Post a Comment

0 Comments